ஆத்துப்பாளையம் அணை

ஆத்துப்பாளையம் அணை (Aathupalayam Dam) என்பது தமிழ்நாட்டின் கரூர் மாவட்டம், க. பரமத்தி வட்டம், கார்வழி ஊராட்சியில் நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும். இதன் மூலம் ஆற்றில் மழை வெள்ள காலங்களில் வரும் உபரி நீரையும், கீழ் பவானி வாய்க்காலில் வரும் கசிவு நீரையும் தேக்கி வைத்து, கரூர் மாவட்டத்தில் 19,000 ஏக்கருக்கும் மேலான நிலங்கள் பாசனம் பெற்று வந்தன. அணை கட்டி முடிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகள் மட்டுமே பாசனத்திற்கு தண்ணீர் கிடைத்தது. அதன்பிறகு திருப்பூர் சாயப்பட்டறை கழிவு நீர் கலந்து வந்ததால் விவசாய நிலங்கள் பாழாயின. இதனால் இதிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. [2]

ஆத்துப்பாளையம் அணை
ஆத்துப்பாளையம் அணை is located in தமிழ் நாடு
ஆத்துப்பாளையம் அணை
ஆத்துப்பாளையம் அணை அமைவிடம்
அதிகாரபூர்வ பெயர்நொய்யல் ஆத்துப்பாளையம் அணை
நாடுஇந்தியா
அமைவிடம்வெள்ளக்கோயில்
புவியியல் ஆள்கூற்று11°01′42″N 77°49′11″E / 11.02833°N 77.81972°E / 11.02833; 77.81972ஆள்கூறுகள்: 11°01′42″N 77°49′11″E / 11.02833°N 77.81972°E / 11.02833; 77.81972
நிலைOperational
கட்டத் தொடங்கியது1980
திறந்தது1992
அணையும் வழிகாலும்
வகைEmbankment
உயரம்14 m (46 ft)
நீளம்2,850 m (9,350 ft)
வழிகால் அளவு2,640 m3/s (93,000 cu ft/s)
நீர்த்தேக்கம்
மொத்தம் capacity6,660,000 m3 (5,400 acre⋅ft)
மேற்பரப்பு area1.6 km2 (0.62 sq mi)[1]

வரலாறுதொகு

இந்த அணையின் கட்டுமான பணி 1980 இல் துவங்கப்பட்டது தொழில்நுட்ப சிக்கல் மற்றும் நிதி ஒதுக்கீட்டு தாமதங்கள் போன்றவற்றால் பணிகளை முடிக்க பத்தாண்டுகள் தாமதம் ஆனது.

இருப்பினும், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர் அவர்களின் மகிழ்ச்சி குறுகியகாலமே நீடித்தது. 1995 ஆம் ஆண்டுக்குப் பின் அணை நீரில் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் உள்ள சாயப்பட்டறை மற்றும் பிளீச்சிங் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலந்தது. இதனால் அணை நீர் வேளாண்மைக்கு தகுதியற்றதாக ஆனது.

தற்போதைய நிலைதொகு

அணையின் கால்வாய்கள், நீர்த்தேக்க படுக்கை போன்றவை பெரிதும் பராமரிப்பு இல்லாத காரணத்தால் கடந்த 20 ஆண்டுகளில் சேறுசகதியோடு, மதகுகள் சேதமுற்றும் அணை அழியும் நிலையில் உள்ளது.

மேற்கோள்கள்தொகு

  1. "India: National Register of Large Dams 2009". Central Water Commission. மூல முகவரியிலிருந்து 21 ஜூலை 2011 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 22 November 2011.
  2. "நொய்யல் ஆற்றில் மீண்டும் சாயக்கழிவு திறப்பு: கிணறுகள், விவசாய நிலங்கள் பாதிப்பு". தினமணி (2016 சூலை 27). பார்த்த நாள் 30 சூலை 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆத்துப்பாளையம்_அணை&oldid=3232861" இருந்து மீள்விக்கப்பட்டது