ஆசிப் மொகியுதீன்

ஆசிப் மொகியுதீன்( Asif Mohiuddin (பிறப்பு: பிப்ரவரி 24 1984) ஒரு வங்காளதேச இறைமறுப்பாளர் மற்றும் சமய சார்பின்மை ஆர்வலர், மத விமர்சகர் மற்றும் பெண்ணியவாதி ஆவார் . 2012 ஆம் ஆண்டில் டாய்ச் வெல்லேவின் தி பாப்ஸ்-பெஸ்ட் ஆஃப் ஆன்லைன் ஆக்டிவிசம் விருதை இவர் வென்றார். ஆசிப்பின் வலைப்பதிவு வங்காளதேசத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட வலைப்பக்கங்களில் ஒன்றாகும். மேலும் வங்காளதேசத்தின் -மக்கள் விரோத அரசியலையும் மத அடிப்படைவாதத்தையும் இவர் கடுமையாக விமர்சித்ததன் மூலம் இவர் பரவலாக அறியப்படுகிறார் . 15 ஜனவரி 2013 அன்று இவர் இஸ்லாமிய தீவிரவாதிகளின் படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார்.[1] சில மாதங்களுக்குப் பிறகு இஸ்லாம் மற்றும் முகமது பற்றி மோசமான கருத்துக்களை வெளியிட்டதற்காக வங்காளதேச அரசாங்கத்தால் இரண்டு முறை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.[2] ஆனால் இவரை கைது செய்ததற்கு தொடர்ச்சியான சர்வதேச அழுத்தம் காரணமாக மொகியுதீன் விடுவிக்கப்பட்டார். அதன் பிறகு இவர் 2014 ஆம் ஆண்டில் தனது நாட்டிலிருந்து ஜெர்மனிக்கு தப்பி ஓடினார். 2015 ஆம் ஆண்டில் பத்திரிகைக்கான அண்ணா பலிட்கோவ்ஸ்கயா விருதைப் பெற்றார்.  

சுயசரிதைதொகு

இவர் தக்காவில் உள்ள முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தார். இவர் ஓர் நடுததர வர்க்க குடும்பத்தினைச் சேர்ந்தவர் ஆவார். இவரின் தந்தை அரசு ஊழியராக இருந்தார்.[3] இவர் தான் பள்ளி மற்றும் மசூதிகளில் பல அபத்தமான விசயங்களைக் கற்றுக் கொண்டதாகக் கூறியுள்ளார். அதாவது நல்லது செய்தால் சொர்க்கம் போக இயலும் அல்லது தீயது செய்தால் நரகத்திற்குப் போக வேண்டியதிருக்கும் போன்ற அபத்தமான விசயங்களைக் கற்றுக் கொண்டதாக இவர் கூறினார். தனது பெற்றோரிடம் மதம் தொடர்பான அதிகமான கேள்விகளை எழுப்பினார். அது அவர்களுக்கு வருதத்தினை அளித்தது. மேலும் ஆசிரியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு இவர் வித்தியாசமான பதில்களைக் கூறியதனால் இவர் அவர்களால் பலமுறை தாக்கப்பட்டுளார்.[4] தனது 13 ஆம் வயதில் இவர் தன்னை இறைமறுப்பாளராக சுயாதீனமாக அறிவித்துக்கொண்டார்.

மொகியுதீன் தனது 16 ஆம் வயது முதல் அறிவியலைப் பற்றி படிக்கத் தொடங்கினார். இஸ்லாமியத்தின் கருத்த்துக்கள் விஞ்ஞானப் பூர்வமற்றதாகக் கருதப்படும் செய்திகளை இவர் கேள்வி எழுப்பத் துவங்கினார்.[3] குர்ஆனில் விவரிக்கப்பட்டுள்ள அற்புதங்களை நவீன அறிவியலுடன் ஒப்பிடவும் விஞ்ஞான முறையில் பகுத்தறிவு செய்து விளக்கவும் முயன்ற பெங்காலி இதழில் வெளியான ஓர் அறிவியல் கட்டுரையைப் படித்தார். அதில் இருந்து இவருக்கு இந்த ஆர்வம் தொடங்கியது. முஹம்மது நபி குதிரையில் சொர்க்கத்திற்கு பறந்தது விஞ்ஞான ரீதியாக சாத்தியமற்றது என்று கூறி மொகியுதீன் ஒரு கட்டுரை எழுதினார். இதன்மூலம் இவர் சுதந்திர சிந்தனையாளர் மற்றும் மதத்தை விமர்சிப்பவர் என்பவராக இவர் அறியப்பட்டார். இதன் மூலம் சக இறைமறுப்பாளர்கள் கொண்ட வலைத்தள குழுவினருடன் இணைவதற்கு இது காரணியாக அமைந்தது.[4]

தாக்கம்தொகு

இவர் வங்காளதேசத்தின் -மக்கள் விரோத அரசியலையும் மத அடிப்படைவாதத்தையும் இவர் கடுமையாக விமர்சித்ததன் மூலம் இவர் பரவலாக அறியப்படுகிறார் . 15 ஜனவரி 2013 அன்று இவர் இஸ்லாமிய தீவிரவாதிகளின் படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார். சில மாதங்களுக்குப் பிறகு இஸ்லாம் மற்றும் முகமது பற்றி மோசமான கருத்துக்களை வெளியிட்டதற்காக வங்காளதேச அரசாங்கத்தால் இரண்டு முறை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இவர் 2014 ஆம் ஆண்டில் தனது நாட்டிலிருந்து ஜெர்மனிக்கு தப்பி ஓடினார்.

குறிப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிப்_மொகியுதீன்&oldid=2868289" இருந்து மீள்விக்கப்பட்டது