ஆசியா-சப்பான் மகளிர் வள மையம்
ஆசியா-சப்பான் மகளிர் வள மையம் (Asia-Japan Women's Resource Center) என்பது 1994-ல் நிறுவப்பட்ட ஒரு அரசு சாரா அமைப்பாகும். இது பாலின சமத்துவம், பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு முடிவு, மிகவும் நியாயமான சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் நிலையான வளர்ச்சி ஆகிய கொள்கைகளை ஆதரிக்கிறது.
உருவாக்கம் | திசம்பர் 1994, சப்பானில் யாயோரி மத்சுயி |
---|---|
வகை | அரசு சாரா இலாப நோக்கமற்ற நிறுவனம் |
தலைமையகம் |
|
சேவைகள் | கல்வி, ஆலோசனை |
துறைகள் | மகளிர் உரிமை, சுற்றுச்சூழல் பிரச்சனைகள், சமூக நீதி |
வலைத்தளம் | www |
ஆசியா-சப்பான் மகளிர் வள மையம் பெண்களுக்கான அதிகாரமளிக்கும் கருத்தரங்குகள் மற்றும் ஆய்வுக் குழுக்கள், பயிற்சி மற்றும் பட்டறைகள் போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது. மேலும் இவர்கள் தங்கள் பணியை மேம்படுத்தும் வகையில் ஆராய்ச்சி மற்றும் பரப்புரைகளை நடத்துகின்றனர்.[1] சப்பானியப் பெண்களிடையே உலகளாவிய மற்றும் உள்நாட்டுப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நடவடிக்கைகள் உதவுகின்றன. சப்பான் ஆசியப் பொருளாதாரம் மற்றும் பன்னாட்டு அரசியலில் முன்னணி நாடாக இருப்பதால், மேம்பட்ட மனித உரிமைகளுக்காக வாதிடுவதில் சப்பானியப் பெண்கள் முன்னிலை வகிப்பதை ஊக்குவிக்க வேண்டிய கடமை உள்ளதாக இந்த அமைப்பு உணர்கிறது. கூடுதலாக, ஆசியாவில் அதிக எண்ணிக்கையிலான எல்லை தாண்டிய மனித கடத்தகையில் பாதிக்கப்பட்டவர்களின் இலக்காகச் சப்பான் உள்ளது. இது ஆசியா-சப்பான் மகளிர் வள மையத்தின் பணிக்கு மேலும் உந்துதலாக உள்ளது.[2]
கடந்த நூற்றாண்டில் பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் பாலினங்களுக்கு இடையிலான வேறுபாடு குறைந்து வருகிறது. ஆனால் சப்பான் இந்த போக்கில் பின்தங்கியுள்ளது என்று ஆசியா-சப்பான் மகளிர் வள மையம் கூறுகிறது. உதாரணமாக, சப்பானின் சட்டமன்ற அமைப்பான சப்பானிய நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 10% மட்டுமே ஆகும். மேலும் பெண்கள் தொழிலாளர்கள் ஆண்களின் சம்பளத்தில் 60% மட்டுமே சம்பாதிக்கிறார்கள்.
பாலின சமத்துவமின்மை இன்னும் கடுமையாக இருந்தபோது, 1977-ல் நிறுவப்பட்ட ஆசியப் பெண்கள் சங்கத்திலிருந்து ஆசிய-சப்பான் மகளிர் வள மையம் வளர்ந்தது. 1985ஆம் ஆண்டு வரை , சப்பானிய அரசாங்கம்[3] பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் அகற்றுவதற்கான ஒரு உடன்படிக்கைக்கு ஒப்புதல் அளித்தது.[4] பெண்களின் நிலை, மற்றும் பாலின இடைவெளியின் அடிப்படையில் தொழில்மயமான உலகின் மிகக் குறைந்த சமமான நாடுகளில் சப்பானும் ஒன்றாகும்.[5]
ஆசியா-சப்பான் மகளிர் வள மையம் ஆரம்பத்தில் பாலியல் வர்த்தகத்தை எதிர்ப்பதில் கவனம் செலுத்தியது. ஆனால் இவர்களின் செல்வாக்கு வளர்ந்தவுடன், இவர்கள் நாட்டில் பெண்களின் பிரச்சினைகளை இன்னும் பரந்த அளவில் கையாள்வதற்கான தங்கள் எல்கையினை விரிவுபடுத்தினர். இறுதியில் ஆசியா-சப்பான் மகளிர் வள மையம் உருவாகியது. குழுவின் வலைத்தளத்தின்படி, இவர்கள் "பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறை மற்றும் பாகுபாடுகளையும் முடிவுக்குக் கொண்டுவரவும், மனித உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட மக்களாட்சியுடன் கூடிய சப்பானிய சமுதாயத்தை நோக்கி, மற்றும் ஒரு நியாயமான மற்றும் நிலையான உலகளாவிய சமூகத்தை நோக்கி" கடமையாற்றுகின்றனர்.[6] [7]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ HumanTrafficking.org organization overview பரணிடப்பட்டது மார்ச்சு 23, 2013 at the வந்தவழி இயந்திரம்
- ↑ AWORC member profile
- ↑ Yuji Iwasawa. International Law, Human Rights, and Japanese Law. Page 234.
- ↑ Yuji Iwasawa. International Law, Human Rights, and Japanese Law. Page 206.
- ↑ WEF Gender Gap Report. 2011.
- ↑ "AJWRC Mission Statement". Archived from the original on 2021-04-22. பார்க்கப்பட்ட நாள் 2023-02-18.
- ↑ Jessica Ocheltree, Asia-Japan Women’s Resource Center, Metropolis, 9 Dec 2011