ஆண்டர்சன் ஓடைப் பாம்பு
ஆண்டர்சன்ஓடைப் பாம்பு (Anderson's stream snake)(ஒபிசுதோடுரோபிசு ஆண்டர்சோனி), என்பது பொதுவாக ஆண்டர்சன் மலை பின்செதில் பாம்பு என அறியப்படுகிறது.[2][3] இது பாம்பு குடும்பமான கோலுபிரிடேவினைச் சார்ந்தது. இந்த பாம்புகள் ஆசியாவைப் பூர்வீகமாகக் கொண்டவை.
ஆண்டர்சன்ஓடைப் பாம்பு
Anderson's stream snake | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகெலும்பி |
வகுப்பு: | ஊர்வன |
வரிசை: | சுகொமாடா |
துணை வரிசை: | செர்பெண்டிசு |
குடும்பம்: | கொலுபிரிடே |
பேரினம்: | ஒபிசுதோடுரோபிசு |
சிற்றினம்: | ஒ. ஆண்டர்சோனி
|
இருசொற் பெயரீடு | |
ஒபிசுதோடுரோபிசு ஆண்டர்சோனி (பெளலென்சர், 1888) | |
வேறு பெயர்கள்[2] | |
|
சொற்பிறப்பியல்
தொகுசிற்றினப் பெயரான ஆண்டெர்சோனி இசுக்கொட்லாந்தினைச் சார்ந்த ஊர்வன அறிவியலாளர் ஜான் ஆண்டர்சனின் நினைவாக இடப்பட்டது.[3]
புவியியல் வரம்பு
தொகுஓ. ஆண்டர்சோனி ஹாங்காங் மற்றும் வியட்நாமில் காணப்படுகிறது.[2]
வாழ்விடம்
தொகுஓ. ஆண்டர்சோனியின் விருப்பமான இயற்கை வாழ்விடங்கள் 300–900 m (980–2,950 அடி) உயரத்தில் உள்ள காடு மற்றும் நன்னீர் ஈரநிலங்கள் ஆகும்.[1]
விளக்கம்
தொகுஓ. ஆண்டர்சோனி முதுகுபுறம் கருப்பு ஆலிவ் நிறத்திலும் வயிற்றுப்பகுதி வெண்மை நிறத்திலும், கன்னம் மற்றும் கீழ் உதடு பழுப்பு நிறமுடையது. மூஞ்சுப்பகுதி குறுகி, அகன்று, தட்டையாகக் காணப்படும். ஒரு ஒற்றை முன்னெற்றி தகட்டுடன், ஒரு இணை கன்னம் கவசங்களுடன் காணப்படும்.[4]
உடலின் முழு நீளம் முழுவதும் 17 வரிசைகளில் முதுகுபுற செதில்கள் போர்த்தப்பட்டிருக்கும். கழுத்துப் பகுதியில் மென்மையாகவும், நடு உடல் பகுதியில் மெலிந்த மூட்டுடனும், வால் பகுதியில் வலுவான மூட்டுடன் செதில்கள் காணப்படும். முதிர்ச்சியடைந்த ஓ. ஆண்டர்சோனியின் மொத்த நீளம் (வால் உட்பட) 38–46 cm (15–18 அங்) ஆகும். வாலின் நீளம் மொத்த நீளத்தில் 15 முதல் 20% ஆகும்.[2]
இனப்பெருக்கம்
தொகுஓ. ஆண்டர்சோனி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் வகையின.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 Lau M, Nguyen TQ (2012). "Opisthotropis andersonii ". The IUCN Red List of Threatened Species 2012: e.T192007A2027198. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2012-1.RLTS.T192007A2027198.en. Downloaded on 19 January 2018.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 சிற்றினம் Opisthotropis andersonii at The Reptile Database www.reptile-database.org.
- ↑ 3.0 3.1 Beolens, Bo; Watkins, Michael; Grayson, Michael (2011). The Eponym Dictionary of Reptiles. Baltimore: Johns Hopkins University Press. xiii + 296 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4214-0135-5. (Opisthotropis andersonii, p. 8; O. maxwelli, p. 171).
- ↑ Boulenger GA (1893). Catalogue of the Snakes in the British Museum (Natural History). Volume I., Containing the Families Colubridæ ... London: Trustees of the British Museum (Natural History). (Taylor and Francis, printers). xiii + 448 pp. + Plates I–XXVIII. (Opisthotropis andersonii, new combination, p. 284 + Plate XVIII, figures 3, 3a, 3b, 3c).
மேலும் படிக்க
தொகு- Boulenger GA (1888). "Description of two new Snakes from Hongkong, and Note on the Dentition of Hydrophis viperina". Annals and Magazine of Natural History, Sixth Series 2 : 43–45. (Calamohydrus andersonii, new species, p. 44).
- Smith MA (1943). The Fauna of British India, Ceylon and Burma, Including the Whole of the Indo-Chinese Sub-region. Reptilia and Amphibia. Vol. III.—Serpentes. London: Secretary of State for India. (Taylor and Francis, printers). xii + 583 pp. ("Opisthotropis andersoni [sic]", p. 333).
- Wang Y-Y, Guo Q, Liu Z-Y, Lyu Z-T, Wang J, Luo L, Sun Y-J, Zhang Y-W (2017). "Revisions of two poorly known species of Opisthotropis Günther, 1872 (Squamata: Colubridae: Natricinae) with description of a new species from China". Zootaxa 4247 (4): 391–412. (Opisthotropis andersonii, pp. 400–402, Figures 4A–4E + Figures 6c–6d on p. 405).