ஆண்டிமனி ஐந்தாக்சைடு
ஆண்டிமனி ஐந்தாக்சைடு (Antimony pentoxide) என்பது Sb2O5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். ஆண்டிமனியும் ஆக்சிசனும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மத்தில் ஆண்டிமனி +5 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது. ஆண்டிமனி பெண்டாக்சைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
(டையாக்சோ-λ5-சிடிபேனைல்)ஆக்சி-டையாக்சோ-λ5-சிடிபேன்
| |
வேறு பெயர்கள்
ஆண்டிமனி(V) ஆக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
1314-60-9 | |
ChemSpider | 14129 |
EC number | 215-237-7 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 14813 |
| |
UNII | 756OCG058B |
பண்புகள் | |
Sb2O5 | |
வாய்ப்பாட்டு எடை | 323.517 கி/மோல் |
தோற்றம் | மஞ்சள், தூளான திண்மம் |
அடர்த்தி | 3.78 கி/செ.மீ3, திண்மம் |
உருகுநிலை | 380 °C (716 °F; 653 K) (சிதைவடையும்) |
0.3 கி/100 மில்லி லிட்டர் | |
கரைதிறன் | நைட்ரிக் அமிலத்தில் கரையாது |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | கனசதுரம் |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
–1008.18 கிலோயூல்/மோல் |
வெப்பக் கொண்மை, C | 117.69 யூல்/மோல் கெல்வின் |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H302, H315, H319, H335, H411 | |
P261, P264, P270, P271, P273, P280, P301+312, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P330, P332+313 | |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
தாங்கும் அளவு 0.5 மி.கி/மீ3 (Sb)[1] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
தாங்கும் அளவு 0.5 மி.கி/மீ3 (Sb)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கட்டமைப்பு
தொகுஆண்டிமனி பெண்டாக்சைடு நையோபியம் பெண்டாக்சைடு சேர்மத்தின் அதே கட்டமைப்பைக் கொண்டுள்ளது. உரூட்டைல் கனிமத்தின் கட்டமைப்பிலிருந்து வழிப்பெறுதியாக இதன் அமைப்பு பெறப்படுகிறது. ஆண்டிமனி சிதைந்த எண்கோண அமைப்பில் ஆறு ஆக்சிசன் அணுக்களால் ஒருங்கிணைக்கப்படுகிறது. SbO6 எண்முகத்தோடு மூலை மற்றும் விளிம்பை பகிர்ந்து கொள்கிறது.[2]
Sb ஒருங்கிணைவு | விளிம்பு பகிர்வு | மூலை பகிர்வு |
தயாரிப்பு
தொகுஆண்டிமனி பெண்டாகுளோரைடை நீராற்பகுப்பு செய்வதன் மூலம் நீரேற்றப்பட்ட ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது. அல்லது பொட்டாசியம் அறு ஐதராக்சோ ஆண்டிமோனேட்டு(V) சேர்மத்தை அமிலமயமாக்கல் மூலம் இது தயாரிக்கப்படுகிறது. நைட்ரிக் அமிலத்துடன் ஆண்டிமனி மூவாக்சைடை ஆக்சிசனேற்றம் செய்வதன் மூலமும் இது தயாரிக்கப்படுகிறது.[3]
பயன்கள்
தொகுஆண்டிமனி பெண்டாக்சைடு, ஏபிசு எனப்படும் அக்ரைலோநைட்ரைல் பியூட்டாடையீன் சுடைரீன் பலபடி மற்றும் பிற நெகிழிகளில் தீத்தடுப்பானாகவும், தைட்டானியம் டை ஆக்சைடு தயாரிப்பில் திரளாக்கும் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. சில சமயங்களில் கண்ணாடி, சாயம் மற்றும் பசைகள் தயாரிப்பிலும் இது பயன்படுத்தப்படுகிறது. [4][5]
Na+ உள்ளிட்ட அமிலக் கரைசலில் உள்ள பல நேர்மின் அயனிகளுக்கு அயனிப் பரிமாற்ற பிசினாகவும் (குறிப்பாக அவற்றின் தேர்ந்தெடுக்கப்பட்ட தக்கவைப்புகளுக்கு) பலபடியாக்கலுக்கும் ஆக்சிசனேற்ற வினையூக்கியாகவும் ஆண்டிமனி ஐந்தாக்சைடு பயன்படுத்தப்படுகிறது.
பண்புகள்
தொகுநீரேற்றப்பட்ட ஆக்சைடு நைட்ரிக் அமிலத்தில் கரையாது. ஆனால் செறிவூட்டப்பட்ட பொட்டாசம் ஐதராக்சைடு கரைசலில் கரைந்து பொட்டாசியம் அறு ஐதராக்சோ ஆண்டிமோனேட்டு(V) அல்லது KSb(OH)6 சேர்மத்தைக் கொடுக்கிறது. [6]
வினைகள்
தொகு700 °செல்சியசு (1,290 °பாரங்கீட்டு) வெப்பநிலைக்கு சூடாக்கப்படும் போது, மஞ்சள் நீரேற்றப்பட்ட பெண்டாக்சைடு சேர்மமானது Sb6O13 என்ற வாய்ப்பாடு கொண்ட நீரற்ற வெள்ளை நிறத் திண்மப் பொருளாக மாறுகிறது. ஆண்டிமனி(III) மற்றும் ஆண்டிமனி(V) இரண்டு ஆக்சிசனேற்ற நிலைகளும் இங்கு உள்ளன. 900 °செல்சியசு (1,650 °F) வெப்பநிலைக்கு சூடாக்கும்போது α மற்றும் β வடிவங்களில் Sb2O4 என்ற வாய்ப்பாடு கொண்ட வெள்ளை நிற கரையாத தூளை உருவாக்குகிறது. β வடிவம் எண்முக இடைவெளிகளிலும் பிரமிடு SbIIIO4 அலகுகளிலும் ஆண்டிமனி(V) அயனியைக் கொண்டுள்ளது. இந்த சேர்மங்களில், ஆண்டிமனி(V) அணு ஆறு ஐதராக்சி குழுக்களுடன் எண்முகமாக ஒருங்கிணைக்கப்படுகிறது.
ஐதரசன் அல்லது பொட்டாசியம் சயனைடுடன் சேர்த்து சூடாக்குவதன் மூலம் ஆண்டிமனி பெண்டாக்சைடை ஆண்டிமனி உலோகமாகக் குறைக்க முடியும்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0036". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ M. Jansen (March 1979). "Die Kristallstruktur von Antimon(V)-oxid". Acta Crystallogr. B 35 (3): 539–542. doi:10.1107/S056774087900409X. Bibcode: 1979AcCrB..35..539J.
- ↑ Pradyot Patnaik. Handbook of Inorganic Chemicals. McGraw-Hill, 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8
- ↑ Bartlett, Jeffrey (1997-03-19). "Colloidal Antimony Pentoxide in Flame Retarded ABS". Nyacol Products, Inc. Archived from the original on 3 August 2006. பார்க்கப்பட்ட நாள் 2006-07-28.
- ↑ "ANTIMONY PENTOXIDE". chemicalLAND21.com. Archived from the original on 27 August 2006. பார்க்கப்பட்ட நாள் 2006-07-28.
- ↑ Pradyot Patnaik (2002). Handbook of Inorganic Chemicals. McGraw-Hill. p. 54. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-049439-8.
- ↑ "Antimony" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. p. 606.