ஆர்த்தோ நைட்ரேட்டு

ஆர்த்தோ நைட்ரேட்டு (Orthonitrate) என்பது NO43- என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட நைட்ரசனின் நான்முகி வடிவ [[ஆக்சோ எதிர்மின்னயனியாகும். முதன்முதலில் 1977[1] ஆம் ஆண்டில் இவ்வயனி கண்டறியப்பட்டது. தற்பொழுது சோடியம் ஆர்த்தோநைட்ரேட்டு மற்றும் பொட்டாசியம் ஆர்த்தோ நைட்ரேட்டு என்ற இரண்டு சேர்மங்களில் மட்டும் காணப்படுவதாக அறியப்படுகிறது. உயர் வெப்பநிலை[2] மற்றும் உயர் அழுத்தத்தில் [2]நைட்ரேட்டு மற்றும் உலோக ஆக்சைடுகளை வினைபுரியச் செய்து ஆர்த்தோ நைட்ரேட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.

ஆர்த்தோ நைட்ரேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
Orthonitrate
இனங்காட்டிகள்
54991-46-7
InChI
  • InChI=1S/NO4/c2-1(3,4)5/q-3
    Key: QKSQKFHZSYXUGK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [N+]([O-])([O-])([O-])[O-]
பண்புகள்
NO43-
வாய்ப்பாட்டு எடை 78.006
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references
NaNO3 + Na2O → Na3NO4 (300°C for 3 days)[3]

வினையில் விளைகின்ற ஆர்த்தோ நைட்ரேட்டுகள் வெண்மை நிறத் தின்மமாகக் காணப்படுகின்றன. இவை ஈரப்பதம் மற்றும் கார்பன் டை ஆக்சைடு போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றன. காற்றில் பட நேர்ந்தால் சிலநிமிடங்களில் கார்பனேட்டு மற்றும் ஐதராக்சைடுகளாகச் சிதைவடைகின்றன.[1]

Na3NO4 + CO2 → NaNO3 + Na2CO3
Na3NO4 + H2O → NaNO3 + 2NaOH

ஆர்த்தோ நைட்ரேட்டு அயனிகள் நான்முகி வடிவில் N-O பிணைப்புகள் 139 பைக்கோ மீட்டர் நீளத்துடன் காணப்படுகின்றன. இக்குறுகிய நீளமானது பிணைப்பை அதிக ஆற்றலால் dπ ஆர்பிட்டால் நிலைக்கு குறைக்கின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Jansen, Martin (August 1977). "Detection of an Orthonitrate by Vibrational Spectroscopy: Na3NO4". Angewandte Chemie International Edition in English 16 (8): 534–535. doi:10.1002/anie.197705341. 
  2. 2.0 2.1 Quesada Cabrera, R.; Sella, A.; Bailey, E.; Leynaud, O.; McMillan, P.F. (April 2011). "High-pressure synthesis and structural behavior of sodium orthonitrate Na3NO4". Journal of Solid State Chemistry 184 (4): 915–920. doi:10.1016/j.jssc.2011.02.013. 
  3. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.

இவற்றையும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்த்தோ_நைட்ரேட்டு&oldid=2699280" இலிருந்து மீள்விக்கப்பட்டது