ஆந்திர விஷ்ணு
ஸ்ரீகாகுளம் மகாவிஷ்ணு சிலை என்றும் அழைக்கப்படும் ஆந்திர விஷ்ணு (Andhra Vishnu) சிலை, ஆந்திராவில் முன்பிருந்த பழைய கோவிலில் அமைக்கப்பட்டது. கோயிலில் வழிபட்ட முந்தைய தெய்வம் எதுவென்று தெரியவில்லை.
ஆந்திர விஷ்ணு கோயில்
தொகுகோயிலின் தெய்வம் ஆந்திர மகா விஷ்ணு அல்லது ஸ்ரீகாகுளந்திர மகா விஷ்ணு என்று அழைக்கப்படுகிறது. கோயிலின் பிரதான கருவறை சாதவாகனப் பேரரசர்களின் காலத்தில் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது. சாதவாகனர்கள் எந்த தெய்வத்துக்காக இக்கோவிலைக் கட்டினார்கள் என்பது தெரியவில்லை.[1] முஸ்லிம் தாக்குதல்களால் சேதமைடைந்த பிறகு சல்லப்பள்ளியைச் சேர்ந்த எர்லகட மன்னர்களால் இந்த கோயில் பழுதுபார்க்கப்பட்டு வழிபடப்பட்டு வந்துள்ளது.[2]
ஒருமுறை விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயன் தனது கலிங்கப் பயணத்தின்போது விசயவாடா வழியாக பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் இக்கோயிலைப் பற்ரி அறிந்து ஸ்ரீகாகுளம் கிராமத்திற்கு வருகை புரிந்தார். அந்த நேரத்தில் அவர் ஏகாதசி விரதத்தை மேற்கொண்டார். ஆந்திர விஷ்ணு கிருஷ்ணதேவராயனுக்கு ஒரு அதிகாலை நேரத்தில் தனது கனவில் தோன்றியதாக குறிப்பிட்டுள்ளான்.[3][4]
புகைப்படங்கள்
தொகு-
ஆந்திர விஷ்ணு கோவிலில் காணப்படும் [[பிள்ளையார்] சிற்பம்
-
ஆந்திர விஷ்ணு கோவிலின் கோபுரம்
-
ஆந்திர விஷ்ணு கோவிலில் காணப்படும் விஷ்ணுவின் சிற்பம்
-
ஆந்திர விஷ்ணு கோவிலில் காணப்படும் துர்கையின் சிற்பம்
-
ஆந்திர விஷ்ணு கோவிலின் பின்பக்கத் தோற்றம்
-
கோயிலின் ஒரு பரந்தக் காட்சி
மேற்கோள்கள்
தொகு- ↑ Early history of Vaishnavism in South India by Krishnaswami Aiyangar, Sakkottai, 1871-1947
- ↑ Sītāpati, Giḍugu Vēṅkaṭa (1968). History of Telugu Literature (in ஆங்கிலம்). Sahitya Akademi. p. 52.
- ↑ History of Telugu literature, Giḍugu Vēṅkaṭa Sītāpati, Sahitya Akademi, 1968.
- ↑ Forms of Knowledge in Early Modern Asia: Explorations in the Intellectual History of India and Tibet, 1500-1800, By Sheldon Pollock, Duke University Press, 2011.