ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை உறுப்பினர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை உறுப்பினர்களின் பட்டியல் (List of Lok Sabha members from the Aam Aadmi Party) என்பது இந்திய அரசியல் கட்சியான ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவையில் உறுப்பினர்களாக உள்ளவர்களின் பட்டியல் ஆகும். ஆம் ஆத்மி கட்சி நவம்பர் 2012-இல் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் அவரது தோழர்களால் நிறுவப்பட்டது. இது தற்போது இரண்டு மாநிலங்களில் ஆளும் கட்சியாக உள்ளது. இவை தில்லி, இந்தியாவின் தலைநகர் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலம். தற்போது, மக்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை உறுப்பினராக சுசில் குமார் ரிங்கு, ஜலந்தரில் இருந்து இடைத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வ. எண் தொகுதி பெயர் [1] படம் கால ஆரம்பம் கால முடிவு குறிப்பு
1 ஃபதேகர் சாஹிப் ஹரிந்தர் சிங் கல்சா 2014 2019 16வது மக்களவை
2 ஃபரித்கோட் சாது சிங் 2014 2019
3 பாட்டியாலா தரம்வீர் காந்தி 2014 2019
4 சங்ரூர் பகவந்த் மான் 2014 2019
2019 2022 17வது மக்களவை
பதவி விலகி, பொறுப்பேற்றார்

பஞ்சாப் முதல்வராக

5 ஜலந்தர் சுஷில் குமார் ரிங்கு 2023 பதவியில் 2023 ஜலந்தர் இடைத்தேர்தல்

மேற்கோள்கள் தொகு

  1. "Statewise List". rajyasabha.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-06-13.

வெளி இணைப்புகள் தொகு