ஆடுதுறை - 17 (நெல்)
ஏ டி டீ - 17 (ADT 17) (வட்டார வழக்கு கோனை குறுவை (Konakuruvai) என்றழைக்கப்படும் இந்த நெல் வகை, நல் விதைத் தேர்வு (Pureline) முறையில் உருவாக்கப்பட்ட தமிழ்நாட்டின் நெல் வகையாகும்.[1]
ஆடுதுறை - 17 ADT 17 |
---|
வேளாண் பெயர் |
கோனை குறுவை |
பேரினம் |
ஒரய்சா |
இனம் |
ஒரய்சா சாட்டிவா |
கலப்பினம் |
நல் விதைத் தேர்வு முறை |
வகை |
புதிய நெல் வகை |
காலம் |
160 - 165 நாட்கள் |
மகசூல் |
4200 கிலோ எக்டேர் |
வெளியீடு |
1938 |
வெளியீட்டு நிறுவனம் |
TRRI (TNAU), ஆடுதுறை |
மாநிலம் |
தமிழ் நாடு |
நாடு |
இந்தியா |
வெளியீடு
தொகுதமிழக தஞ்சை மாவட்டத்தின், ஆடுதுறையில் அமைந்துள்ள தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் (TRRI),[2] 1938 ஆம் ஆண்டு, இந்த நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[1]
காலம்
தொகுநீண்டகால நெற்பயிர்களில் ஒன்றான இது, 165 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியதாக கருதப்படுகிறது. இதுபோன்ற நெடுங்கால நெற்பயிர்கள், சம்பா மற்றும் தாளடி போன்ற பட்டங்கள் (பருவங்கள்) ஏற்றதாக கூறப்படுகிறது.[1]
சாகுபடி
தொகுநீர்ப்பாசன வசதியுள்ள தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சாகுபடி செய்ய ஏற்றதும், நீர்மூழ்கிக் குலைவை தாங்கி வளரும் தன்மையுடையதுமான இந்த நெல் வகை, புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் சாகுபடி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.[2]
குறிப்புகள்
தொகுஇதன் தானியமணிகள் தடித்து குட்டையாக உள்ளது. இந்நேல்லின் அரிசி, வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது.[1]
இவற்றையும் காண்க
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "Centre for Plant Breeding and Genetics (CPBG)". tnau.ac.in (ஆங்கிலம்) - CPBG, TNAU and maintained by Dr. N.Manivannan 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-08-13.
- ↑ 2.0 2.1 "Rice Knowledge Management Portal ADT 17". www.rkmp.co.in (தமிழ்) - 2011. Archived from the original on 2019-04-30. பார்க்கப்பட்ட நாள் 2019-04-30.
{{cite web}}
: Unknown parameter|dead-url=
ignored (help)