ஆதித்யபுரம் சூரியன் கோயில்

கேரளத்தின், கோட்டையம் மாவட்டதில் உள்ள கோயில்

ஆதித்யபுரம் சூர்யன் கோயில் (Adithyapuram Sun Temple) என்பது இந்திய மாநிலமான கேரளத்தின், கோட்டயம் மாவட்டத்தில் காடுதுருத்தி அருகில் உள்ள இறைவிமங்கலம் என்ற இடத்தில் உள்ள ஒரு இந்துக் கோவில் ஆகும். இதுவே கேரளத்தில் உள்ள ஒரே 'சூரிய பகவான்' கோயிலாக குறிப்பிடப்பட்டுள்ளது. [1] [2] இந்த கோயில் வைக்கத்துக்கு செல்லும் நெடுஞ்சாலையிலிருந்து 200 மீ (0.20 கி.மீ) தொலைவில் அமைந்துள்ளது. இது காடுதுருத்தியிலிருந்து 3 கி.மீ தொலைவிலும், ஏற்றுமானூரிலிருந்து 17 கி.மீ தொலைவிலும், வைக்கத்தில் இருந்து 16 கி.மீ தொலைவிலும் உள்ளது.

ஆதித்யபுரம் சூரிய தேவன் கோயில்
ஆதித்யபுரம் சூரியன் கோயில் is located in கேரளம்
ஆதித்யபுரம் சூரியன் கோயில்
கேரளத்தில் அமைவிடம்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளம்
மாவட்டம்:கோட்டயம்
அமைவு:காடுதுருத்தி
ஆள்கூறுகள்:9°40′55″N 76°29′59″E / 9.68194°N 76.49972°E / 9.68194; 76.49972
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:பாரம்பரிய கேரள பாணி
கோவிலில் சூரிய கடவுள்

தொன்மம் தொகு

திரேதா யுகத்தின் போது சூரிய தேவனின் சிலை பிரதிட்டை செய்யப்பட்டதாக புராணம் கூறுகிறது. ஆனால் கோயிலின் தோற்றம் குறித்து பெரியதாக உண்மைச் சான்றுகள் எதுவும் இல்லை. ஒரு முறை 'கபிக்காடு மரங்கட்டு மனா'வைச் சேர்ந்த ஒரு நம்பூதிரி சூரிய பகவானை நோக்கி தவம்புரிந்தார்.   நம்பூதிரியின் பக்திக்கு மெச்சிய சூரிய பகவான், அவர் முன் தோன்றி, இந்த இடத்தில் தனது சிலையை பிரதிட்டை செய்யும்படி அவருக்கு அறிவுறுத்தினார். அன்றிலிருந்து, வழக்கமான பூசைகளும், சடங்குகளும் துவங்கின. தற்போது, அந்த நம்பூதியின் சந்ததியினர் கோயிலின் தாந்த்ரீக உரிமைகளைக் கொண்டுள்ளனர். [சான்று தேவை]


கோயில் தொகு

கோயிலின் 'ஸ்ரீகோவில்' அல்லது கருவறையானது வட்ட வடிவில் உள்ளது. சூரிய பகவானின் சிலையானது தியான நிலையில் மேற்கு நோக்கி உள்ளார். பின் வலது கையில் சக்ராயுதத்தை ஏந்தியும், பின் இடது கையில் சங்கு ஏந்தியும், முன் இரு கைகளானது தவ முத்திரையோடு உள்ளன. [3] [4] ஒரு சுவாரஸ்யமான உண்மை என்னவென்றால், இங்கு நவகிரகங்கள் இல்லை. [5]

பூசைகள் தொகு

ஆதித்யபூசை (கண் மற்றும் தோல் தொடர்பான நோய்களைக் குணப்படுத்துவதற்காக), உதயஸ்தமன பூசை, எண்ணெய் அபிடேகம், பகவதி பூசை மற்றும் நவகிரக பூசைகள் கோவிலில் மிக முக்கியமான பூசைகள் ஆகும். [6]

பிரசாதம் தொகு

'அடை நிவேதியம்' மற்றும் 'ரக்த சந்தண சமர்பணம்' ஆகியவை நோய்களைக் குணப்படுத்த பெரும்பாலும் செய்யப்படும் முக்கிய பிரசாதங்கள்.

பண்டிகைகள் தொகு

மலையாள மாதங்களின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளான 'விருச்சிகம்' (அக்டோபர் மற்றும் நவம்பர்) மற்றும் 'மேடம்' (மே மற்றும் ஜூன்) ஆகியவை மிகவும் விசேசமான நாட்களாகக் கருதப்படுகின்றன.

சடங்குகள் தொகு

விழா நாட்களில் அபிஷேகமும், ரக்தச்சந்தண காவடி போன்ற சிறப்பு சடங்குகள் செய்யப்படுகின்றன. மரங்கட்டு இல்லத்தில் இருந்து ஒரு நபர் காவடி விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்ற வழக்கம் உள்ளது.

தெய்வங்கள் தொகு

சூரிய பகவானைத் தவிர, தேவி (கிழக்கு நோக்கி), சாஸ்தா, யக்ஷி ஆகிய துணை தெய்வங்கள் உள்ளனர். [7] [8] [9]

குறிப்புகள் தொகு

  1. "Surya Temple - only temple in Kerala dedicated to Aditya, the sun god at Adityapuram, Kottayam | Kerala Tourism". www.keralatourism.org. பார்க்கப்பட்ட நாள் 2016-12-08.
  2. "Adityapuram Surya Temple". english.mathrubhumi.com. Archived from the original on 2016-12-20. பார்க்கப்பட்ட நாள் 2016-12-08.
  3. "Adithyapuram Sooryadeva Temple Kottayam kerala | Adithyapuram sooryadeva kshethram kottayam kerala | soorya deva temple kerala | soorya deva kshethram kerala | temples in kaduthuruthy kottayam | temples in kerala | Sun temple in kerala | Sun temple in India". www.adithyapuramtemple.org. Archived from the original on 2016-12-20. பார்க்கப்பட்ட நாள் 2016-12-08.
  4. "Adityapuram Surya Deva Temple,Kottayam City Guide Tourist attractions Kerala". www.webindia123.com. பார்க்கப்பட்ட நாள் 2016-12-08.
  5. "Adithyapuram Surya Temple - Pilgrimaide.com". www.pilgrimaide.com. Archived from the original on 2016-12-21. பார்க்கப்பட்ட நாள் 2016-12-08.
  6. "SURYA DEVA TEMPLE - ADITYAPURAM - TRAVEL INFO". Trawell.in. http://www.trawell.in/kerala/kottayam/surya-deva-temple-adityapuram. 
  7. "Surya Temples in Kerala". www.vaikhari.org. பார்க்கப்பட்ட நாள் 2016-12-08.
  8. "KERALA TEMPLES - ADITHIYAPURAM SURYA TEMPLE". www.thekeralatemples.com. பார்க்கப்பட்ட நாள் 2016-12-08.
  9. "Adithyapuram Sooryadeva Temple Kottayam kerala | Adithyapuram sooryadeva kshethram kottayam kerala | soorya deva temple kerala | soorya deva kshethram kerala | temples in kaduthuruthy kottayam | temples in kerala | Sun temple in kerala | Sun temple in India". www.adithyapuramtemple.org. Archived from the original on 20 December 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-12-08.