ஆரஞ்சு மார்பு பச்சைப் புறா

பறவை இனம்

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Treron|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}

ஆரஞ்சு மார்பு பச்சைப் புறா ( Orange-breasted green pigeon ) என்பது இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்காசியாவின் சில பகுதிகளில் இமயமலைக்கு தெற்கே வெப்பமண்டல ஆசியா முழுவதும் காணப்படும் ஒரு புறா ஆகும். மற்ற பச்சை புறாக்களைப் போலவே, இவை முதன்மையாக சிறிய பழங்களை உண்கிறது. இவை ஜோடிகளாகவோ அல்லது சிறிய கூட்டமாகவோ காணப்படலாம். இவை பொதுவாக அமைதியாக உணவு தேடி, மரங்களில் மெதுவாக நடக்கும். இவற்றின் கழுத்து நீலச்சாம்பலாகவும், உச்சி மஞ்சள் கலந்த பச்சையாகவும் இருக்கும். மேல் வால் வெண்கல நிறத்திலும், கீழ் வாலடி செம்பழுப்பு நிறத்தில் இருக்கும். ஆண் பறவையின் மேல் மார்பில் இளஞ்சிவப்பு உள்ளது. மேலும் பெண் பறவைக்கு பிரகாசமான மஞ்சள் மார்பு உள்ளது.

Orange-breasted green pigeon
ஆண் T. b. leggei
இலங்கை யால தேசிய வனம்
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Treron
இனம்:
இருசொற் பெயரீடு
Treron bicinctus
(ஜெர்டன், 1840)
வேறு பெயர்கள்

Osmotreron bicincta
Vinago bicincta
Dendrophasa bicincta

அடையாளம்

தொகு
 
இந்தியாவின் சுந்தரவனக்காட்டில் முதிர்ந்த ஆண்

இப்பறவை மஞ்சள் கால் பச்சைப்புறா மற்றும் சாம்பல் நெற்றி பச்சைப் புறாஉள்ளிட்ட பிற பச்சைப் புறாக்களைப் போலவே தோற்றமளிக்கும். ஆனால் இறக்கையில் அரக்கு நிறம் இல்லை. ஆண் பறவையின் தலையில் சாம்பல் நிறம் இல்லை. ஆண் பறவையின் மேல் மார்பில் ஒரு குறுகிய இளஞ்சிவப்பு பட்டையும் அதன் கீழ் ஆரஞ்சு நிறமும் உள்ளது. வயிறு முதலியன மஞ்சள் கலந்த பச்சையாக இருக்கும். வாலடி மஞ்சள் கலந்த பழுப்பாக இருக்கும். வால் வெளிர் மஞ்சள் புற இறகுகளுடன் காணப்படும். வாலின் மேற்பகுதி சிலேட் சாம்பல் நிறமாக இறுதியில் கறுப்புப் பட்டையோடு முடியும். பெண் பறவைகளின் மேற்பகுதி ஆலிவ் மஞ்சளாகவும், மஞ்சள் கலந்த பச்சை நிற மார்பும், வயிறும் கொண்டு காட்சி தரும். ஆணுக்கு இருப்பதுபோன்ற இளஞ் சிவப்பு ஆரஞ்சுநிறப் பட்டைகளை மேல் மார்பில் காண முடியாது, வாலடி மங்கிய மஞ்சள் பழுப்பாக இருக்கும். பெண் சாம்பல்-தலை பச்சைப் புறாவின் நடுவால் இறகுகள் பச்சையாகவும் இதன் நடுவால் இறகுகள் சிலேட் சாம்பல் நிறமாகவும் இருப்பதுதான் இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாடு.[2] இலங்கையில் உள்ள இப்பறவைகள் ( T. b. leggei ) சிறகு நீளத்தில் சற்று சிறியது, ஆனால் மற்றபடி ஒத்திருக்கிறது.[3][4][5][6] ஹைனன் தீவின் [7] டோம்விலி (ஸ்வின்ஹோ, 1870) மற்றும் ஜாவா மற்றும் பாலியிலிருந்து ஜாவானா ராபின்சன் & க்ளோஸ், 1923 ஆகியவை கிளையினங்களாக அடையாளம் காணப்பட்ட பிற பகுதியில் வாழும் இந்த இனப் பறவைகளில் அடங்கும். தாய்லாந்தில் காணப்படும் இந்தப் பறவைகள் ப்ரீடெர்மிசா பெரும்பாலும் இதன் கிளையின பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.[8]

வாழ்விடமும் பரவலும்

தொகு

இந்த இனம் பசுமையான அடர்ந்த காடுகளில், தெராய் (வட இந்தியா மற்றும் தெற்கு நேபாளத்தில் உள்ள தாழ்நிலப் பகுதி) மற்றும் கீழ் இமயமலையிலிருந்து ( 1,500 m (4,900 அடி) உயரம் வரை ) தெற்கே முக்கியமாக மேற்கு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளிலும், கடற்கரையிலிருந்து வெகு தொலைவில் இல்லாத இலங்கைக் காடுகளிலும் பரவியுள்ளன.[9] இவை பர்மா, தாய்லாந்து, மலாய் தீபகற்பம், வியட்நாம், சாவகம் மற்றும் ஹைனான் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. சிந்து போன்ற இடங்களில் இவை அலைந்து திரிபவையாக பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை பருவக்காற்றில் திசைமாறியவையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றன.[3][10]

நடத்தையும், சூழலியலும்

தொகு

ஆரஞ்சு நிற மார்பக பச்சைப் புறாக்கள் பொதுவாக தனித்தனியாகவோ அல்லது சிறிய கூட்டமாகவோ காணப்படும். இவை வேகமாக பறக்கக் கூடியன. இவை பலவகையான தாவரங்களின் விதைகளையும் பழங்களையும் உண்கின்றன. பெரும்பாலும் அத்திப்பழங்கள் போன்ற பழங்கள் நிறைந்த மரங்களின் கிளைகளில் மெதுவாக நடந்து உணவு தேடுகின்றன. பாலூட்டிகளுக்கு நச்சுத்தன்மையுள்ள பழங்களான எட்டி மரப் பழங்களை உண்பதாக அறியப்படுகிறது. இவை நீண்ட மெல்லிய சீழ்க்கைக் குரலில் பலவிதமாக குரல் கொடுக்கும். இனப்பெருக்க காலத்தில் ஆண் பறவைகள் ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு, ஒன்றையோன்று தங்கள் இறக்கையால் அறைந்து, ஒன்றையோன்று தாக்கிக் கொள்கின்றன. இந்தியாவில் இனப்பெருக்க காலம் மார்ச் முதல் செப்டம்பர் வரை முக்கியமாக ஜூன் மாதத்திற்கு முன்பு. இலங்கையில், இவை முக்கியமாக திசம்பர் முதல் மே வரை இனப்பெருக்கம் செய்கின்றன. மரங்களில் குச்சியைப் பரப்பி இலைகளிடையே இரண்டு முதல் எட்டு மீட்டர் வரை உயரத்தில் கூடு கட்டுகின்றன. இரண்டு வெள்ளை முட்டைகளை இடுகின்றன. இரு பாலினங்களும் அடைகாத்து, சுமார் 12 முதல் 14 நாட்களில் குஞ்சு பொரிக்கின்றன.[3][11]

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Treron bicinctus". IUCN Red List of Threatened Species 2016: e.T22691142A93304079. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22691142A93304079.en. https://www.iucnredlist.org/species/22691142/93304079. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Rasmussen, PC; JC Anderton (2005). Birds of South Asia. The Ripley Guide. Volume 2. Smithsonian Institution and Lynx Edicions. pp. 212–213.
  3. 3.0 3.1 3.2 Ali, S; SD Ripley (1981). Handbook of the Birds of India and Pakistan. Volume 3. Oxford University Press. pp. 104–106.
  4. Jerdon, TC (1864). The birds of India. Volume 3. George Wyman and Co. pp. 449–450.
  5. Blanford, WT (1898). The Fauna of British India, Including Ceylon and Burma. Birds. Volume 4. Taylor and Francis, London. pp. 11–12.
  6. Hartert, E (1927). "Types of birds in the Tring Museum". Novitates Zoologicae 34 (1): 1–38. https://archive.org/stream/novitateszoologi34lond#page/3/mode/1up/. 
  7. Hartert, E (1910). "The birds of hainan". Novitates Zoologicae 17: 189–254. https://archive.org/stream/novitateszoologi17lond#page/192/mode/1up. 
  8. Peters, JL (1937). Check-list of birds of the World. Volume 3. Harvard University Press. pp. 19–20.
  9. Ferguson, HS; Bourdillon, TF (1904). "The birds of Travancore with notes on their nidification. Part III.". J. Bombay Nat. Hist. Soc. 16 (1): 1–18. https://archive.org/stream/journalofbombayn16abomb#page/1/mode/1up/. 
  10. Eates, KR (1938). "Occurrence of the Lesser Orange-breasted Green Pigeon (Dendrophasa bicincta bicincta) at Keamari, Sind". J. Bombay Nat. Hist. Soc. 40 (2): 330–331. https://biodiversitylibrary.org/page/47602642. 
  11. Baker, EC Stuart (1913). Indian pigeons and doves. Witherby and Co. pp. 49–55.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Treron bicinctus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.