ஆனந்தேஸ்வரம் மகாதேவர் கோயில்

கேரளாவில் உள்ள சிவன் கோவில்

ஆனந்தேஸ்வரம் மகாதேவர் கோவில் (Anandeshwaram Mahadeva Temple) இது தென்னிந்திய மாநிலமான கேரளாவில் உள்ள ஆலப்புழா மாவட்டத்தின் செங்கனூர் வட்டத்திலுள்ள பாண்டநாட்டில் அமைந்துள்ளது. இந்த கோயில் செங்கனூருக்கு மேற்கே 6 கிமீ (3.7 மைல்) தொலைவிலும், மன்னருக்கு கிழக்கே 4 கிமீ (2.5 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது.

ஆனந்தேஸ்வரம் மகாதேவர் கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளா
மாவட்டம்:ஆலப்புழா
அமைவு:செங்கனூர்
கோயில் தகவல்கள்

ஒரு இந்துக் கோயிலான இந்த ஆலயம் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் முன்பு பம்பை ஆற்றங்கரையில் இருந்தது. ஆற்றின் ஓட்டத்தின் மாற்றப்பட்ட திசையால் அது அழிக்கப்பட்டது.[1][2][3] பின்னர், இந்த தெய்வம் அருகிலுள்ள இடத்திற்கு மாற்றப்பட்டது. மேல்யம், ஆனந்தேஸ்வரம் மகாதேவர் கோவில் என்றும் அழைக்கப்பட்டது. வஞ்சிபுழா மடம் முன்னர் இதை நிர்வகித்து வந்தது.

முக்கிய நாட்கள்

தொகு

மகா சிவராத்திரி: கும்ப மாதத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி முக்கிய திருவிழாவாகும்.

சப்தாக யக்னம்: ஒவ்வொரு ஆண்டும் சப்தாகம் 7 நாட்கள் பிரார்த்தனையுடனும், பக்தர்களுக்கு பிரசாத விநியோகத்துடனும் கொண்டாடப்படுகிறது.

நவாக யகனம்: ஒவ்வொரு ஆண்டும் 'நவாக யக்னம்' 9 நாட்கள் பிரார்த்தனையுடனும், பக்தர்களுக்கு பிரசாத விநியோகத்துடனும் கொண்டாடப்படுகிறது.

பரையெடுப்பு: மகா சிவராத்திரிக்கு முன்னதாக, பண்டிகை காலத்தில் பரையெடுப்பு நடக்கிறது. பாண்டநாடு பகுதியில் உள்ள மக்களின் வீடுகளுக்கு மகாதேவரன் வருகை தருவதாக நம்பப்படுகிறது.

துணை தெய்வங்கள்

தொகு

மற்ற இந்துக் கோவில்களைப் போலவே, இங்கும் மற்ற தெய்வங்களின் சிவாலயங்கள் உள்ளன. இந்த தெய்வங்களில் மகா விஷ்ணு, பார்வதி, புவனேஸ்வரி, பிள்ளையார், சாஸ்தா, யக்சியம்மா, நாக தேவதை போன்றவை உள்ளது

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "TEMPLES OF ALAPPUZHA". keralawindow.net. பார்க்கப்பட்ட நாள் 10 December 2013.
  2. "Temples in Kerala, India". hinduonline.co. பார்க்கப்பட்ட நாள் 10 December 2013.