வாக்காளர் அடையாள அட்டை

WRC2082733வாக்காளர் அடையாள அட்டை (Voter ID), இந்தியத் தேர்தல் ஆணையத்தால், 18 வயது எய்திய இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படுவதாகும். தேர்தல்களில் வாக்கு அளிப்பதற்கும், கடவுச் சீட்டு, அலைபேசி இணைப்பு போன்றவைகள் பெறுவதற்கும், வாக்காளர் அடையாள அட்டையை ஒரு அரசு ஆவணமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.[1].

வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை எனில் பொதுத் தேர்தல்களில் வாக்களிக்க இயலாது. எனவே வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை தேர்தலுக்கு முன்பே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இல்லை எனில் வாக்காளர் அடையாள அட்டையுடன், உரிய அரசு அலுவலகத்தில் கோரிக்கை வைக்க வேண்டும்.

வாக்காளர் அடையாள அட்டை பெற தகுதிகள்

தொகு
  • 18 வயது நிறைவடைந்த அனைத்து இந்திய குடிமக்கள், இந்தியத் தேர்தல் ஆணையம், குறிப்பிட்ட படிவம்-6 மூலம் வாக்காளர் அடையாள அட்டை பெற உள்ளாட்சி நிறுவனங்களிடம் விண்ணப்பிக்க வேண்டும்.[2][3]
  • 18 வயதிற்கு மேற்பட்ட மன நோயாளிகள் மற்றும் வாங்கிய கடனைத் தீர்க்க பொருளற்று, திவாலா நிலை (Bankruptcy), அடைந்தவர்கள் வாக்காளர் அடையாள அட்டை பெறத் தகுதியற்றவர்கள்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வழியாகச் சென்றும், வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பம் செய்ய இயலும்.[4]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Election Commission of India". Eci.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2015-02-26.
  2. "Epic Card". Bangaloreone.gov.in. Archived from the original on 2015-02-27. பார்க்கப்பட்ட நாள் 2015-02-26.
  3. "Apply online, get your voter ID in a month - The Times of India". Timesofindia.indiatimes.com. 2011-07-16. பார்க்கப்பட்ட நாள் 2015-02-26.
  4. "Chief Electoral Officer, Kerala". Ceo.kerala.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2015-02-26.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாக்காளர்_அடையாள_அட்டை&oldid=3936826" இலிருந்து மீள்விக்கப்பட்டது