ஆசிப் அலி (துடுப்பாட்டக்காரர்)

ஆசிப் அலி (Asif Ali (பிறப்பு: அக்டோபர் 1, 1991) பாக்கித்தான் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் பாக்கித்தான் அணிக்காக, பன்னாட்டு இருபது20, ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். வலதுகை மட்டையாளரான இவர் வலதுகை மித வேகப் பந்து வீச்சாளர் ஆவார். இவர் பைசாலாபாத் அணிக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார். மேலும் பாக்கித்தான் சூப்பர் லீக் தொடர்களில் இஸ்லாமாபாத் யுனைட்டட் அணிக்காக விளையாடி வருகிறார்[1].ஆகஸ்டு 2018 இல் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் இவர் உட்பட முப்பத்து மூன்று வீரர்களுக்கு 2018-19 ஆம் ஆண்டிற்கான மத்திய ஒப்பந்த விருதினை வழங்கியது.[2][3] போகரா ரைனோஸ், ஃபைசாலாபாத், பஞ்சாப் (பாக்கிஸ்தான்) துடுப்பாட்ட அணி ,எட்மண்ட் ராயல்ஸ் அணி ,கேப் டவுன் பிளிட்ஸ் அணி ஆகிய அணிகளுக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

உள்ளூர்ப் போட்டிகள்

தொகு

2017-18 ஆம் ஆண்டிற்கான குவைத்-இ-அசாம் கோப்பைக்கான தொடரில் இவர் ஃபைசாலாபாத் அணிக்காக விளையாடினார். இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி ஆறு போட்டிகளில் 369 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் அந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பெற்றார்.[4] மேலும் இவர் 2017 ஆம் ஆண்டில் எவெரெஸ்ட் பிரீமியர் லீக் தொடரில் போகரா ரைனோஸ் அணிக்காக விளையாடினார்.

2018 ஆம் ஆண்டிற்கான பாக்கித்தான் கோப்பைக்கான தொடரில் இவர் பஞ்சாப் (பாக்கிஸ்தான்) அணிக்காக விளையாடினார்.இந்தத் தொடரில் நான்கு போட்டிகளில் விளையாடி 328ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த பஞ்சாப் வீரர்கள் வரிசையில் முதலிடம் பெற்றார்.[5][6][7]

2018 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட குளோபல் இருபது20 கனடா கோப்பைத் தொடரில் இவர் எட்மண்ட் ராயல்ஸ் அணி சார்பாக விளையாடினார்.[8][9]

மேலும் அதே ஆண்டில் நடைபெற்ற மசான்சி சூப்பர் லீக் இருபது20 தொடரில் இவர் கேப் டவுன் பிளிட்ஸ் அணி சார்பாக விளையாடினார்.[10][11]

சர்வதேச போட்டிகள்

தொகு

இருபது20

தொகு

2018 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. ஏப்ரல் 1 இல் கராச்சியில் நடைபெற்ற முதல் பன்னாட்டு இருபது20 போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் மட்டையாட்டத்தில் 2 பந்துகளைச் சந்தித்த இவர் 1 ஓட்டங்கள் எடுத்து பால் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 143 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[12][13]

அதே ஆண்டில் நியூசிலாந்துத் துடுப்பாட்ட அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது.நவபர் 4 இல் அபுதாபியில் நடைபெற்ற மூன்றாவது பன்னாட்டு இருபது20 போட்டியின் மட்டையாட்டத்தில் 3 பந்துகளைச் சந்தித்த இவர் 2 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஒருநாள் போட்டிகள்

தொகு

2018 இல் பாக்கித்தான் துடுப்பாட்ட அணி சிம்பாப்வேயில் சுற்றுப் பயணம் மேற்கொண்டது. சூலை 13 இல் புலுவாயோவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியின் மட்டையாட்டத்தில் 25 பந்துகளைச் சந்தித்த இவர் 46 ஓட்டங்கள் எடுத்து சதாரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 201 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.[14]

சான்றுகள்

தொகு
  1. "Asif Ali". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 February 2016.
  2. "PCB Central Contracts 2018–19". Pakistan Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 6 August 2018.
  3. "New central contracts guarantee earnings boost for Pakistan players". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 August 2018.
  4. "Quaid-e-Azam Trophy, 2017/18: Faisalabad Batting and bowling averages". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 8 April 2018.
  5. "Pakistan Cup 2018, Punjab: Batting and bowling averages". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 May 2018.
  6. "Pakistan Cup one-day tournament to begin in Faisalabad next week". Geo TV. பார்க்கப்பட்ட நாள் 21 April 2018.
  7. "Pakistan Cup Cricket from 25th". The News International. பார்க்கப்பட்ட நாள் 21 April 2018.
  8. "Global T20 Canada: Complete Squads". SportsKeeda. பார்க்கப்பட்ட நாள் 4 June 2018.
  9. "Global T20 Canada League – Full Squads announced". CricTracker. பார்க்கப்பட்ட நாள் 4 June 2018.
  10. "Mzansi Super League - full squad lists". Sport24. Archived from the original on 23 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 17 October 2018. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. "Mzansi Super League Player Draft: The story so far". Independent Online. பார்க்கப்பட்ட நாள் 17 October 2018.
  12. "Asif Ali, Talat and Shaheen Afridi picked for WI T20Is". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 26 March 2018.
  13. "1st T20I, West Indies tour of Pakistan at Karachi, Apr 1 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 1 April 2018.
  14. "1st ODI, Pakistan Tour of Zimbabwe at Bulawayo, Jul 13 2018". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 13 July 2018.