ஆடுதுறை - 14 (நெல்)

ஏ டி டீ - 14 (ADT 14) வட்டார வழக்கு வெள்ளை கார் (Vellaikar) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]

ஆடுதுறை - 14
ADT 14
வேளாண் பெயர்
வெள்ளை கார்
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
நல் விதைத் தேர்வு முறை
வகை
புதிய நெல் வகை
காலம்
110 - 115 நாட்கள்
மகசூல்
4500 கிலோ எக்டேர்
வெளியீடு
1937
வெளியீட்டு நிறுவனம்
TRRI (TNAU), ஆடுதுறை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

வெளியீடு

தொகு

தமிழக தஞ்சை மாவட்டத்தின், ஆடுதுறையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI),[2] 1937 ஆம் ஆண்டு, இவ்வகை நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]

காலம்

தொகு

குறுகியகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 110 - 115 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது. இதுபோன்ற குறைந்த கால நெற்பயிர்கள், கார் மற்றும் குறுவை போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[2]

சாகுபடி

தொகு

ஒரு எக்டேருக்கு சுமார் 4500 கிலோவரை மகசூல் தரக்கூடிய இந்த நெற்பயிர்கள்,[1] நீர்ப்பாசன வசதியுள்ள, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், மற்றும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் பரவலாக சாகுபடி செய்ய உகந்தப் பகுதியாக பரிந்துரைக்கப்படுகிறது.[2]

இவற்றையும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்)-CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-13.
  2. 2.0 2.1 2.2 "Rice Knowledge Management Portal ADT 14". www.rkmp.co.in (ஆங்கிலம்) - 2011. Archived from the original on 2019-04-24. பார்க்கப்பட்ட நாள் 2019-04-23. {{cite web}}: Unknown parameter |dead-url= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆடுதுறை_-_14_(நெல்)&oldid=3715229" இலிருந்து மீள்விக்கப்பட்டது