ஆர்த்தி மெகரா

இந்திய அரசியல்வாதி

ஆர்த்தி மெகரா (Arti Mehra) என்பவர் 2007 முதல் 2009 வரை தில்லி மாநகராட்சியின் நகரத்தந்தையாக இருந்தவர் ஆவார்.[1] இவருக்குப் பதிலாக இப்பதவியில் பிருத்வி ராஜ் ஸ்வானி நியமிக்கப்பட்டார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு தில்லியில் கௌசு காசு பகுதியின் பிரதிநிதி ஆவார். இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள நங்கலில் பிறந்தார். ஆர்த்தி மெகரா தில்லி மிராண்டா அவுசில் பட்டம் பெற்றார். அமெரிக்காவில் சந்தைப் படிப்பு படித்திருந்தார். இவர் முன்பு எம். சி. டியின் சுகாதார குழுவின் தலைவராக பணியாற்றினார்.[2]

2013 தில்லி சட்டமன்றத் தேர்தலில், மெகரா ஆம் ஆத்மி கட்சியின் சோம்நாத் பார்தியிடம் கிட்டத்தட்ட 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். காலநிலை மாற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா சார்பாகவும் ஆர்த்தி மெகரா பங்கேற்றுள்ளார்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Rajni Abbi new Mayor of Delhi". Deccan Herald. 20 April 2011.
  2. Arti Mehra set to be elected Delhi Mayor on Mon பரணிடப்பட்டது 6 ஏப்பிரல் 2012 at the வந்தவழி இயந்திரம் (Express India, 13 September 2008)
  3. "Delhi polls: Several heavyweight Cong, BJP leaders bite dust". Deccan Chronicle. 9 December 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்த்தி_மெகரா&oldid=3672321" இலிருந்து மீள்விக்கப்பட்டது