ஆபீஸ் (தொலைக்காட்சித் தொடர்)

2013 தமிழ் தொலைக்காட்சித் தொடர்

ஆபீஸ் என்பது விஜய் தொலைக்காட்சியில் மார்ச்சு 11, 2013 முதல் சூன் 5, 2015 வரை திங்கள் முதல் வெள்ளி வரை இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு இரண்டு பகுதிகளாக ஒளிபரப்பாகி 562 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்ற பணி சார்ந்த காதல் நகைச்சுவைத் தொடர் ஆகும். இந்த தொடரில் கார்த்திகேயன் என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் நடிக்க இவருக்கு ஜோடியாக ராஜலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் தென்றல் தொடர் புகழ் ஸ்ருதி ராஜ், விஷ்ணுவர்தன் என்ற காதாபாத்திரத்தில் விஷ்ணுவும், லட்சுமி என்ற காதாபாத்திரத்தில் மக்கள் தொலைக்காட்சி தொடர் தொகுப்பாளினி மதுமிலா[1] போன்றோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்கள். இவர்களுடன் சேர்ந்து உதய் மகேஷ், சுசேன் ஜார்ஜ், ஆர்.ரவீந்திரன், சித்தார்த், அழகப்பன் போன்ற பலர் முக்கியாகதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

ஆபீஸ்
வகைபணி
காதல்
நகைச்சுவை
எழுத்துஎஸ்.ரமண கிரிவாசன்
இயக்கம்ராம் விநாயக்
நடிப்புகார்த்திக் ராஜ்
ஸ்ருதி ராஜ்
விஷ்ணு
மதுமிலா
உதய் மகேஷ்
இசைஇளையவன்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்2
அத்தியாயங்கள்562
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்கே. ஜே. கணேஷ்
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 22–24 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்11 மார்ச்சு 2013 (2013-03-11) –
5 சூன் 2015 (2015-06-05)
வெளியிணைப்புகள்
இணையதளம்

இந்த தொடரில் கிராமப்புறத்திலிருந்து சென்னைக்கு வேலைக்கு வரும் ராஜலட்சுமி என்ற ஒரு பெண் எதிர்கொள்ளக்கூடிய விஷயங்கள், வேலை, நட்பு, காதல், திருமணம் எனப் பல கதைகளை உள்ளடக்கி இருக்கின்றது. இந்த தொடரில் நடித்த கார்த்திக் ராஜ், ஸ்ருதி ராஜ், விஷ்ணு மற்றும் மதுமிலா போன்ற நடிகர்களின் நடிப்பு மக்கள் மனதில் அதிகம் பிரபலமானவர்கள் ஆவார். இந்த தொடரின் வெற்றிக்கு இவர்களின் காதல் காட்சிகளும் முக்கிய பங்கு வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.[2]

2014ஆம் ஆண்டு மற்றும் 2015ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சிவிருதுகளின் சிறந்த ஜோடி, சிறந்த நடிகர், விருப்பமான புதுமுக நடிகை, விருப்பமான துணைக்கதாபாத்திரம் போன்ற 15 பிரிவுகளின் கீழ் விருதுகள் பரிந்துரை செய்து 5 விருதுகளை வென்றுள்ளது.

தொடரின் பருவங்கள்

தொகு
பகுதிகள் அத்யாயங்கள் முதலில் ஒளிபரப்பப்பட்டது (சிங்கப்பூர், ஸ்ரீலங்கா மற்றும் மலேசியா தேதிகள்) நேர ம்
முதலில் ஒளிபரப்பப்பட்டது கடைசியாக ஒளிபரப்பப்பட்டது
1 396 11 மார்ச்சு 2013 (2013-03-11) 1 அக்டோபர் 2014 (2014-10-01) திங்கள் - வெள்ளி இரவு 7:30 மணிக்கு & இரவு 10 மணிக்கு
2 166 6 அக்டோபர் 2014 (2014-10-06) 5 சூன் 2015 (2015-06-05) திங்கள் - வெள்ளி இரவு 10 மணிக்கு

கதை சுருக்கம்

தொகு

கிராமத்திலிருந்து சென்னைக்கு வேலைக்கு வரும் ராஜலட்சுமி (ஸ்ருதி ராஜ்). புதிய ஊர் புதிய நண்பர்கள் என பலரை சந்திக்கின்றார். இவர் வேலை செய்யும் பிரிவில் வேலை செய்யும் கார்த்திகேயன் (கார்த்திக் ராஜ்), விஷ்ணுவர்தன் (விஷ்ணு) மற்றும் லட்சுமி (மதுமிலா). இவர்களுடன் நண்பர்களாகும் ராஜி ஒரு கட்டத்தில் ராஜி மற்றும் கார்த்திக் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். ஆனால் ராஜி கார்த்திக்கை விட 3மாதம் வயது மூத்தவர் இதனால் இவர் கொஞ்சம் தயங்கினார், பிறகு தனது காதலை கார்த்திக்கிடம் சொல்கின்றார். அதே தருணம் விஷ்ணு மற்றும் லட்சுமியும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர். ராஜி மற்றும் கார்த்திக் காதல் விடயம் ராஜி குடும்பத்திற்கு தெரியவர இந்த காதலை எதிர்த்தனர். குடும்பத்தை எதிர்த்து இருவரும் திருமணம் செய்கின்றனர். சகபணியாளரும் தோழியமான சூசன் (சுசேன் ஜார்ஜ்) கார்த்திக்கை காதலித்து வந்தார் இவர்களின் திருமணம் தெரிந்ததும் அவர் தற்கொலை செய்துகொள்ள இதனால் மன உளைசலுக்கு ஆளாகும் கார்த்திக் இதனால் இருவருக்கும் பல கருது வேறுபாடு இதனால் இருவரும் கொஞ்ச காலம் பிரித்து வாழ்கின்றனர். மீண்டும் இருவரும் எப்படி ஒன்று சேர்க்கிறார்கள் என்பதை பணி சார்ந்த காதல் நகைச்சுவை காட்ச்சிகளுடன் கதை சொல்லப்படுகின்றது.

நடிகர்கள்

தொகு

பருவம் 1

தொகு

முதன்மை கதாபாத்திரம்

தொகு

துணை கதாபாத்திரம்

தொகு
 • சுசேன் ஜார்ஜ் - சுசேன்
 • அழகப்பன் - அன்பு
 • ஜெமினி மணி - மோகன்
 • அன்பழகன் - கட்டா
 • ராகவேந்திரன் - புலி
 • மதன் -
 • அஸ்வின் குமார் -
 • மஹாலட்சுமி - ஏஞ்சல்
 • ரேகா சுரேஷ் -
 • ஆர்.ரவீந்திரன் -
 • ஈஸ்வர் - கெளதம் விக்டர்
 • டேவிட் சால்மன் - டேவிட்

பருவம் 2

தொகு

முதன்மை கதாபாத்திரம்

தொகு

துணை கதாபாத்திரம்

தொகு
 • அழகப்பன் - அன்பு
 • ஜெமினி மணி - மோகன்
 • அன்பழகன் - கட்டா
 • ராகவேந்திரன் - புலி
 • பவித்ரா
 • பிரீத்தி - மணிமேகலை
 • அணு - மாதவி
 • ஹேமா ராஜ்குமார்
 • ரேகா சுரேஷ் -
 • ஆர்.ரவீந்திரன் -
 • டேவிட் சால்மன் - டேவிட்

நடிகர்களின் தேர்வு

தொகு

இந்த தொடர் முழுக்க முழுக்க பணி சார்ந்த கதை. இந்த தொடரின் முதல் பகுதியில் கனா காணும் காலங்கள் கல்லூரியின் கதை தொடரில் நடித்த கார்த்திக் ராஜ் மற்றும் விஷ்ணு கார்த்திகேயன், விஷ்ணுவர்தன் என்ற காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இது இவர்களின் இரண்டாவது தொடர் மற்றும் முதல் முதன்மை கதாபாத்திரத் தொடர் ஆகும். கார்த்திக்குக்கு ஜோடியாக தென்றல் தொடர் புகழ் ஸ்ருதி ராஜ் ராஜலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை ஆவார். இந்த தொடர் வெற்றிக்கு இவரின் பிரபலமும் ஒரு காரணம் ஆகும். விஷ்ணுவுக்கு ஜோடியாக மக்கள் தொலைக்காட்சி தொகுப்பாளினியும் இலங்கையை பூர்விகமாக கொண்ட தொகுப்பாளினி மதுமிலா நடித்துள்ளார். இதுவே இவரின் முதல் தொடர் ஆகும். அன்பழகன், ராகவேந்திரன், அஸ்வின் குமார், மஹாலட்சுமி ஆகியோர் பணியாளர்களாக நடித்துள்ளார்கள். இந்த தொடரில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சின்னத்திரை நடிகையும் மற்றும் மைனா திரைப்பட நடிகையுமான சுசேன் ஜார்ஜ் நடித்துள்ளார். ஆபீஸ் இன் தலைவராக சின்னத்திரை நடிகர் உதய் மகேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் ஆர்.ரவீந்திரன், ஈஸ்வர், டேவிட் சால்மன் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

இரண்டாம் பகுதியில் என் பெயர் மீனாட்சி தொடர் புகழ் சித்தார் கமல் என்ற முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார. இவர்களுடன் பவித்ரா, அணு, ஹேமா ராஜ்குமார், பிரீத்தி போன்ற பல புதிய நடிகர் நடிகைகளும் நடித்துள்ளார்கள்.

மேற்கோள்கள்

தொகு
 1. "ஆபிஸ் சீரியல் மதுமிலாவா இது". tamil.filmibeat.com.
 2. "Office Serial Official Website". http://www.hotstar.com/tv/office/1409. 

வெளி இணைப்புகள்

தொகு