சம்பா (நெல் பருவம்)
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி சம்பா சாகுபடி கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
குளிர் காலமான சம்பா பருவம் (Samba Season) வேளாண் வழக்கு சம்பா பட்டம் என்பது; தென்னிந்திய மாநிலங்களான தமிழ் நாடு மற்றும் பாண்டிச்சேரி விவசாய நிலங்களில், நெல் விதைப்பு, அல்லது நடவு தொடங்கும் காலத்தையும், மற்றும் சாகுபடி கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும். சூலை - ஆகத்து (தமிழ்: ஆடி - ஆவணி) மாதங்களில் துவங்கும் இப்பருவம், டிசம்பர் - சனவரி (தமிழ்: மார்கழி - தை) மாதங்களில் முடிவடைகிறது.[1]
130 – 135 மற்றும் >150 நாட்களைக் கொண்ட இந்த சம்பா பருவம், மத்தியகாலம், மற்றும் நீண்டகால நெல் வகைகளை சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும்.
பருவ அட்டவணை
தொகுவிதைக்கும் மாதம் | கால அளவு (நாட்கள்) | தகுந்த இரகங்கள் | பயிரிடும் இடங்கள் |
---|---|---|---|
சூலை - ஆகத்து | 130 – 135 மற்றும் >150 | மத்தியகாலம், மற்றும் நீண்டகாலம் | தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள்.[2] |
- சம்பா பருவத்தில் தமிழகத்தின் மாவட்ட வாரியாக பயிரிடப்படும் நெல் இரகங்கள்.[3]
இவற்றையும் காண்க
தொகு- வேளாண்மை
- இந்தியாவில் வேளாண்மை
- சம்பா சாகுபடி
- சம்பா அரிசி
- சம்பா மகாபாரதத்தின் ஒரு கதைமாந்தர்
- சம்பா மாவட்டம் இமாச்சலப் பிரதேசம்
- தமிழர் பருவ காலங்கள்