ஆதும்பரர்கள்
ஆதும்பரர்கள் (Audumbras or Audumbaras), வட இந்தியாவில் இமயமலையின் மேற்குப் பகுதியில் பஞ்சாபிற்குக் கிழக்கே வாழ்ந்த பண்டைய பரத கண்டப் பழங்குடி மக்கள் ஆவார். தற்காலத்தில் ஆதும்பர பழங்குடி மக்கள் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சிர்மௌர் மாவட்டம் மற்றும் சம்பா மாவட்டங்களில் அதிகமாக வாழ்கின்றனர்.
ஆதும்பரர்கள் யது குலத்தின் ஒரு கிளையான விருஷ்ணி குலத்தவர்கள் ஆவார். ஆதும்பர மக்களின் கடவுளர்கள் சிவன் மற்றும் வேலுடன் கூடிய கார்த்திகேயன் ஆவர். இம்மக்களின் தலைநகரம் கோட்டீஸ்வரா அல்லது கச்சேஷ்வரா என மகாபாரத காவியத்தில் கூறப்படுகிறது.
அலெக்சாண்டர் கன்னிங்காம் எனும் பிரித்தானிய தொல்லியல் அறிஞர், தனது தொல்லியல் அறிக்கை எண் 5-இல், பக்கம் 155-இலும் மற்றும் தனது பண்டைய இந்தியப் புவியியல் எனும் நூலில், பக்கம் 254-இல் வட இந்திய ஆதும்பர பழங்குடி மக்கள் பற்றி குறித்துள்ளார்.