ஆந்திரேயா யமாமை

பூச்சி இனம்
ஆந்திரேயா யமாமை
முதிர்ச்சியடைந்த பூச்சி
ஆந்திரேயா யமாமை சூப்பர்பா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
லெப்பிடாப்பிடிரா
குடும்பம்:
சாத்துரினிடே
சிற்றினம்:
சாத்துருனீனி
பேரினம்:
இனம்:
ஆ. யமாமை
இருசொற் பெயரீடு
ஆந்திரேயா யமாமை
குரின்-மெனெவில்லே, 1861[1]
வேறு பெயர்கள்
  • ஆந்திரேயா காலிடா
  • ஆந்திரேயா பெந்தோனி
  • ஆந்திரேயா ஒயிட்உல்ப்
  • ஆந்திரேயா மோரோசா
  • ஆந்திரேயா செர்செசுடசு
  • ஆந்திரேயா ஓர்னாட்டா
  • ஆந்திரேயா ஓர்னாட்ரிக்சு

ஆந்திரேயா யமாமை (Antherea yamaai) என்பது சப்பானிய பட்டுப்பூச்சி அல்லது சப்பானிய ஓக் பட்டுப்பூச்சி (சப்பானிய மொழி: (山繭(蛾)・ヤママユ(ガ) yamamayu(ga)?)) என்பது சதுர்னிடே குடும்பத்தின் அந்துப்பூச்சி ஆகும். இது கிழக்கு ஆசியாவில் காணப்படுகிறது. ஆனால் டசர் பட்டு உற்பத்திக்காக ஐரோப்பாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது தென்கிழக்கு ஐரோப்பாவில், முக்கியமாக ஆஸ்திரியா, வடகிழக்கு இத்தாலி மற்றும் பால்கன் நாடுகளில் காணப்படுகிறது. இது வடக்கே பரவி வருவதாகத் தெரிகிறது. செருமனியில் டெகென்டோர்ஃப் மற்றும் பாசாவ் அருகே இவை வளர்க்கப்படுகின்றன.[2] இந்த சிற்றினத்தை முதன்முதலில் 1861-ல் பெலிக்சு எட்வார்ட் குரின்-மெனெவில்லே விவரித்தார். இது வட அமெரிக்காவின்ஆந்திரேயா பாலிபீமசு பட்டுப்புழுவுடன் செயற்கையாகக் கலப்பு செய்யப்பட்டுள்ளது.[3]

ஆண் பட்டுப்பூச்சியின் முன் தோற்றம்
முட்டை
கூட்டுப்புழு
இரண்டாம் நிலை இளம் உயிரி

இந்த அந்துப்பூச்சி ஜப்பானில் 1000 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்க்கப்படுகிறது. இது மிகவும் வலுவான மற்றும் மீள்தன்மை கொண்ட இயற்கையான வெண்பட்டினை உற்பத்தி செய்கிறது. இது சாயத்தினை அதிகம் ஏற்பதில்லை. இது இப்போது மிகவும் அரிதானதாகவும் விலை அதிகமானதாகவும் உள்ளது.[4]

இறக்கை நீட்டம் 110–150 மில்லிமீட்டர்கள் (4.3–5.9 அங்) ஆகும்.

இதன் இளம் உயிரிகள் முக்கியமாகக் கருவாலி மர இலைகளை உணவாக உண்கின்றன. ஆனால் பாகசு சில்வாடிகா, காசுடானியா சாடிவா, கார்பினசு, உரோசா மற்றும் குரேடேகசு ஆகியவற்றினை உண்பதும் பதிவாகியுள்ளன.

டென்சான் பட்டு மரபணுக்கள் குறித்து விரிவாகப் பார்க்க, 15,481 மரபணுக்களுடன் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.[5]

துணை இனங்கள்

தொகு
  • ஆந்திரேயா யமாமை யமாமை
  • ஆந்திரியா யமாமை பெர்க்மானி ப்ரைக், 1949
  • ஆந்திரியா யமாமை டைட்டன் மெல், 1958
  • ஆந்திரியா யமாமை அசசூரியென்சு சாச்பசோவ், 1953
  • ஆந்திரியா யமாமை சூப்பர்பா இன்னோயூ, 1964 (தைவான்)

மேற்கோள்கள்

தொகு
  1. Nahirnić, Ana; Beshkov, Stoyan (21 October 2015). "The first report of Japanese oak silkmoth Antheraea yamamai (Guérin-Méneville, 1861) (Lepidoptera: Saturniidae) in Montenegro". ZooNotes (82): 1–4. http://www.zoonotes.bio.uni-plovdiv.bg/ZooNotes_2015/ZooNotes_82_2015_Nahirnic_Beshkov.pdf. பார்த்த நாள்: 8 March 2021. 
  2. "Deggendorf and Passau report" (PDF). Archived from the original (PDF) on October 7, 2011. பார்க்கப்பட்ட நாள் October 18, 2011.
  3. See Antheraea polyphemus, Gary Botting
  4. "Information sheet". United Nations FAO. Archived from the original on 2012-10-21.
  5. Park, Seung-Won; Goo, Tae-Won; Kim, Iksoo; Kim, Minjee; Hwang, Jae-Sam; Kim, Seong-Wan; Choi, Kwang-Ho; Kim, Su-Bae et al. (2018-01-01). "Genome sequence of the Japanese oak silk moth, Antheraea yamamai: the first draft genome in the family Saturniidae" (in en). GigaScience 7 (1). doi:10.1093/gigascience/gix113. பப்மெட்:29186418. 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆந்திரேயா_யமாமை&oldid=3830283" இலிருந்து மீள்விக்கப்பட்டது