அருச்சுனயானர்கள்

இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு

அருச்சுனயானர்கள் (Arjunayana, Arjunavana, Arjunavayana) [1][2]சுங்கப் பேரரசின் காலத்தில், இந்தியத் துணைக்கண்டத்தின் பண்டைய பஞ்சாப் பகுதி அல்லது வடமேற்கு இராஜஸ்தான் பகுதியில் கி மு 185 - 73 காலத்தில் வாழ்ந்த பண்டைய குடியரசு அரசியல் முறையில் வாழ்ந்த மக்கள் ஆவார்.

வட இந்தியாவில் சிந்து ஆறு - கங்கை ஆற்றிக்கும் இடைப்பட்ட பகுதியில் அருச்சுனாயன மக்களின் வாழ்விடம்: அருகில் சகலா, யௌதேயர்கள், பௌரவர்கள், குலிந்தர்கள், விருஷ்ணிகள் மற்றும் ஆதும்பரர்கள்

கி பி 335 – 380 காலத்திய சமுத்திரகுப்தரின் அலகாபாத் கல்வெட்டுகளில், குப்தப் பேரரசின் மேற்கு எல்லை ஓரத்தில் குடியரசு தத்துவத்துடன் தன்னாட்சியுடன் வாழ்ந்த அருச்சுனயான மக்கள் குறித்தான செய்திகள் உள்ளது.

கி பி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த வராகமிகிரர் எழுதிய பிரகத் சம்ஹிதை நூலில் அருச்சுனாய மக்கள் குறித்தான செய்திகள் உள்ளது.[3][4][5]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Journal of Ancient Indian History,1972, p 318, University of Calcutta. Dept. of Ancient Indian History and Culture, Editor D. C. Sircar.
  2. For Arjunavana = Arjunayan, see: Ancient Indian folk cults, 1970, p 178, Vasudeva Sharana Agrawala.
  3. VarAhamihira's Brhatsamhita, v 4.25ab; v 11.59cd; v 14.25ab; v 16.21cd; v 17.19cd.
  4. Evolution of Heroic Tradition in Ancient Punjab, 1971, p 110, Buddha Prakash.
  5. India as seen in the Brhat samhita of Varaha-Mihira, 1969, p 68, A. M. Shastri.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருச்சுனயானர்கள்&oldid=4058669" இலிருந்து மீள்விக்கப்பட்டது