ஆசியச் சின்ன முள் சுண்டெலி
ஆசியச் சின்ன முள் சுண்டெலி | |
---|---|
பிராகுவே விலங்குக் காட்சிசாலையில் | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | அகோமிசு எல்லெர்மான், 1947
|
இனம்: | அ. சிலிக்கசு[2]
|
இருசொற் பெயரீடு | |
அகோமிசு சிலிக்கசு இசுபிட்சென்பெர்கர், 1978 |
ஆசியச் சின்ன முள் சுண்டெலி (Asia Minor spiny mouse)(அகோமிசு சிலிக்கசு) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிணி சிற்றினமாகும்.
விளக்கம்
தொகுஅகோமிசு சிலிக்கசு குறுகிய நிலப்பரப்பில் வாழும் சமூக கொறித்துண்ணி. இவை பெரிய குழுக்களாக வாழ்கிறது. தலை மற்றும் உடல் நீளம் 104–121 mm (4.1–4.8 அங்) வரையும் வாலின் நீளம் 102–117 mm (4.0–4.6 அங்) வரையும் வளரக்கூடியது. இதன் உடல் எடை 48 கிராம் வரை இருக்கும்.[3]
உடலின் மேல் பக்கம் அடர் சாம்பல் நிறமாகவும், ஊதா நிற பிரதிபலிப்புகளுடன் காணப்படும். உடலின் கீழ்ப்பகுதி மஞ்சள்-வெள்ளை நிறத்துடன் பக்கவாட்டுப்பகுதி வெளிர் பழுப்பு நிறத்திலிருக்கும். வால் முடியற்றது, செதில்களுடன் கூடியது, தலை மற்றும் உடலை விடக் குறுகியது. இதன் மரபணு நிறப்புரி எண்ணிக்கை 2n = 36.
கொல்லைப்படுத்தப்பட்ட நிலையில், இந்த எலிகள் இனப்பெருக்கம் செய்து சுமார் நான்கு ஆண்டுகள் வாழ்கின்றன. இந்த சிற்றினம் முன்னர் அழிந்து வரும் நிலையில் இருப்பதாகக் கருதப்பட்டதால், இதைப் பாதுகாக்கத் திட்டம் ஒன்று நடைமுறையில் உள்ளது. துருக்கியிலிருந்து இந்த சுண்டெலியினை ஏற்றுமதி செய்வதற்கு அரசாங்க அனுமதி தேவை. உலகில் உள்ள சில உயிரியல் பூங்காக்களில் மட்டுமே இந்த இனத்தைச் சேர்ந்த எலிகள் காணப்படுகின்றன (செஸ்டர், ரிகா, ப்ராக், தாலின் மற்றும் ஹெல்சின்கி மிருகக்காட்சிசாலை).
இந்த சிற்றினம் கெய்ரோ முள் சுண்டெலி (அகோமைசு காகிரினியசு) மற்றும் சைப்ரசு முள் சுண்டெலி (அகோமைசு நேசியோடிசு) ஆகியவற்றுடன் தொடர்புடையது, ஆனால் குறிப்பிடத்தக்க உருவ வேறுபாடுகள் காணப்படுகின்றன.
பரவல்
தொகுஆசியச் சின்ன முள் சுண்டெலி சிற்றினம் துருக்கியில் மட்டுமே காணப்டுகிறது. இது துருக்கியின் தெற்கு கடற்கரையில் மெர்சினின் தென்மேற்கில் அமைந்துள்ள துருக்கிய நகரமான சிலிப்கேக்கு கிழக்கே 17 கி.மீ. தொலைவில் உள்ள பகுதியில் மட்டுமே காணப்படுகிறது.
வாழ்விடம்
தொகுஆசியச் சின்ன முள் சுண்டெலியின் இயற்கை வாழ்விடம் மிதமான காடுகள்; ஆனால் இந்த சிற்றினம் மனித குடியிருப்புகளுக்கு அருகிலும் வாழ்கிறது.
பாதுகாப்பு நிலை
தொகுஅ. சிலிகசு முன்பு மிக அருகிய இனமாகப் பட்டியலிடப்பட்டது, ஆனால் இப்போது வகைப்பாட்டியல் சிக்கல்கள் காரணமாக தரவு போதாது சிற்றினமாகக் கருதப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Gerrie, R.; Kennerley, R. (2019). "Acomys cilicicus". IUCN Red List of Threatened Species 2019: e.T264A22453458. doi:10.2305/IUCN.UK.2019-1.RLTS.T264A22453458.en. https://www.iucnredlist.org/species/264/22453458. பார்த்த நாள்: 17 November 2021.
- ↑ Wilson, D. E., and Reeder, D. M., ed. (2005). Mammal Species of the World (3rd ed.). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4.
{{cite book}}
: CS1 maint: multiple names: editors list (link) - ↑ Stephan Aulagnier & Al. - Guide des mammiferes d'Europe, d'Afrique du Nord et du Moyen-Orient - Delachaux & Niestlé SA, Paris
வெளி இணைப்புகள்
தொகு- உலகின் பாலூட்டி இனங்கள்
- asia-minor-spiny-mouse/acomys-cilicicus Asia Minor spiny mouse (Acomys cilicicus) </img>