ஆப்கானித்தானின் விவசாயத்தில் பெண்கள்
ஆப்கானித்தானின் விவசாயத்தில் பெண்கள் (Women in agriculture in Afghanistan) ஆப்கானித்தானில் விவசாயத்தில் பெண்களின் பங்கு நாட்டின் கலாச்சார நிலப்பரப்பால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆப்கானித்தானில் விவசாயமும் விவசாய தொழில்களும் கிட்டத்தட்ட பாதி பெண்களை உள்ளடக்கியுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், பெண்கள் பண்ணை வேலைக்கு பங்களித்து வருகின்றனர். மேலும், அவர்களின் பங்களிப்புகளுக்காக பணம் அல்லது பண்டமாற்று பொருட்களை சம்பாதித்து வருகின்றனர்.
வரலாறு
தொகுஅமெரிக்காவில் உள்ள அமிஷ் மக்களைளைப் போலவே, ஆப்கானித்தானின் ஆண்கள் பாரம்பரியமாக ஆப்கானித்தானின் விவசாயத்தில் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அதே நேரத்தில் அவர்களின் பெண்கள் எப்போதாவது வேலை வயல்களுக்கு அல்லது கால்நடைகளை வளர்க்க உதவுகிறார்கள்.[1] தானிய உற்பத்தியும் பாரம்பரியமாக ஆப்கானித்தானில் ஆண் விவசாயிகளால் முதன்மையாக செய்யப்படுகிறது.[2]
ஆப்கானித்தானில் பெண்களுக்கு குறைந்த நில உரிமைகளே உள்ளன. இருப்பினும் ஆப்கனின் அரசியலமைப்பு பெண்களுக்கு நிலத்தை சொந்தமாக்க அனுமதிக்கிறது. மேலும், இசுலாமியச் சட்ட முறைமையில் விதவைகளும், மகள்களும் நிலத்தின் ஒரு பகுதியை வாரிசாகப் பெறுவதற்கான ஏற்பாடுகள் உள்ளன.[3] நாட்டின் சில பகுதிகளில் நிலத்தை சொந்தமாக அல்லது நிர்வகிக்கும் பெண்கள் அதை விற்க முடியாது. மேலும் நிலம் பரம்பரை வழியாக அனுப்பப்படுகிறது.[4] பல பெண்களும் பாரம்பரியமாக தங்கள் இயக்கங்களில் தடைசெய்யப்பட்டுள்ளனர். பெரும்பாலும் தங்கள் கிராமங்களுக்கு வெளியே பயணம் செய்ய முடியவில்லை. [4]
நவீன விவசாயம்
தொகுஇன்று, விவசாயப் பணியாளர்களில் கிட்டத்தட்ட பாதி பெண்கள் உள்ளனர். இருப்பினும் பல கிராமப்புறங்களில், அவர்கள் இன்னும் ஓரங்கட்டப்பட்டுள்ளனர்.[5] ஆப்கானித்தானில் விவசாயத்திற்கான பெண்களின் பங்களிப்புகள் பெரும்பாலும் "குறைவான அளவே அளிக்கப்படுகின்றன."[6] அபினி, கால்நடை, பால் பொருள் போன்றவற்றில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. ஆனால் அவர்களுக்கு அரிதாகவே சம்பளம் கிடைக்கிறது. ஆயினும் விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பு பெரும்பாலும் "விவசாய உற்பத்திக்கும், ஊட்டச்சத்து பாதுகாப்பையும் மேம்படுத்துவதற்கும் முக்கியம்" என்று கருதப்படுகிறது.[7] பெண்கள் "தங்கள் சமூகங்களில் உறுதித்தன்மைக்கு ஒரு சக்தி"யாக இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சொந்த வீடுகளில் மாற்றத்தின் முகவர்களாகவும் பார்க்கப்படுகிறார்கள்.[8]
சமீபத்திய ஆண்டுகளில் ஆப்கானித்தானில் சிறிய கிராம பண்ணை தொழிற்சங்கங்களை ஏற்பாடு செய்வதில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். விவசாய சங்கங்களுடனான பெண்களின் பணிகள் அவர்கள் வாழும் பகுதிகளில் அவர்கள் நிலையை உயர்த்தியுள்ளன. அங்கு அவர்கள் இனி ஆண்களின் மனைவிகளாகவோ அல்லது தாய்மார்கள் என்றோ அழைக்கப்படுவதில்லை. மாறாக சங்கத்தில் அவர்களின் பாத்திரங்களால் அளவிடப்படுகின்றனர். கூடுதலாக, பெண்கள் சந்தையில் சிறப்பாக போட்டியிடும் முட்டைக்கோசு, பூக்கோசு, தக்காளி, பீன்சு போன்ற புதிய வகை பயிர்களை அறிமுகப்படுத்த உதவியுள்ளனர்.
பர்வான்-பஸ்தானில், பெண்கள் தானியங்களை உற்பத்தி செய்வதில் ஈடுபட வாய்ப்பு கிடைத்தது. மேலும், "கிராமம் சார்ந்த விதை நிறுவனங்களை" உருவாக்கியுள்ளது.[2] காபூலுக்கு வெளியே, பெண்களுக்கான உழவர் பயிற்சித் திட்டங்கள் 2009 முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்கள் பெண்கள் தங்கள் சொந்த பணத்தை சம்பாதிக்கவும் நிதி சுதந்திரத்தை அடையவும் அனுமதிக்கிறது.
ஆப்கானித்தானுக்கான உலகளாவிய கூட்டனி போன்ற அரசு சாரா நிறுவனங்கள் பெண்கள் விவசாயத்தில் அதிக ஈடுபாடு கொள்ள உதவியது.[9] இத்தகைய முயற்சிகளாக பழத்தோட்டங்களை புத்துயிர் பெறவும், குளிர்பதன வசதிகளை உருவாக்கவும் , கல்வி வளங்களை வழங்கவும் உதவியது.[6] பெண்களின் விவசாயத் தொழிலுக்கு உதவிய மற்றொரு திட்டம் தேசிய ஒற்றுமைத் திட்டம் ஆகும். இது ஆப்கானித்தான் கிராமப்புற மறுவாழ்வு மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தால் 2003இல் உருவாக்கப்பட்டது.[1] இது பெண்களுக்கு விவசாய வளங்களை வழங்குகிறது. இதில் கோழிகளின் மானியம், வரிச் சலுகைகள், அவர்களின் வணிகங்களுக்கான சந்தைப்படுத்தல் ஆகியவை அடங்கும்.[1]
பாலின அடிப்படையிலான பாகுபாடு
தொகுசில ஆப்கானிய பெண்கள் தங்கள் பாலினம் காரணமாக தங்கள் விளைபொருட்களை விற்பதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். பக்லான் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண் தனது சொந்த அனுபவத்தை விவரித்தார்: "நான் என் பழங்களை விற்பது பற்றி பேச கடைக்காரர்களை சந்தித்தபோது எனக்கு மிகவும் எரிச்சலூட்டுகிறது. 'நீங்கள் ஒரு பெண் என்பதால் உங்கள் குடும்பத்திலிருந்து ஒரு ஆணை அனுப்பி அனுப்புங்கள்' என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள்."[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Mohammadai, Arzo (23 June 2016). "Afghan Women Take on Farming". Global Voices. பார்க்கப்பட்ட நாள் 12 November 2016.
- ↑ 2.0 2.1 Lala-Pritchard, Tana (9 March 2016). "Women Farmers in Afghanistan Score Success With Village Seed Enterprise". CGIAR. Archived from the original on 5 ஏப்ரல் 2016. பார்க்கப்பட்ட நாள் 12 November 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Afghanistan: Land Ownership and Agricultural Laws Handbook. Vol. 1. International Business Publications. 2011. pp. 47–78. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1438758442.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 4.0 4.1 Grace 2004.
- ↑ "Increased Women's Participation in Field Days in Afghanistan". ICARDA. 4 October 2015. Archived from the original on 28 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 12 November 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ 6.0 6.1 Thompson, Suzanne. "Planting Seeds in Afghanistan". International Museum of Women. Global Fund for Women. Archived from the original on 24 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 12 November 2016.
- ↑ "Afghanistan: Launch of National Strategy on Women in Agriculture Development". Food and Agriculture Organization of the United Nations. Archived from the original on 12 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 12 November 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Deveraux, Taryn. "Strengthening Agricultural Extension for Female Afghan Farmers". YPARD. Archived from the original on 17 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 12 November 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Amid Afghanistan's Turmoil, Farmers Learn And Thrive". http://www.huffingtonpost.com/yael-fischer/amid-afghanistans-turmoil_b_406682.html.