ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் (நூல்)

ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் (Harry Potter and the Prisoner of Azkaban) என்பது ஜே. கே. ரௌலிங்கால் எழுதப்பட்ட ஆரி பாட்டர் தொடரின் மூன்றாவது நூலாகும். இப்புத்தகத்தின் கதை ஆரி பாட்டர் என்ற ஹாக்வாட்சு மந்திரவாதப் பள்ளியில் மூன்றாவது வருடம் மந்திர வித்தைகளை பயில்வது தொடர்கிறது. இத்தொடர் ஆரி பாட்டரும் அவனது நண்பர்களான ரொனால்ட் வீசுளி மற்றும் ஹெர்மாயினி கிறேன்ஜெர் ஆகியோருடன் சேர்ந்து வோல்டமோர்ட் எனும் கொடியவனின் விசுவாசியாக இருந்தவனும், ஆசுக்கபான் சிறையில் இருந்து தப்பித்த முதல் மனிதனுமான சீரியசு பிளாக் என்ற கொலைகாரனைப் பற்றி ஆராய்வது பற்றி கூறுகிறது.

ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான்
ஆரி பாட்டர் நூல்கள்
Harry Potter and the Prisoner of Azkaban (US cover).jpg
1999இல் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் வெளியான அசல் ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் புத்தக உறை.
ஆசிரியர்ஜே. கே. ரௌலிங்
வகைபுனைவு
வெளியீட்டாளர்கள்புலூம்பரி (UK) (2010-தற்போதும்)
ஆர்த்தர் ஏ. லெவின்/
இசுகொலசுடிக்கு (US)
ரெயின்கோசுட்டு (கனடா 1998-2010)
வெளியீடு8 சூலை 1999 (ஐஇ)
8 செப்டெம்பெர் 1999 (ஐஅநா)
புத்தக இல.மூன்றாவது
விற்பனை68,000 பிரதிகள் (ஐஇ)
கதை காலவரிசை31 சூலை 1993 – 12 June 1994
அத்தியாயங்கள்22
பக்கங்கள்317 (ஐஇ)
435 (ஐஅநா)
சொற்கள்107,253 (ஐஅநா)[1]
ISBN0-7475-4215-5
முன் புத்தகம்ஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு (நூல்)
பின் புத்தகம்ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் (நூல்)

இப்புத்தகம் ஐக்கிய இராச்சியத்தில் 8 சூலை 1999 புலூம்சுபெரியால் வெளியிடப்பட்டது. மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் 8 செப்டெம்பெர் 1999இல் இசுகொலாசுடிக் இங்.கால் வெளியிடப்பட்டது.[2][3][4][5] ரௌலிங் இப்புத்தகத்தை எளிதாக எழுதி முடித்தார். ரௌலிங் இப்புத்தகத்தை தொடங்கியதிலிருந்து ஒரு வருடத்தில் எழுதி முடித்தார். ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் புத்தகம் ஐக்கிய இராச்சியத்தில் மட்டும் வெளியிடப்பட்ட மூன்று நாட்களில் 68,000 பிரதிகளாக விற்கப்பட்டது. மற்றும் தற்போது வரை மூன்று மில்லியனுக்கும் மேலான புத்தகங்கள் விற்கப்பட்டன.[6] இப்புத்தகம் 1999 விட்பிரெட் குழந்தைகள் புத்தக விருது, பிராம் இசுடோக்கர் விருது, 2000 ஆண்டிற்கான சிறந்த கற்பனை நாவலுக்கான லோகசு விருது, மற்றும் சிறந்த நாவலுக்கான குகொ விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளது.

இந்நாவலை மையமாக கொண்டு நாவலின் பெயரிலேயே ஒரு திரைப்படம் 2004இல் வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் $796 மில்லியன் வருவாயை ஈட்டியது. இந்நாவலை மையமாகக் கொண்டு ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் என்ற பெயரில் பல்வேறு தளங்களில் கணணி நிகழ்பட ஆட்டமும் வெளியிடப்பட்டது. இது பல சாதகமான விமர்சனங்களை பெற்றது.

வெளியீடும் வரவேற்பும்தொகு

முன் வெளியீட்டு வரலாறுதொகு

ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் ஆரி பாட்டர் தொடரின் மூன்றாவது பாகமாகும். முதலாவது பாகம், ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் (ஐக்கிய அமெரிக்க நாடுகளில் ஆரி பாட்டர் அண்டு த சோசெரசு இசுடோன்), 26 சூன் 1997இல் புலூம்சுபெரியால் வெளியிடப்பட்டது. மற்றும் இரண்டாவது பாகம், ஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு, 2 சூலை 1998இல் வெளியிடப்பட்டது.[7] ரௌலிங் ஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு நூலை எழுதி முடித்த அடுத்த நாளே ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் நூலை எழுதத் தொடங்கினார்.[8]

தொடரின் முதல் மூன்று புத்தகங்களில் ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் புத்தகமே குறைந்த காலப் பகுதியில் எழுதப்பட்டதாகும். – ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் புத்தகத்தை எழுதி முடிக்க ஐந்து ஆண்டுகள் ஆனது. மற்றும் ஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு நூலை எழுதி முடிக்க இரண்டு ஆண்டுகள் ஆனது. எனினும் ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் நூல் ஒரு ஆண்டு காலத்தில் எழுதி முடிக்கப்பட்டது.[9] ரௌலிங்கின் விருப்பமான எதிர்பார்ப்பாக விளங்கியது ரீமசு லுபின் எனும் கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்துவதாகும்.[9][10]

விமர்சன வரவேற்புக்கள்தொகு

த நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் கிரெகோரி மேகுயரே ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் பற்றி ஒரு விமர்சனம் எழுதியிருந்தார்: அதில் அவர், "இதுவரையில், கதையின் வகையில், இப்புத்தகத்தை புதிதாக எதுவும் செய்யவில்லை, ஆனால் இதுவரையிலும், மிகவும் நல்ல அற்புதமாய் செய்துள்ளனர்."[11] த நியூயார்க் டைம்ஸ் என்ற செய்திதாளில் வெளியான விமர்சனம் ஒன்றில், "ஆரிப்பாட்டர் தொடர் புத்தகங்களில் ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் புத்தகமே சிறந்தது." எனக் குறிப்பிட்டிருந்தது.[12] கிட்சுரீட்.கொம்மின் விமர்சகர் ஒருவர் "இந்த வேகமான சிறந்த கற்பனைக் புத்தகம் உங்களுக்கு ஜே.கே.ரௌலிங் வேலை செய்து கொண்டிருக்கும் அடுத்த நான்கு ஆரி பாட்டர் புத்தகத்திற்கான பசியை தூண்டும். ஆரியின் மூன்றாவது வருடம் மிகவும் கவர்ச்சியானது. இதனை தவற விட வேண்டாம்."[13] "ஒரு அமைதியான நல்ல புத்தகம்" என்று மார்த்தா வி. பர்ரவனோ கூட ஒரு சாதகமான விமர்சனத்தை த கோர்ன் புக் சஞ்சிகைக்கு வெளியிட்டார்.[14]

விருதுகள்தொகு

ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் 1999 நூல்பட்டியல் தொகுப்பாளர்களின் தெரிவு விருது,[15] 1999 இளம் வாசிப்பாளர்களுக்கான சிறந்த வேலைக்கான பிராம் இசுடோக்கர் விருது,[16] 1999 எப்சிஜிபி குழந்தைகள் புத்தக விருது,[17] 1999 குழந்தைகளுக்கான புத்தகங்களின் விட்பிரெட் ஆண்டின் புத்தக விருது,[18] மற்றும் சிறந்த கற்பனை நாவலுக்கான லோகசு விருது [19] போன்ற பல விருதுகளை பெற்றுள்ளது. இது சிறந்த நாவலுக்கான குக்கோ விருதிற்கும் பரிந்துரை செய்யப்பட்டது. அனால் டீப்னஸ் இன் த இசுகையில் தோற்றது[20]. ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் 2004 இந்திய ஓவியத்தூரிகை விருதையும் வென்றுள்ளது.[21] மேலும் 2004 கோலோரடோ நீல தளிர் இளம் வயது வந்தோர் புத்தக விருதையும் வென்றுள்ளது.[22] இது 2000 ஆம் ஆண்டின் அமெரிக்க நூலக சம்மேளன குறிக்கத்தக்க குழந்தைகள் புத்தகங்களுள் ஒன்றாக விளங்குகிறது.[23] மற்றும் இளம் வயது வந்தோரின் சிறந்த புத்தகங்களிலும் ஒன்றாக விளங்குகிறது.[24] இந்நூலுக்கு முன் வந்த இரு நூல்களை விட ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் புத்தகமே 9-11வரையிலான குழந்தைகளுக்கான நெஸ்ட்லே இசுமார்டீசு புத்தக பரிசின் தங்கப்பதக்கத்தை வென்றது. இதன் காரணமாக ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் புத்தகம் நியூ யோர்க் டைம்சின் சிறந்த விற்பனை பட்டியலில் மேலே இருக்கிறது.[25]

விற்பனைதொகு

ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் புத்தகம் ஐக்கிய இராச்சியத்தில் மட்டும் வெளியிடப்பட்ட மூன்று நாட்களில் 68,000 பிரதிகளாக விற்கப்பட்டது. இது இப்புத்தகத்திற்கு பிரித்தானியாவின் வேகமான விற்பனையாகும் புத்தகம் என்ற பெயரை வாங்கித்தந்தது.[6] தி கார்டியன் செய்திதாளின் அடிப்படையில் இப்புத்தகம் 2012 வரை 3,377,906 பிரதிகளாக விற்கப்பட்டுள்ளது.[4]

தழுவல்கள்தொகு

திரைப்படம்தொகு

ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் திரைப்படம் அல்பொன்சோ கோரோன் இயக்கத்தில் இசுடீவ் குலோவ்சு திரைக்கதையில் 2004இல் வெளியானது.[26] இத்திரைப்படம் பொக்சு ஆபிஸில் முதலாவது இடத்தில் இருந்தது. மற்றும் இரு வாரங்களாக அதே இடத்திலும் இருந்தது.[27] இது சர்வதேச ரீதியாக மொத்தமாக 796.7 மில்லிய அமெரிக்க டாலர்களை வருவாயாக ஈடியது.[28] இது ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் திரைப்படத்தை சிரேக் 2விற்கு அடுத்ததாக உள்ள 2004இன் அதிக வருவாயை ஈட்டிய திரைப்படமாக ஆக்கியது. எனினும், அனைத்து எட்டு ஆரி பாட்டர் திரைப்படங்கள் மத்தியில் ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் திரைப்படம் ஈட்டிய வருவாய் குறைவே.[29] எம்பயர் சஞ்சிகையின் 2008இன் 500 எல்லா நேரத்து மாபெரும் திரைப்படங்கள் பட்டியலில் ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் திரைப்படம் 471 இடத்தில் உள்ளது.[30]

நிகழ்பட ஆட்டங்கள்தொகு

மூன்று தனித்துவமான நிகழ்பட ஆட்டங்கள் பல்வேறு மேம்பாட்டாளர்களால் 2004இல் ஏலேக்ட்ரோனிக் ஆர்ட்ஸ் ஆள் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்பட ஆட்டங்கள் கூடுதல் பட்சம் புத்தகத்தையே மையமாகக் கொண்டுள்ளன.

மேம்பாட்டாளர் வெளியீட்டுத் திகதி தளம் வகை ஆட்டநிலை Metacritic
நொவ்வொண்டெர் 25 மே 2004 மைக்ரோசாப்ட் விண்டோசு சாகச-புதிர் விளையாட்டு 68.52%[31] 67/100[32]
கிரிப்டொனைட் கேம் போய் அட்வான்ஸ் நாடகப்பாத்திரம் 69.58%[33] 69/100[34]
இஎ பிரைட் லைட் 29 மே 2004 நின்டென்டோ கேம்கியூப் அதிரடி-சாகச விளையாட்டு 69.74%[35] 67/100[36]
பிளேஸ்டேசன் 2 72.59%[37] 70/100[38]
எக்ஸ் பாக்ஸ் 68.39%[39] 67/100[40]

மேற்கோள்கள்தொகு

  1. "Scholastic Catalog — Product Information". 5 நவம்பர் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 June 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Harry Potter and the Prisoner of Azkaban by J.K. Rowling (Book 3)". about.com. 11 மே 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 July 2013 அன்று பார்க்கப்பட்டது.
  3. "The Harry Potter Books". Pottermore. 23 ஜூலை 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 23 July 2013 அன்று பார்க்கப்பட்டது.
  4. 4.0 4.1 Rogers, Simon (9 August 2012). "The top 100 bestselling books of all time: how does Fifty Shades of Grey compare?". The Guardian (London). http://www.guardian.co.uk/news/datablog/2012/aug/09/best-selling-books-all-time-fifty-shades-grey-compare. பார்த்த நாள்: 19 July 2013. 
  5. "Review: Another harrowing adventure for Harry". Atlanta Journal-Constitution. http://nl.newsbank.com/nl-search/we/Archives?p_product=AT&p_theme=at&p_action=search&p_maxdocs=200&p_topdoc=1&p_text_direct-0=0EADA4A144AB2106&p_field_direct-0=document_id&p_perpage=10&p_sort=YMD_date:D&s_trackval=GooglePM. பார்த்த நாள்: 23 July 2013. 
  6. 6.0 6.1 "Longing for the clock to strike 12". The Telegraph (London). 2 May 2003. http://www.telegraph.co.uk/culture/donotmigrate/3593769/Longing-for-the-clock-to-strike-12.html. பார்த்த நாள்: 20 July 2013. 
  7. "A Potter timeline for muggles". Toronto Star. 14 July 2004. http://www.thestar.com/entertainment/article/235354. பார்த்த நாள்: 21 March 2011. 
  8. "About the Book". The Remembrall. 9 டிசம்பர் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 July 2013 அன்று பார்க்கப்பட்டது.
  9. 9.0 9.1 "Barnes & Noble chat transcript". Accio Quote!. 8 September 1999. 7 November 2010 அன்று பார்க்கப்பட்டது.
  10. Puig, Claudia (27 April 2004). "New 'Potter' movie sneaks in spoilers from upcoming books". USA Today. http://www.usatoday.com/life/movies/news/2004-05-27-potter-movie-book_x.htm. பார்த்த நாள்: 17 October 2010. 
  11. Maguire, Gregory (5 September 1999). "Lord of the Golden Snitch". The New York Times. http://www.nytimes.com/1999/09/05/books/lord-of-the-golden-snitch.html. பார்த்த நாள்: 13 October 2010. 
  12. Macpherson, Karen (1 October 1999). "Rowling has magic touch with 'Prisoner'". The New York Times. 20 July 2013 அன்று பார்க்கப்பட்டது.
  13. Maughan, Shannon. "Kidsreads.com — Harry Potter — The Prisoner of Azkaban". Kidsreads.com. 25 அக்டோபர் 2010 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 November 2010 அன்று பார்க்கப்பட்டது.
  14. Parravano, Martha V. (November 1999). "Harry Potter reviews". The Horn Book Magazine. 24 மே 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 July 2013 அன்று பார்க்கப்பட்டது.
  15. "Booklist Editors' Choice: Books for Youth, 1999 | Booklist Online". Booklist Online. 5 January 2014 அன்று பார்க்கப்பட்டது.
  16. "Bram Stoker Awards 1999". Horror Writers Association. 29 ஏப்ரல் 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 March 2011 அன்று பார்க்கப்பட்டது.
  17. "Awards for the Harry Potter Books". Bloomsbury. 22 ஜூலை 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 5 January 2014 அன்று பார்க்கப்பட்டது.
  18. "Whitbread Prize 1999". The Guardian (London). http://books.guardian.co.uk/specialreports/whitbread/0,,101589,00.html. பார்த்த நாள்: 18 March 2011. 
  19. "2000 Locus Awards". Locus. 2 July 2000. 3 அக்டோபர் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 March 2011 அன்று பார்க்கப்பட்டது.
  20. "2000 Hugo Awards". World Science Fiction Society. 18 March 2011 அன்று பார்க்கப்பட்டது.
  21. "Indian Paintbrush Book Awards By Year 1986–2011" (PDF). Indian Paintbrush Awards. 2004. 23 March 2011 அன்று பார்க்கப்பட்டது.
  22. "Previous Winners | Colorado Blue Spruce Award". Colorado Blue Spruce Award. Blue Spruce Award Committee. 22 மே 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 5 January 2014 அன்று பார்க்கப்பட்டது.
  23. "ALA Notable Children's Books All Ages". Scholastic. 6 November 2007. 23 March 2011 அன்று பார்க்கப்பட்டது.
  24. "Best Books for Young Adults". American Library Association. 2000. 23 March 2011 அன்று பார்க்கப்பட்டது.
  25. "New York Times Best Seller Number Ones Listing". Hawes Publications. 12 நவம்பர் 2019 அன்று மூலம் பரணிடப்பட்டது. 5 January 2014 அன்று பார்க்கப்பட்டது.
  26. "Harry Potter and the Prisoner of Azkaban (2004)". IGN Entertainment, Inc. 1998–2009. 12 December 2009 அன்று பார்க்கப்பட்டது.
  27. "Harry Potter and the Prisoner of Azkaban". IGN Entertainment, Inc. 1998–2009. 22 பிப்ரவரி 2010 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 12 December 2009 அன்று பார்க்கப்பட்டது.
  28. "Harry Potter and the Prisoner of Azkaban (2004)". பாக்சு ஆபிசு மோசோ. 5 February 2009 அன்று பார்க்கப்பட்டது.
  29. "2004 WORLDWIDE GROSSES". Box Office Mojo. 24 September 2007 அன்று பார்க்கப்பட்டது.
  30. "The 500 Greatest Movies of All Time". Empire. 7 November 2010 அன்று பார்க்கப்பட்டது.
  31. "Harry Potter and the Prisoner of Azkaban for PC". GameRankings. 2014-01-29 அன்று பார்க்கப்பட்டது.
  32. "Harry Potter and the Prisoner of Azkaban Critic Reviews for PC". Metacritic. 2014-01-29 அன்று பார்க்கப்பட்டது.
  33. "Harry Potter and the Prisoner of Azkaban for Game Boy Advance". GameRankings. 2014-01-29 அன்று பார்க்கப்பட்டது.
  34. "Harry Potter and the Prisoner of Azkaban Critic Reviews for Game Boy Advance". Metacritic. 2014-01-29 அன்று பார்க்கப்பட்டது.
  35. "Harry Potter and the Prisoner of Azkaban for GameCube". GameRankings. 2014-01-29 அன்று பார்க்கப்பட்டது.
  36. "Harry Potter and the Prisoner of Azkaban Critic Reviews for GameCube". Metacritic. 2014-01-29 அன்று பார்க்கப்பட்டது.
  37. "Harry Potter and the Prisoner of Azkaban for PlayStation 2". GameRankings. 2014-01-29 அன்று பார்க்கப்பட்டது.
  38. "Harry Potter and the Prisoner of Azkaban Critic Reviews for PlayStation 2". Metacritic. 2014-01-29 அன்று பார்க்கப்பட்டது.
  39. "Harry Potter and the Prisoner of Azkaban for Xbox". GameRankings. 2014-01-29 அன்று பார்க்கப்பட்டது.
  40. "Harry Potter and the Prisoner of Azkaban Critic Reviews for Xbox". Metacritic. 2014-01-29 அன்று பார்க்கப்பட்டது.