குறுவை சாகுபடி

முப்போகங்களில் ஒன்று

குறுவை பயிர்கள் அல்லது ராபி பயிர்கள் (Rabi crops அல்லது Rabi harvest) என்பது தெற்காசியாவில் குளிர் காலத்தில் துவங்கி இலையுதிர் காலத்தில் அறுவடை செய்யப்படும் பயிர்களைக் குறிப்பிடுவது ஆகும்.[1] இந்தியத் துணைக்கண்டத்தில் இந்த பயிர் பருவத்தைக் குறிப்பிடும் ராபி என்னும் சொல் அரபி மொழியில்இருந்து வந்தது. ராபி என்றால் அரபு மொழியில் "இளவேனிற்காலம்" என்பதாகும். இந்தச் சொல் இந்திய துணைக்கண்டத்தில் பயன்படுத்தப்படுகிறது, இது ("குளிர்கால பயிர்" என்றும் அழைக்கப்படுகிறது).

கோதுமை
வாற்கோதுமை

பருவ மழைகள் முடிந்தவுடன், குறுவைப் பயிர்கள் நவம்பர் மாத நடுவில் விதைக்கப்படுகின்றன, ஏப்ரல் / மே மாதத்தில் அறுவடை செய்யப்படுகின்றன. இந்தப் பயிர்கள் மழையில் ஊறிய தரையில் அல்லது நீர்ப்பாசனம் மூலம் வளர்க்கப்படுகின்றன. குளிர்காலத்தில் பெய்யும் கனமழை குறுவைப் பயிர்களை அழித்துவிடும் ஆனால் அது சம்பா பயிர்களுக்கு நல்லது.

இந்தியாவின் பிரதான குறுவை பயிர் கோதுமையைத், தொடர்ந்து வாற்கோதுமை, கடுகு, எள், பட்டாணி போன்றவை ஆகும்.

குறுவை, சம்பா ஆகிய இரு பருவங்களிலும் பல பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் விவசாய பயிர்களானது இந்த இரண்டு பருவ காலங்களில் விளைவிக்கப்படுபவையே மிகுதியானவை.[2]

பொதுவான குறுவை காலப் பயிர்கள்

தொகு
தானியங்கள்
விதைத் தாவரங்கள்
காய்கறிகள்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Balfour, Edward (1885). The Cyclopaedia of India and of Eastern and Southern Asia (3 ed.). London: Bernard Quaritch. p. 331.
  2. "Sowing time of Rabi & Kharif crop | agropedia". Archived from the original on 2013-01-05. பார்க்கப்பட்ட நாள் 2017-10-09.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=குறுவை_சாகுபடி&oldid=3550926" இலிருந்து மீள்விக்கப்பட்டது