ஆயுஷ் அமைச்சகம்
ஆயுஷ் அமைச்சகம் (Ministry of Ayush) என்பது இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும். இதன் தற்போதைய அமைச்சராக சர்பானந்த சோனாவால் மற்றும் இராஜாங்க அமைச்சராக மகேந்திரா முஞ்ச்பரா உள்ளனர்.[1] இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேத மருத்துவம், சித்த மருத்துவம், யூனானி மருத்துவம், இயற்கை மருத்துவம், ஓமியோபதி, சோவா-ரிக்பா மற்றும் யோகாசனம் ஆகிய கல்விகளை மேம்படுத்தவும், ஆராய்ச்சி மற்றும் விளம்பரப்படுத்த இந்த அமைச்சகம் செயல்படுகிறது.
அமைச்சகம் மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 9 நவம்பர் 2014 |
ஆட்சி எல்லை | இந்திய அரசு |
பொறுப்பான அமைச்சர்கள் |
|
அமைச்சகம் தலைமை |
|
மூல அமைச்சகம் | சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் |
வலைத்தளம் | ayush |
வரலாறு
தொகு1995ஆம் ஆண்டில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் கீழ் இந்திய மருத்துவ முறைகளுக்கான துறை நிறுவப்பட்டது. 9 நவம்பர் 2014 அன்று இந்திய மருத்துமுறைகளுக்கான துறை ஆயூஷ் அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.[2]
நிறுவனங்கள்
தொகுஇந்த அமைச்சகத்தின் கீழ் உள்ள நிறுவனங்கள்:[3]
- தேசிய ஓமியோபதி நிறுவனம்[4]
- தேசிய சித்தா நிறுவனம் [5]
- தேசிய யுனானி மருத்துவ நிறுவனம் [6]
- தேசிய ஆயுர்வேத நிறுவனம்
- தேசிய இயற்கை மருத்துவ நிறுவனம்
- மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம்
- வடகிழக்கு தேசிய ஆயுர்வேதம் மற்றும் இயற்கை மருத்துவ நிறுவனம்
- வடகிழக்கு நாட்டுப்புற மருத்துவம்
ஒழுங்குமுறை அமைப்புகள்
தொகுஇந்த அமைச்சகம் கீழ் கண்ட ஒழுங்குமுறை அமைப்புகள் கொண்டுள்ளது.
- இந்திய மருத்துவ முறைகளுக்கான மத்திய ஆணையம்.[7]
- மத்திய ஓமியாபதி மன்றம்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Ministers and their Ministries of India
- ↑ Bhatia, Rahul; Lasseter, Tom (May 23, 2017). "Modi's Yogi" (in en). Reuters. http://www.reuters.com/investigates/special-report/india-modi-ramdev/.
- ↑ "Institutes under AYUSH" (PDF). Archived from the original (PDF) on 2021-06-03. பார்க்கப்பட்ட நாள் 2023-05-17.
- ↑ "About Us". NATIONAL INSTITUTE OF HOMOEOPATHY.
- ↑ Manikandan, K. (1 September 2005). "National Institute of Siddha a milestone in health care". தி இந்து (Chennai) இம் மூலத்தில் இருந்து 7 நவம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071107022440/http://www.hindu.com/2005/09/01/stories/2005090114280700.htm.
- ↑ "National Institute of Unani Medicine, Bangalore". AYUSH. Archived from the original on 2013-12-20. பார்க்கப்பட்ட நாள் 2013-12-20.
- ↑ "National Commission for Indian System of Medicine". 11 August 2022.
{{cite web}}
: CS1 maint: url-status (link)