ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் (திரைப்படம்)

ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் (Harry Potter and the Prisoner of Azkaban)[4][5] என்பது 2004 ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய இராச்சிய- அமெரிக்க நாட்டு கனவுருப்புனைவுத் திரைப்படம் ஆகும். இது புதின எழுத்தாளர் ஜே. கே. ரௌலிங் என்பவர் எழுத்தில் 1998 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளியான நாவலை மையமாக வைத்துஅல்போன்சா குயூரான் என்பர் இயக்க, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து மற்றும் விநியோகம் செய்தது. இந்த திரைப்படத்தில் டேனியல் ராட்க்ளிஃப், ரூபர்ட் கிரின்ட் மற்றும் எம்மா வாட்சன் ஆகியோர் முதன்மை கதாபத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான்
இயக்கம்அல்போன்சா குயூரான்
தயாரிப்புகிரிஷ் கொலம்பஸ்
டேவிட் ஹேமேன்
மார்க் ராட்க்ளிஃப்
மூலக்கதைஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான்
படைத்தவர் ஜே. கே. ரௌலிங்
திரைக்கதைஸ்டீவ் குலவ்ஸ்
இசைஜான் வில்லியம்ஸ்
நடிப்புடேனியல் ராட்க்ளிஃப்
ரூபர்ட் கிரின்ட்
எம்மா வாட்சன்
ராபி கோல்ட்ரேன்[1]
மைக்கேல் காம்பன்
ரிச்சர்ட் ஹாரிஸ்[2]
கேரி ஓல்ட்மன்
அலன் ரிக்மான்
பியோனா ஷா
மேகி ஸ்மித்
திமோதி ஸ்பால்
டேவிட் தெவ்லிஸ்
எம்மா தாம்சன்[3]
ஜூலி வால்டர்ஸ்
ஒளிப்பதிவுமைக்கேல் செரெசின்
படத்தொகுப்புஸ்டீவன் வெயிஸ்பெர்க்
கலையகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
ஹேடே பிலிம்ஸ்
1492 பிக்சர்ஸ்
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
வெளியீடு23 மே 2004 (2004-05-23)(நியூயார்க் நகரம்)
30 மே 2004 (லண்டன்)
31 மே 2004 (ஐக்கிய இராச்சியம்)
4 சூன் 2004 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்142 நிமிடங்கள்
நாடுஐக்கிய இராச்சியம்
அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$130 மில்லியன்
மொத்த வருவாய்$796.2 மில்லியன்

மூன்றாம் ஆண்டு பள்ளியில் படிக்கும் ஆரி பாட்டர், தனது தாய் தந்தையரின் கொலை குற்றத்தில் சம்பத்தப்பட்ட சிரியஸ் பிளாக் என்ற கைதி அஸ்கபானிலிருந்து தப்பித்து ஆரி பாட்டரை கொல்ல நினைப்பதுதான் கதை.

இது ஆரி பாட்டர் திரைப்படத் தொடரின் மூன்றாம் படமாக 31 மே 2004 அன்று ஐக்கிய இராச்சியசியத்திலும் மற்றும் 4 ஜூன் 2004 அன்று அமெரிக்காவில் வெளியானது. இந்த படம் விமர்சன மற்றும் வணிகரீதியான வெற்றி பெற்று உலகளவில் 796 மில்லியன் டாலர்களை வசூலித்தது. மற்றும் 2002 ஆம் ஆண்டு அதிக வசூல் செய்த இரண்டாவது படமாக அமைந்தது. இது 2004 ஆம் ஆண்டில் 77 வது அகாடமி விருதுகளில் சிறந்த அசல் இசை மற்றும் சிறந்த திரை வண்ணம் ஆகியவற்றிற்கு பரிந்துரைக்கப்பட்டது.

இதன் நான்காம் பாகமான ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் என்ற படம் 2005 ஆம் ஆண்டு வெளியானது.

மேற்கோள்கள்தொகு

  1. Horn, Steven (18 February 2004). "An Interview with Robbie Coltrane". IGN. 4 June 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 4 June 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Actor Richard Harris dies". BBC News. 25 October 2002. http://news.bbc.co.uk/1/hi/entertainment/film/2362935.stm. 
  3. Hiatt, Brian (10 October 2003). "Emma Thompson joins "Harry Potter" cast". Entertainment Weekly. 4 June 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 4 June 2020 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Harry Potter and the Prisoner of Azkaban (2004)". AFI Catalog of Feature Films. 17 July 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 24 July 2018 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Harry Potter and the Prisoner of Azkaban (PG)". British Board of Film Classification. 23 November 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2 June 2020 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

இந்த தலைப்பைச் சார்ந்த மேற்கோள்கள் சில விக்கிமேற்கோள் திட்டத்தில் உள்ளன :ஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் (திரைப்படம்)