ஆதிச்சிக்காவு துர்காதேவி கோயில்
கேரளாவின் ஆலப்புழை மாவட்டத்திலுள்ள ஓர் அம்மன் கோயில்
ஆதிச்சிக்காவு துர்காதேவி கோயில் தென்னிந்திய மாநிலமான கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் செங்கனூர் தாலுக்காவில் பாண்டநாட்டில் அமைந்துள்ளது பழமையான கோயிலாகும். இக்கோயில் ஆதிச்சிக்காவு (அடிச்சிக்காவு) தேவி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயில்செங்கனூருக்கு 6 கி.மீ. மேற்கிலும், மன்னாருக்கு 4 கி.மீ. கிழக்கிலும் உள்ளது. இதன் மூலவர் துர்க்கை ஆவார்.[1]
திருவிழாக்கள்
தொகுஇக்கோயிலில் பத்தாமுதயம், சப்தாஹ யக்ஞம், பொங்கல், பறையெடுப்பு, நவாஹ யக்ஞம் உள்ளிட்ட விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
துணைத்தெய்வங்கள்
தொகுபிற இந்துக் கோயில்களில் உள்ளதுபோல இக்கோயிலில் துணைத்தெய்வங்களின் சன்னதிகள் உள்ளன. இக்கோயிலில் யக்சியம்மா, நாகராஜா, நாகயட்சி, பிரம்மராட்சஸ் ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன.