ஆண்டியப்பனூர்

திருப்பத்தூர் மாவட்டம்

ஆண்டியப்பனூர் (ANDIAPPANUR)‍‍ தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் திருப்பத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது. இது சவ்வாது மலைக்கும் ஏலகிரி மலைக்கும் இடையே உள்ளது. திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் செல்லும் வழியில் பதினெட்டாம் கிலோமீட்டரில் அமைந்துள்ளது. ஊரின் கிழக்கிலும் தெற்கிலும் அரணாக சவ்வாது மலை விளங்குகின்றது. ஊரின் மேற்கில் ஏலகிரி மலை பெரும்பாறைகளால் காட்சி அளிக்கிறது. இவ்வூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பாப்பாத்தியம்மன் ஆலயம் சவ்வாது மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.ஆண்டியப்பனூரில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இந்த அணை இரண்டு ஆறுகளுக்கு குறுக்கே புதியதாக கட்டப்பட்டு 2007 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இது சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு புகழிடமாக திகழ்கிறது.

சான்றுகள்

தொகு

http://www.dinamani.com/tamilnadu/2019/feb/25/சுற்றுலாத்-தலமாகும்-ஆண்டியப்பனூர்-அணை-3102313.html

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டியப்பனூர்&oldid=4179665" இலிருந்து மீள்விக்கப்பட்டது