ஆரோக்கியசாமி பவுல்ராஜ்

(ஆரோக்யசாமி பௌல்ராஜ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆரோக்கியசாமி பவுல்ராஜ் (Arogyaswami J. Paulraj) ஒரு தகவல் தொழில்நுட்ப அறிவியலாளர் ஆவார். தற்போது ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் மின்னியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். பால்ராஜ் 400 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளையும், இரண்டு உரை புத்தகங்களுக்கு ஆசிரியராகவும், 59 அமெரிக்க காப்புரிமைகளுக்கு இணை கண்டுபிடிப்பாளராகவும் உள்ளார். வியத்தகு வகையில் வயர்லெஸ் அமைப்புகளின் செயல்திறனை அதிகரிக்கும் MIMO (பல உள்ளீடு, பல வெளியீடு) என அழைக்கப்படும் ஒரு திருப்புமுனை வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக விளங்குகிறார். MIMO ஆண்டெனாக்களின் கோட்பாடு மற்றும் பயன்பாடுகளில் முன்னோடி பங்களிப்புக்களுக்காக மார்கோனி விருது பெற்றுள்ளார்.[1]

ஆரோக்கியசாமி பவுல்ராஜ்
ஆரோக்கியசாமி பவுல்ராஜ், முனைவர்
பிறப்புபொள்ளாச்சி கோயம்புத்தூர், இந்தியா
தேசியம்அமெரிக்கர்
படித்த கல்வி நிறுவனங்கள்கடற்படை பொறியில் கல்லூரி, லோனாவாலா 1966 B.E.
இந்திய தொழில்நுட்பக் கழகம், புதுதில்லி, 1973, Ph.D.
பணிபேராசிரியர் மின்னியல் துறை ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம்University]]

வரலாறு

தொகு

இவர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் பிறந்தவர். தனது 15-வது வயதில் தேசிய பாதுகாப்பு அகாடமி (National Defence Academy) தேர்வெழுதி இந்தியக் கடற்படையில் சேர்ந்து 30 வருடங்கள் சேவையாற்றினார். தனது இளங்கலை பொறியியல் பட்டத்தை கடற்படை பொறியியல் கல்லூரியில் மின் பொறியியலில் துறையில் பெற்று, பின்னர் புதுதில்லியிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் முனைவர் பட்டத்தை மின் பொறியியல் துறையில் பெற்றார்.

இந்தியாவில் இவரது பங்கு

தொகு

இந்திய கடற்படையில் (1961-1991) பணியாற்றிய தனது 30 ஆண்டுகளில், அவர் மூன்று தேசிய ஆய்வுக்கூடங்களை நிறுவினார். 1991-ம் ஆண்டுவரை இந்தியாவில் பங்களித்த பௌல்ராஜ் இராணுவத்திற்கான சோனார்(APSOH வகை) உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றினார். இத்துடன் இந்தியாவின் முக்கிய ஆய்வுக்கூடங்களான சிஏஐஆர் மற்றும் ரோபாடிக்ஸ்(CAIR - Centre for Artifical Intelligence) , சிடாக்(CDAC - Centre for Development of Advanced Computing) மற்றும் சிஆர்எல்(CRL - Central Research Labs of Bharat Electronics) போன்றவற்றின் உருவாக்க இயக்குனராகவும் இருந்துள்ளார். பத்ம பூஷன், அதி விஷிஷித் சேவா உட்பட இந்தியாவில் (தேசிய அளவில் பல) விருதுகளையும் பதக்கங்களையும் பெற்றுள்ளார்.

தொழில்துறையில் இவ‍ரது பங்கு

தொகு

பால்ராஜ் 1998ல் ஐஓஸ்பேன் வயர்லெஸ் இன்க் என்ற ஒரு வணிக அமைப்பினை நிறுவி மிமொ(MIMO) தொழில்நுட்பத்தினை முதன் முதலில் பயன்படுத்தினார். இந்த நிறுவனம் நிலையான கம்பியில்லா அமைப்புகளுக்கான சில்லு தொகுப்புகளை உருவாக்கியது.இங்கு இவர் உருவாக்கிய தயாரிப்புகள் மிமொ(MIMO) தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவதில் இருந்த நீடித்த ஐயுறவு நீக்க உதவியது.[2] 2002ல் இன்டெல் கார்ப்பரேஷன் மூலமாக ஐஓஸ்பேன் வயர்லெஸ் இன்க் நிறுவனம் கையகப்படுத்தப்பட்டது.[3] பால்ராஜ், 2003 ல் பிசிம்(Beceem) கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை இணைந்து நிறுவினார். இந்த நிறுவனத்தின் வைமாக்ஸ் சில்லுத் தொகுப்புகள் தயாரிப்பில் தலைசிறந்து விளங்கியது. 2010ல் இந்த நிறுவனத்தை பிராட்காம் கார்ப் கைப்பற்றியது.[4]

முக்கிய கண்டுபிடிப்பு

தொகு

வியத்தகு வகையில் வயர்லெஸ் அமைப்புகளின் செயல்திறனை அதிகரிக்கும் MIMO (பல உள்ளீடு, பல வெளியீடு) என அழைக்கப்படும் ஒரு திருப்புமுனை வயர்லெஸ் தொழில்நுட்பத்தில் முன்னோடியாக விளங்குகிறார். இது நவீனகால இணைப்பில்லா தொடர்பிற்கும்(Wi-Fi) நான்காம் தலைமுறை அலைக்கற்றை(4G) பயன்பாட்டிற்கும் உறுதுணையாக உள்ளது.

விருதுகள்

தொகு
  1. மார்க்கோனி விருது - 2014[5].
  2. 2010ல் இந்திய அரசின் பத்ம பூஷன் விருது.[6]
  3. 2011ல் அலெக்சாண்டர் கிரகாம் பெல் பதக்கம் பெற்றுள்ளார்.[7]

புத்தகங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Stanford Professor A.J. Paulraj Wins the 2014 Marconi Prize". Archived from the original on 2014-04-07. பார்க்கப்பட்ட நாள் 2014-01-30.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-10. பார்க்கப்பட்ட நாள் 2014-01-30.
  3. http://investing.businessweek.com/research/stocks/private/snapshot.asp?privcapId=28997
  4. Broadcom Corporation to Acquire Beceem Communications Inc., a Leader in 4G Wireless
  5. "2014-ம் ஆண்டு மார்கோனி விருதிற்கு ஆரோக்யசாமி பௌல்ராஜ் தேர்வு". currentaffairs.gktoday.in. பார்க்கப்பட்ட நாள் 30 சனவரி 2014.
  6. Ten Scientists, Including Venky Among Padma Awardees
  7. IEEE Alexander Graham Bell Medal Recipients
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரோக்கியசாமி_பவுல்ராஜ்&oldid=3542960" இலிருந்து மீள்விக்கப்பட்டது