ஆன்டி இந்தியன்
ஆன்டி இந்தியன் (Anti Indian) என்பது 2021ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி அரசியல் நையாண்டித் திரைப்படமாகும். இதை சி. இளமாறன் எழுதி இயக்கியிருந்தார். ஆதாம் பாவா தயாரித்திருந்தார். இப்படத்தில் நீலச் சட்டை இளமாறன், ராதாரவி, ஆடுகளம் நரேன், 'வழக்கு எண்' முத்துராமன், வேலு பிரபாகரன், கில்லி மாறன், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். [1] படம் 10 திசம்பர் 2021 அன்று வெளியிடப்பட்டது. [2]
ஆன்டி இந்தியன் | |
---|---|
இயக்கம் | இளமாறன் |
தயாரிப்பு | ஆதாம் பாவா |
கதை | இளமாறன் |
இசை | இளமாறன் |
நடிப்பு |
|
படத்தொகுப்பு | ஆர். சுதர்சன் |
வெளியீடு | திசம்பர் 10, 2021 |
ஓட்டம் | 140 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதைச் சுருக்கம்
தொகுதமிழ்நாட்டின் மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் வருகிறது. தேர்தலில் அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். இடைத்தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு பாஷா இறந்துவிடுகிறார். தேர்தல் நேரம் ஆனதால் இறந்தவரை அடக்கம் செய்ய பல்வேறு தடைகள் ஏற்படுகின்றன.[3]
நடிப்பு
தொகு- இளமாறன் - பாட்ஷாவாக
- ஜெயராஜ் - ஏழுமலையாக
- அணில்குமார் - அடியாட்களின் தலைவனாக
- முத்துராமன் - காவல் ஆய்வாளராக
- ஆடுகளம் நரேன் - காவல் துணை ஆணாயராக
- வேலு பிரபாகரன் - ஜமாத் தலைவராக
- ராதாரவி - முதலமைச்சர் செங்குட்டுவனாக
- பசி சத்யா - சரோஜாவின் தோழியாக
- லொள்ளு சபா சேசு - பாஷாவின் மாமாவாக
- விஜயா - சரோஜாவாக
- சார்லஸ் வினோத் - சட்டமன்ற வேட்பாளர் சுபிரமணியனாக
தயாரிப்பு
தொகுபிரபல வலை தள திரைப்பட விமர்சகரான நீலச்சட்டை சட்டை மாறன் எனப்படும் இளமாறன் 2019ஆம் ஆண்டு தான் ஒரு படத்தை இயக்குவதாக அறிவித்தார். ஆன்ட்டி இந்தியன் எனப் பெயரிடப்பட்ட அந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என பல பொறுப்புகளை ஏற்றார். இதையடுத்து படத்தின் முதல் தோற்றம் 2021, ஏப்ரல் 14 அன்று வெளியிடப்பட்டது.[4][5] படத்தின் முதல் தோற்றமானது மூன்று சமயங்கள், சமகால அரசியல் போன்றவற்றை மையமாகக் கொண்டு வெளியாகியுள்ளது. இதில் உள்ள குறியீடுகள் மற்றும் நையாண்டிகள் சர்ச்சையைக் கிளப்பும்படி உள்ளதென சினிமா ஆர்வலர்கள் பலர் கருத்துக்களை கூறினர்.[6]
தணிக்கைச் சான்றிதழ்
தொகுஇந்தப் படத்துக்கு மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்துவிட்டது. நீலச் சட்டை மாறன் தனது படத்தை பெங்களூரில் உள்ள திருத்தக் குழு குழுவிடம் ஏப்ரல் 5,2021 அன்று பரிசீலனைக்காக சமர்ப்பித்தார். அதன் முடிவு அவருக்கு அன்றே தெரிவிக்கப்பட்டது.[7] தணிக்கை வாரியத்தின் திருத்தக் குழு 38 மாற்றங்களைச் செய்யுமாறு படத்தின் தயாரிப்பாளர்களிடம் கேட்டுள்ளதாக கூறப்பட்டது. உத்தா பஞ்சாப், பத்மாவத் படங்களுக்குப் பிறகு, திருத்தக் குழுவிலிருந்து பல வெட்டுக்களை எதிர்கொண்ட படம் ஆண்டி இந்தியன் என்று கூறப்படுகிறது.[8] [9] இதன் தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், தணிக்கைக் குழுவின் முந்தைய குழுக்களின் பரிந்துரைகளை நிராகரித்ததுடன், புதிய குழுவை அமைக்கவும், சரியான வெட்டுக்களுடன் தகுந்த சான்றிதழை வழங்குமாறும் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, ஒரு புதிய குழு படத்தைப் பார்த்து, மூன்று சிறிய திருத்தங்களை மட்டுமே பரிந்துரைத்து U/A சான்றிதழுடன் அனுமதித்தது. [10] [11]
திரைப்பட விழாக்களில்
தொகுஇப்படமானது பிரான்சில் நடைபெறவுள்ள கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. மேலும், பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இந்த படத்தை கொண்டு செல்லும் முயற்சியில் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.[12]
மேற்கோள்கள்
தொகு
- ↑ "Blue Sattai Maran wraps shooting of 'Anti India' - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-10.
- ↑ "Anti Indian". Times of India. பார்க்கப்பட்ட நாள் 18 December 2021.
- ↑ Elamaran (2022-01-12), Anti Indian (Comedy, Drama), Moon Pictures, பார்க்கப்பட்ட நாள் 2021-10-10
- ↑ செய்தி, Anti Indian: ப்ளூ சட்டை மாறனின் ஆன்டி இந்தியன் ஃபர்ஸ்ட் லுக்!, நியூஸ் 18, 2021 மே 14
- ↑ கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் ப்ளூ சட்டை மாறன்... வெளியானது ‘ஆன்டி இண்டியன்’ மோஷன் போஸ்டர்!, நக்கீரன் 2021 மே 14
- ↑ ப்ளூ சட்டை மாறனின் "ஆன்டி இண்டியன்" படத்திற்கு 38 கட் போட்ட Re -Revising கமிட்டி! படக்குழுவின் அதிரடி முடிவு!, ஏசியா நெட், பார்த்த நாள் 2021 ஆகத்து, 7.
- ↑ "'Blue Sattai' Maran's debut film 'Anti Indian' denied certification by CBFC". 7 April 2021.
- ↑ "Revising committee suggests 38 changes to YouTuber Maran's film, Anti Indian - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-10.
- ↑ "Blue Sattai Maran's directorial debut movie 'Anti Indian' banned - Tamil News". IndiaGlitz.com. 2021-04-07. பார்க்கப்பட்ட நாள் 2021-10-10.
- ↑ Manigandan K R - (2021-09-29). "Censor Board finally clears controversial reviewer Blue Sattai Maran's debut film, Anti-Indian, with a U/A certificate!". Cine Observer (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-10.
- ↑ "'Anti Indian' trailer: Blue Sattai Maaran's debut directorial deals with religious politics - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-15.
- ↑ ஒரு குட் நியூஸ், ஒரு பேட் நியூஸ்.. ஆன்டி இண்டியன் படம் பற்றி சொன்ன ப்ளூசட்டை மாறன்.. என்ன தெரியுமா?, செய்தி, tamil.filmibeat.com, 2021 சூன் 19