முதன்மை பட்டியைத் திறக்கவும்
வட கரொலைனாவில் ஆப்பலேச்சிய மலைத்தொடர்

ஆப்பலேச்சியன்ஸ் அல்லது ஆப்பலேச்சிய மலைத்தொடர் வட அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பெரும் மலைத்தொடர்களில் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் அலபாமா மற்றும் ஜோர்ஜியா மாநிலங்களிலிருந்து தென்கிழக்கு கனடாவிலிருக்கும் நியூஃபென்லேன்ட் தீவு வரை தொடரும் ஆப்பலேச்சியங்களில் மிகவும் உயரமான மலை, 2,037 மீட்டர் அளவில் உயரமான வட கரொலைனாவின் மௌண்ட் மிச்சல் ஆகும்.

1528ல் ஒரு எசுப்பானிய நாடுகாண் பயணி "அப்பலாச்சென்" என்று பெயருடன் ஒரு பழங்குடி நகரத்தைப் பார்த்து இந்த மலைத்தொடருக்கு பெயர்வைத்தார்.

இந்த மலைத்தொடரில் சில சிறு மலைத்தொடர்கள் ஜோர்ஜியாவின் புளூ ரிஜ், நியூ யோர்க்கின் அடிராண்டாக், டென்னசியின் பிரதான ஸ்மோக்கிகள் ஆகும்.