ஆப்பிள் கடிகாரம்

ஆப்பிள் கடிகாரம் (Apple Watch) ஆப்பிள் நிறுவனம் உருவாக்கியுள்ள சுட்டிக்கடிகாரம் ஆகும். இதனை அதன் தலைவர் டிம் குக் செப்டம்பர் 9, 2014 அன்று அறிமுகப்படுத்தினார்; ஏப்ரல், 2015 முதல் விற்பனைக்கு வரவுள்ளது.[5][6][7] இக்கடிகாரத்தில் துல்லியமான நேரம் காட்டுவதுடன் உடற்றிறன் சுவடு தொடரவும் உடல்நலம் பேணவும் செயலிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஐஓஎஸ் மற்றும் பிற ஆப்பிள் கருவிகளுடனும் சேவைகளுடனும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிகாரம் கடிகாரம், விளையாட்டு, எடிசன் என மூன்று நாகரிகப் பாணிகளில் (கலெக்சன்சு) வெளியிடப்படவுள்ளது; ஒவ்வொன்றும் கலங்கள், கைப்பட்டைகள் இவற்றில் மாற்றமுடையவை. எடிசன் என்பது 18 காரட் தங்கத்திலான கலத்துடன் மிக உயர்ந்த விலையில் ஆபரண துணையாடையாக வருகின்றது. இதன் பல செயற்பாடுகளுக்கு ஐ-போனுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஐபோன் 5 மற்றும் பிந்தைய iOS 8.2 இயங்கும் கருவிகளுடன் ஒத்தியங்கக்கூடியது.

ஆப்பிள் கடிகாரம்
உருவாக்குனர்ஆப்பிள் நிறுவனம்
உற்பத்தியாளர்குவாண்டா கம்ப்யூட்டர்[1]
(contract manufacturer)
வகைசுட்டிக்கடிகாரம்
வெளியீட்டு தேதிஏப்ரல் 24, 2015
விலைஐஅ$349இலிருந்து[2]
இயக்க அமைப்புகடிகார இயக்குதளம்[3][4]
Displayநீலம் (இரத்தினம்) (ஆப்பிள் கடிகாரம், ஆப்பிள் கடிகாரம் எடிசன்), வலுவூட்டப்பட்ட கண்ணாடி (ஆப்பிள் கடிகாரம் விளையாட்டு), பிரிதிறன் 312 x 390 பிக்செல்கள் (302 ppi)
Controller inputபல்முனைத் தொடு இடைமுகம் விழித்திரை காட்சி
Connectivityபுளூடூத் 4, என்எப்சி, ஒய்-ஃபை
Dimensionsஇரு கல அளவுகளில்: 38 மிமீ, 42 மிமீ (உயரம்)
Backward
compatibility
ஐபோன் 5 மற்றும் பிந்தைய iOS 8.2 இயங்கும் கருவிகளுடன் ஒத்தியங்கக்கூடியது.
வலைத்தளம்www.apple.com/watch

மேற்சான்றுகள் தொகு

  1. Eva Dou (June 20, 2014). "Who Is Apple's Watch Maker?". Wall Street Journal. பார்க்கப்பட்ட நாள் February 8, 2015.
  2. Kelion, Leo (March 10, 2015). "Apple Watch prices and apps revealed". BBC News Online. http://www.bbc.com/news/technology-31794823. பார்த்த நாள்: March 10, 2015. 
  3. "Apple Watch - Overview". ஆப்பிள். பார்க்கப்பட்ட நாள் September 9, 2014.
  4. "Apple Watch - Technology". ஆப்பிள். பார்க்கப்பட்ட நாள் September 9, 2014.
  5. http://store.apple.com/us
  6. "The Verge live blog". The Verge. Vox Media. September 9, 2014. பார்க்கப்பட்ட நாள் September 10, 2014.
  7. Etherington, Darrell. "Tim Cook Says Apple Watch Ships In April". TechCrunch. AOL. பார்க்கப்பட்ட நாள் January 28, 2015.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆப்பிள்_கடிகாரம்&oldid=2955392" இலிருந்து மீள்விக்கப்பட்டது