ஆண்டாள் வெங்கடசுப்பா ராவ்

ஆண்டாளம்மா என்று பிரபலமாக அறியப்பட்ட ஆண்டாள் வெங்கடசுப்பா ராவ் (Andal Venkatasubba Rao) (1894-1969) இந்தியாவைச்சேர்ந்த சமூகச் சேவகரும், கல்வியாளரும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக பணியாற்றும் சென்னையைத் தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான "மதராஸ் சேவாசதன்" என்பதன் இணை நிறுவனருமாவார்.[1]

ஆண்டாள் வெங்கடசுப்பா ராவ்
பிறப்பு1894
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு1969
 இந்தியா
பணிசமூகச் சேவகர்
கல்வியாளர்
அறியப்படுவதுமதராஸ் சேவாசதன்
வாழ்க்கைத்
துணை
எம். வெங்கடசுப்பா ராவ்
விருதுகள்பத்ம பூசண்
சென்னை சேத்துப்பட்டு சர் முத்தா வெங்கடசுப்பாராவ் கலையரங்கத்துக்குமுன் உள்ள ஆண்டாளம்மா முத்தா வெங்கடசுப்பாராவ் உருவச்சிலைகள்

சுயசரிதை

தொகு

தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் 1894இல் பிறந்த இவர், சென்னை, புனித தேவதை ஆங்கிலோ இந்தியன் உயர்நிலைப்பள்ளி, மாநில மகளிர் உயர்நிலைப்பள்ளி, தற்போதைய மாநில பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஆகியவற்றில் தனது பள்ளிப் படிப்பினை முடித்தார்.[2]

திருமணம்

தொகு

1928ஆம் ஆண்டில், மதராசு உயர் நீதிமன்றத்தில் நீதியரசராக இருந்த எம். வெங்கடசுப்பா ராவ் என்பவரை மணந்தார். இவர் இங்கிலாந்தின் இராணியிடம் வீரத்திருத்தகை என்ற பட்டம் பெற்றவர்.[3]

கல்விப் பணிகள்

தொகு

இவர்கள், "மதராஸ் சேவாசதன்" என்ற தொண்டு நிறுவனத்தை 1928ஆம் ஆண்டில் நிறுவினர்.[4] இந்த அமைப்பு ₹10,000 மூலதனத்துடன் தொடங்கப்பட்டது. எட்டு அனாதை சிறுமிகளின் உதவியுடன், இந்த அமைப்பு பல பெண்கள் மற்றும் குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு பெரிய நலன்புரி அமைப்பாக பல ஆண்டுகளாக வளர்ந்துள்ளது. சேவாசதன் ஒரு மேல்நிலைப் பள்ளியையும், ஆண்டாள் வெங்கடசுப்பாராவ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என்ற ஒரு பள்ளியையும், சர் முத்தா வெங்கடசுப்ப ராவ் கச்சேரி அரங்கம் என்ற பெயரில் ஒரு கச்சேரி அரங்கையும் நடத்தி வருகிறது.[5]

விருதுகள்

தொகு

சமுதாயத்திற்கு இவர் செய்த பங்களிப்புகளுக்காக 1957ஆம் ஆண்டில் இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்ம பூசண் விருதினை இந்திய அரசு வழங்கியது.[6]

இறப்பு

தொகு

இவர் 1969 இல், தனது 75 வயதில் இறந்தார். [4]

மேற்கோள்கள்

தொகு
  1. "About Sir M V Rao". SIRMVR School. 2016. Archived from the original on 3 September 2016. பார்க்கப்பட்ட நாள் 5 July 2016.
  2. "The Life of Our Founder". Sir Muthu Memorial. 2016. Archived from the original on 27 April 2017. பார்க்கப்பட்ட நாள் 5 July 2016.
  3. ராண்டார் கை (16 November 2008). "The boldest Judge in Madras". Madras Musings. பார்க்கப்பட்ட நாள் 5 July 2016.
  4. 4.0 4.1 "About Lady Andal M V Rao". Lady MVR School. 2016. Archived from the original on 12 August 2017. பார்க்கப்பட்ட நாள் 5 July 2016.
  5. "The Lady Andal story". Indian Express. 23 June 2012. பார்க்கப்பட்ட நாள் 5 July 2016.
  6. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்புகள்

தொகு