ஆனந்த கோபால் பந்தோபாத்யாய்

ஆனந்த கோபால் பந்தோபாத்யாய் (Ananda Gopal Bandopadhyay) (பிறப்பு: ஏப்ரல் 28, 1942, உத்தரபிரதேசம் ) இந்தியாவைச் சேர்ந்த கைம்முரசுக் கலைஞராவார். பெனாரஸ் கரானாவின் பாணியில் இவரது ஆசிரியர் மகாதேவ் பிரசாத் மிஸ்ரா என்பவரிடம் பயிற்சி பெற்றார். [1] இவரது தந்தை ராதா கோபால் பந்தோபாத்யாய் ஒரு தொழில்முறைப் பாடகர். ஆனந்த், பல குறிப்பிடத்தக்க குரல் இசைக்கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். அத்துடன் தனி பதிவுகளை உருவாக்கி, தனி நிகழ்ச்சிகளையும் வழங்கியுள்ளார். [2] [3]

ஆனந்த கோபால் பந்தோபாத்யாய்
பிறப்புஏப்ரல் 28, 1942 (1942-04-28) (அகவை 82)
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுகைம்முரசு இணை கலைஞர்

இசை வாழ்க்கை

தொகு

தனது இசை வாழ்க்கையில், பல குறிப்பிடத்தக்க இந்துஸ்தானி பாடகர்களுடன் இணைந்து இசையினை வழங்கியுள்ளார். [4] [5] பாஸ்டன், நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சலஸ் உட்பட இந்தியாவுக்கு வெளியே பல நகரங்களிலும், பெர்லினில் நடந்த உலக இளைஞர் விழாவிலும் இவர் நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார். [6] பந்தோபாத்யாய் கொல்கத்தாவில் உள்ள ஐ.டி.சி இசை ஆராய்ச்சி கழகத்தின் ஆசிரிய உறுப்பினராக இருந்தார். [7] அத்துடன் அனைத்திந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனின் சிறந்த மதிப்பிடப்பட்ட கலைஞராவார். 

1965 ஆம் ஆண்டில், அனைந்திந்திய வானொலி நடத்திய இசை போட்டியில் முதல் பரிசை வென்றார். 1970 ஆம் ஆண்டில், எத்தியோப்பியா பேரரசர் இவருக்கு ஒரு தங்கப் பதக்கத்தை வழங்கினார். இது வெளிநாட்டு இசைக்கலைஞர்களுக்கு அடிக்கடி வழங்கப்படாத மரியாதையாகும். 2012 இல், தி சால்ட் லேக் இசைச் சங்கத்தினால் இவருக்கு இசை ரத்னா விருது வழங்கப்பட்டது. 

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

ஆனந்த கோபால் பந்தோபாத்யாய் ரேகா என்பவரை மணந்தார். இவர்களுக்கு பயிற்சி பெற்ற தப்லா கலைஞரான பிரண் கோபால் பந்தோபாத்யாய், இந்துஸ்தானி பாடகர் கஸ்தூரி பந்தோபாத்யாய் என்ற இரு மகன்கள் இருக்கின்றனர். [8] [9] [10] [11]

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "Archived copy". Archived from the original on 2014-08-18. பார்க்கப்பட்ட நாள் 2013-10-14.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. http://www.telegraphindia.com/1061208/asp/atleisure/story_7110354.asp#top#cite_ref−4
  3. http://www.telegraphindia.com/1060512/asp/atleisure/story_6211501.asp#top#cite_ref−1
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-16. பார்க்கப்பட்ட நாள் 2021-01-12. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  5. "Archived copy". Archived from the original on 2011-11-27. பார்க்கப்பட்ட நாள் 2013-10-14.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  6. http://www.imsom.org/events/20041023.html
  7. "Archived copy". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-10-14.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  8. "Archived copy". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-10-14.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  9. http://www.telegraphindia.com/1040827/asp/atleisure/story_3683577.asp#top
  10. "Archived copy". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2013-10-14.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-08-19. பார்க்கப்பட்ட நாள் 2021-01-12.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ananda Gopal Bandopadhyay
என்பதில் ஊடகங்கள் உள்ளன.