சம்பா சாகுபடி
சம்பா பருவம் அல்லது ஆடிப்பட்டம், அல்லது மானாவாரி சாகுபடி (Kharif crops) என்பவை சூன் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் மழைக்காலத்தின் போது தெற்காசியாவில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படும் தாவரங்களை பயிர்செய்யும் காலம் ஆகும்.
சம்பா பயிர்
தொகுசம்பா பயிர்கள் பொதுவாக தென்மேற்கு பருவக்காற்று பருவத்தில், ஆடி மாதம் முதல் மழைக்காலத்தின் தொடக்கத்தில் விதைக்கப்படுகின்றன. இந்தியாவில் சம்பா பருவ பயிரிடும் காலம் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடுகிறது. சம்பா பயிர் காலம் மே மாததத் துவக்கத்தில் துவங்கி, ஜனவரி மாத முடிவில் முடிவடைவதாக கூறப்பட்டாலும், பொதுவாக சூன் மாதம் தொடங்கி, அக்டோபர் மாதம் முடிவடைவதாக கருதப்படுகிறது. [1] உலர் பருவத்தில் பயிரிடப்படும் குறுவை சாகுபடிக்கு மாறாக சம்பா சாகுபடி பருவம் உள்ளது. இந்த சாகுபடி காலங்களை குறிப்பிடும் சொற்கலான கரீஃப் மற்றும் ராபி ஆகியவை இந்திய துணைக்கண்டத்துக்கு முகலாயர்களின் வந்தபோது வந்து அவை பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கரிஃப் என்றால் அரபு மொழியில் "இலையுதிர்" என்று பொருள். இந்த கால கட்டமானது இந்தியத் துணை கண்டத்தில் இலையுதிர்கால / குளிர்காலத்தின் தொடக்கத்தோடு இணைந்திருப்பதால், அது "கரிஃப் காலம்" என்று அழைக்கப்படுகிறது.
சம்பா பயிர்கள் தென்மேற்கு பருவமழை காலத்தின் போது தென்னிந்திய மாநிலமான கேரளத்தில் மே மாத இறுதியில் முதல் மழைகளின் துவக்கத்தில் பொதுவாக விதைக்கப்படுகின்றன. வட இந்தியாவின் பருவ மழைக் காலத்தில் மாறுபடுவதால், வட இந்திய மாநிலங்களில் சூலை வரையும் விதைக்கப்படுகிறது.
இந்த மானாவரி பயிர்களானது மழைநீர் அளவையும், அந்த மழை பெய்யும் காலத்தையும் நம்பியுள்ளன. மிகக் குறைந்த மழை அல்லது அளவுக்கு அதிகமான மழையளவு அல்லது காலம் தவறிய மழை போன்றவை விவசாயிகளில் முழு ஆண்டு முயற்சியையும் வீணாக்கும் வாய்ப்பு உள்ளது.
பொதுவான சம்பா பயிர்கள்
தொகு- சோளம்
- நெல்
- சிறுதானியம்
- மக்காச்சோளம்
- சோயா அவரை
- மஞ்சள்
- வேற்கடலை
- பருத்தி
- கரும்பு
- பாகல்
- ஆளி
- பாசிப் பயறு)
- துவரை
- உளுந்து
- காராமணி