ஆசியக் கிண்ணம் 1986
1986 ஆசியக் கிண்ணம் (1986 Asia Cup) இரண்டாவது ஆசியக் கிண்ண துடுப்பாட்டப் போட்டித் தொடராகும். இத்தொடர் ஜோன் பிளேயர் கோல்ட் லீஃப் கேடயம் எனவும் அழைக்கப்படுகிறது. இலங்கையில் 1986 ஆம் ஆண்டில் மார்ச் 30 முதல் ஏப்ரல் 6 வரை இடம்பெற்ற இத்தொடரில் வங்காள தேசம், பாகிஸ்தான், மற்றும் இலங்கை ஆகிய அணிகள் பங்கு பற்றின. இலங்கை இனப்பிரச்சினையைக் காரணம் காட்டி இந்திய அணி இத்தொடரில் பங்குபற்றவில்லை.
நிர்வாகி(கள்) | ஆசியத் துடுப்பாட்ட வாரியம் |
---|---|
துடுப்பாட்ட வடிவம் | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் |
போட்டித் தொடர் வடிவம் | ரொபின் வட்டச் சுற்று |
நடத்துனர்(கள்) | இலங்கை |
வாகையாளர் | இலங்கை (1வது-ஆம் தடவை) |
மொத்த பங்கேற்பாளர்கள் | 3 |
மொத்த போட்டிகள் | 4 |
தொடர் நாயகன் | அர்ஜுன றணதுங்க |
அதிக ஓட்டங்கள் | ? |
அதிக வீழ்த்தல்கள் | ? |
இத்தொடரின் போட்டிகள் ரொபின் வட்டச் சுற்று முறையில் இடம்பெற்றன. ஒவ்வொரு அணியும் ஒரு முறை மற்றைய இரு அணிகளுடனும் மோதின. அதிக புள்ளிகளைப் பெற்ற பாகிஸ்தான் அணி இரண்டாம் இடத்தில் வந்த இலங்கை அணியுடன் இறுதிப் போட்டியில் மோதியது. இலங்கை அணி வெற்றி பெற்று ஆசியக் கிண்ணத்தை முதற் தடவையாகப் பெற்றுக் கொண்டது.
ஆரம்பப் போட்டிகள்
தொகுஎ
|
||
எ
|
||
எ
|
||
இறுதிப் போட்டி
தொகுஎ
|
||
மேற்கோள்கள்
தொகு- Cricket Archive: John Player Gold Leaf Trophy (Asia Cup) 1985/86 [1] பரணிடப்பட்டது 2015-09-24 at the வந்தவழி இயந்திரம்
- WisdenAlmanack: John Player Gold Leaf Trophy (Asia Cup) [2]
- Sri Lanka vs Pakistan scorecard
- Bangladesh vs Pakistan scorecard
- Sri Lanka vs Bangladesh scorecard
- Sri Lanka vs Pakistan Final scorecard