ஆதவன் (எழுத்தாளர்)

சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்

ஆதவன் (Aadhavan) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளராவார். இவரது இயற்பெயர் கே.எசு.சுந்தரம் ஆகும். 1942 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 21 ஆம் நாள் இவர் பிறந்தார். அறுபதுகளில் எழுதத் துவங்கி, தமிழ்ச் சிறுகதை உலகில் பல குறிப்பிடத் தக்க சாதனைகளை நிகழ்த்தினார். முதலில் இரவு வரும் என்ற சிறுகதை நூலுக்கு 1987 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது ஆதவனுக்கு வழங்கப்பட்டது.[1] [2][3][4][5]

ஆதவன்
Aadhavan
பிறப்புகே.எசு.சுந்தரம்
(1942-03-21)21 மார்ச்சு 1942
கல்லிடைக்குறிச்சி, திருநெல்வேலி மாவட்டம்,
மதராசு மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு19 சூலை 1987(1987-07-19) (அகவை 45)
சிருங்கேரி, கருநாடகம், இந்தியா
தொழில்எழுத்தாளர்,உதவி ஆசிரியர்
குடியுரிமைஇந்தியர்
காலம்1987 வரை
வகைநாவல்கள்,சிறுகதைகள்
கருப்பொருள்குழந்தை இலக்கியம்,சமூக நாவல்கள்
குறிப்பிடத்தக்க படைப்புகள்என் பெயர் ராமசேசன்
காகித மலர்கள்
முதலில் இரவு வரும்
துணைவர்ஏமா சுந்தரம்
பிள்ளைகள்சாருமதி
நீரசா

வாழ்க்கைச் சுருக்கம்

தொகு

ஆதவன் 21 மார்ச்சு 1942 அன்று திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்த கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர். இவருடைய மனைவியின் பெயர் ஹேமலதா சுந்தரம், பிள்ளைகள் சாருமதி, நீரஜா. இந்திய இரயில்வேயில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, தில்லியில் உள்ள தேசிய புத்தக அறக்கட்டளையின் தமிழ்ப் பிரிவின் துணையாசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் பெங்களூருக்கு மாற்றலாகி வந்த ஆதவன் 1987, சூலை 19ஆம் தேதி சிருங்கேரி நகரில், துங்கபத்திரை ஆற்றின் சுழலில் சிக்கி மரணமடைந்தார்.

மரணத்திற்கு பின் 1987ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது "முதலில் இரவு வரும்" என்ற சிறுகதைக்காக வழங்கபட்டது. இவரது படைப்புகள் பல இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு, உருசியம் உள்ளிட்ட உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. "தாஜ்மகாலில் பெளர்ணமி இரவு" என்கிற கதை ஆனந்த விகடனில் முத்திரைக் கதையாகப் பிரசுரமானது.

படைப்புகள்

தொகு

குறும்புதினம்

தொகு
  • இரவுக்கு முன்பு வருவது மாலை (1974)
  • சிறகுககள்
  • மீட்சியைத் தேடி
  • கணபதி ஒரு கீழ்மட்டத்து ஊழியன்
  • நதியும் மலையும்
  • பெண், தோழி, தலைவி (1982)

சிறுகதை

தொகு
  • கனவுக்குமிழிகள் (1975)
  • கால் வலி (1975)
  • ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள் (1980)
  • புதுமைப்பித்தனின் துரோகம் (1981)
  • முதலில் இரவு வரும் (1985)
  • நிழல்கள்

புதினம்

தொகு

நாடகம்

தொகு
  • புழுதியில் வீணை

மேற்கோள்கள்

தொகு
  1. "Wikizero - List of Sahitya Akademi Award winners for Tamil". www.wikizero.com. பார்க்கப்பட்ட நாள் 2021-03-10.
  2. Tamil Sahitya Akademi Awards 1955-2007 பரணிடப்பட்டது 2010-01-24 at the வந்தவழி இயந்திரம் Sahitya Akademi Official website.
  3. "Aadhavan Profile". Uyirmmai (in Tamil). Archived from the original on 10 June 2010. பார்க்கப்பட்ட நாள் 31 May 2010.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. Aadhavan Sundaram. First Comes the Night. Sahitya Akademi. pp. Backcover.
  5. Nesamudan Venkatesh. "ஆதவன் வீட்டுக்குச் சென்று வந்தேன்". Tamiloviam (in Tamil). Archived from the original on 24 February 2006. பார்க்கப்பட்ட நாள் 31 May 2010.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள்

தொகு
  • A critical commentary on Adhavan's writings in Thisaigal magazine - Part 1, Part 2 and Part 3
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதவன்_(எழுத்தாளர்)&oldid=4157719" இலிருந்து மீள்விக்கப்பட்டது