ஆதார் அடையாள அட்டை
ஆதார் அடையாள அட்டை என்பது இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கு [1] வழங்கப்பட்டு வரும் 12 இலக்க அடையாள எண் தாங்கிய அட்டை ஆகும். உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகை நாடான இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள எண் வழங்குவதன் மூலம் நாடுதழுவிய குடிமக்கள் தரவுத்தளத்தை உருவாக்குவதே ஆதார் அடையாள எண் முறையின் முதல் நோக்கம்.
பெயர்க்காரணம்
தொகுஇந்தியாவில் உள்ள மக்கள் அதிகமாக பேசக்கூடிய ஒரு சில மொழிகளில் ஆதார் என்ற வார்த்தை கிட்டதட்ட ஒரே பொருளுடனும், உச்சரிக்கவும் எளிதாக உள்ளதால் உருவானதுதான் ஆதார். ஆதார் என்றால் ஆதாரம் ஆகும்.
வரலாறு
தொகுஇந்த திட்டத்திற்கு முன்னோடி திட்டமாக ஐக்கிய அமெரிக்க நாட்டின் குடிமக்களுக்கு வழங்கப்படும் எஸ்.எஸ்.என் எனப்படும் சமூக பாதுகாப்பு எண் திட்டம் கருதப்படுகிறது. இந்தியாவில் இந்த திட்டம் நந்தன் நீல்கேனியின் தலைமையில் 2009 பெப்ரவரி மாதம் துவக்கப்பட்டது.
உள்ளீடு செய்யப்படும் தகவல்கள்
தொகுகண்ணின் விழித்திரை, கைரேகை போன்ற உயிரியளவுகளும், இவற்றுடன் சேர்த்து பெயர், முகவரி, பிற சுய குறிப்புகளும், புள்ளி விவரங்களும் உள்ளீடு செய்யப்படும். பிற அடையாள அட்டைகளிலிருந்து முற்றிலும் தனிப்பட்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 12 இலக்க எண் பொறித்த அட்டையாக வழங்கப்படும். 12 இலக்க எண் ஒரு முறை ஒருவருக்கு வழங்கப்பட்டு விட்டால் வாழ்நாள் முழுவதும் அது அவருக்குரியதே. வேறு எவருக்கும் அந்த எண் வழங்கப்படாமாட்டாது.
தகவல் பாதுகாப்பு
தொகுமக்களிடம் திரட்டப்படும் தகவல்கள் மிகவும் இரகசியமாகப் பாதுகாக்கப்படும். பெரும்பாலும் உள்ளூர் அஞ்சல் அலுவலகங்கள் மூலமாகத் தகவல்கள் திரட்ட திட்டமிடப்பட்டிருகிறது. தகவல்கள் முதலில் "ஆஃப்லைன்"இல் உள்ளீடு செய்யப்பட்டு பிற சங்கேத மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு மத்திய தரவுத்தளத்திற்கு அனுப்பப்படுகின்றன. எனவே தகவல் கசிவு இல்லாமல் பார்த்துக்கொள்ளப்படும். இந்திய அரசு 21 ஜூன் 2016 அன்று வெளியிட்ட அறிக்கையில் மாநில அரசுகள் சாதி, மற்றும் இருப்பிடச் சான்றுகளுடன் ஆதார் எண்ணையும் இணைக்க உத்தரவிட்டுள்ளது.
எதிர்நோக்கும் சவால்கள்
தொகுபோதிய கல்வியறிவு இல்லாத மக்கள், தங்களிடம் எடுக்கப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, புகைப்பட வாக்களர் அடையாள அட்டைக்கான விவரம் சேகரிப்பு போன்ற பிரதிபலன் இல்லாத கணக்கெடுப்புகளுக்கு காட்டும் அலட்சியம் சரியான தகவல் சேகரிக்க பெரும் சவாலாக உள்ளது. இதனை மனத்தில் வைத்து வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் இதுபோன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களைத் தவிர்த்து விடாமல் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொருவருக்கும் தலா 100 ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கவும் இந்திய அரசு முடிவுசெய்துள்ளது.
ஆதார் அடையாள அட்டை/என்.பி.ஆர்., ஆதாரச்சான்று வைத்திருப்பவர்கள் கவனிக்க வேண்டியன
தொகு- ஆதார் அடையாள அட்டை/ ஆதாரச்சான்று (Acknowledgement) பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
இந்த ஆதாரச்சான்றின் நகல்களைக் கொண்டே ஆதார அட்டை பதிவின் விவரநிலை மற்றும் ஆதார் அடையாள அட்டையை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யமுடியும். ஆதார் அட்டையின் விவரங்களை அறிந்திட http://resident.uidai.net.in/check-aadhaar-status பரணிடப்பட்டது 2014-02-08 at the வந்தவழி இயந்திரம் என்ற இணையதளத்தில் சென்று அறியலாம்.
- ஆதார் விவரங்களை மேம்படுத்த (முகவரி மாற்றம் போன்ற விவரங்களை) (UPDATION) http://redident.uidai.net.in/update-data[தொடர்பிழந்த இணைப்பு] என்ற இணையதளத்தில் உள் சென்று சரி செய்யலாம்.
- மேலும் ஆதார் அட்டை தொலைந்திருந்தாலும், விடுபட்டிருந்தாலும், கிடைக்கப்படாமல் இருந்தாலும் (Loss/Unknown Status) அவற்றைக் கண்டறிதல் எளிதாகும்.
- என். பி. ஆர்., அடிப்படையில் பதிவு செய்துள்ள பொதுமக்கள், ஆதாருக்காக மீண்டும் மறுமுறை பதிவு செய்ய வேண்டியதில்லை.
- பொதுமக்கள் UIDAI அமைப்பில் ஏற்கனவே பதிவு செய்து இருப்பின், உடற்கூறு (BIOMETRICS) பதிவுகளை என். பி. ஆர்., பதிவின் போது செய்திட வேண்டியதில்லை.
- ஆதார் மற்றும் வங்கிக் கணக்கு கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற இந்திய அரசின் கட்டளைக்கு இணங்க, UIDAI அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் Aadhaar மற்றும் வங்கிக் கணக்கு இணைக்கும் நிலையைச் சரிபார்க்க முடியும்.[2]
எப்படி பெறுவது?
தொகு- புகைப்பட அடையாளச்சான்று
- முகவரிச்சான்று
மேற்கண்ட உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு பதியப்படும். பின் கருவிழிஅமைப்பு கைரேகை, புகைப்படம் போன்றவை பதியப்பட்டு ஒரு தற்காலிக எண் வழங்கப்படும். இந்த எண் 28 இலக்கங்களை கொண்டதாக இருக்கும். முதல் 14 எண் அத்தாட்சி எண் மீதமுள்ள 14 இலக்கம் பிறந்த தேதி மற்றும் நேரத்தைக் குறிப்பது. தற்காலிக எண்ணை வைத்து ஒருவரின் ஆதார் விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு
தொகுபிறந்த குழந்தை முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவரும் பெறலாம். இதற்கு கட்டணம் ஏதும் கிடையாது.
ஆண்டுவாரியாக ஆதார் அட்டை வழங்கப்பட்ட விவரம்
தொகுஆண்டுவாரியாக ஆதார் அட்டை வழங்கப்பட்ட விவரம்[3]
ஆண்டு | ஆதார் அட்டை உருவாக்கம் கோடியில் | மொத்த எண்ணிக்கையில் ஆதார் அட்டை கோடியில் |
---|---|---|
2010-11(செப்-மார்ச்) | 0.42 | 0.42 |
2011-12 | 15.59 | 16.01 |
2012-13 | 15.17 | 31.18 |
2013-14 | 29.83 | 61.01 |
2014-15 | 19.46 | 80.47 |
2015-16 | 19.45 | 99.92 |
2016-17 | 13.37 | 113.29 |
2017-18 | 7.42 | 120.71 |
வெளி இணைப்புகள்
தொகு- ஆதார் அட்டை தொடர்பான தமிழ் இணையதளம்
- ஆதார் அட்டை தொடர்பான விவரங்களை அறிய பரணிடப்பட்டது 2014-02-08 at the வந்தவழி இயந்திரம் அட்டஸ் சோச்சிச்
- ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை மாற்றிட பரணிடப்பட்டது 2014-03-27 at the வந்தவழி இயந்திரம்
- கணக்கெடுப்பில் விடுபட்டவர்களுக்கு "ஆதார் அட்டை' வழங்க சிறப்பு ஏற்பாடு
- வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க விண்ணப்பம்: மாநகராட்சி அதிகாரிகள் வழங்கினர் பரணிடப்பட்டது 2015-03-15 at the வந்தவழி இயந்திரம்
- ஆதார் அட்டை அவசியமில்லை: மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
- ஆதார் விண்ணப்ப படிவம் & விதிமுறைகள்
- ஆதார் எண்னையும் வாக்காளர் அடையாள அட்டை எண்னையும் இணைக்க
- விடுபட்டோருக்கு சிறப்பு ஆதார் முகாம்; பொதுமக்கள் வலியுறுத்தல்
சான்றுடன் ஆதார் இணைக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு தி இந்து தமிழ் 22 ஜூன் 2016
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "FAQ on Your Aadhaar Aadhaar Features, Eligibility". பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2017.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "Services Offered by the UIDAI Official Website".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ https://uidai.gov.in/images/Annual-Report-ENG-2017-18-Final-18072019.pdf ஆண்டுவாரியாக ஆதார் அட்டை