ஆர்னிதின்
ஆர்னிதின் (Ornithine) நேரடியாக டி.என்.ஏ மூலக்கூறிலிருந்து குறிமுறையீடு செய்யப்படாத, யூரியா சுழற்சியில் முக்கிய பங்கு வகிக்கும், அமினோ அமிலமாகும். யூரியா உருவாக்கத்தில் ஆர்ஜினின் மீது ஆர்ஜினினேஸ் நொதி வினை புரியும்போது ஆர்னிதின் ஒரு விளை பொருளாகக் கிடைப்பதால் ஆர்னிதின் நைட்ரசனை நீக்கப் பயன்படுத்தும் யூரியா சுழற்சியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வேதி வினையில் ஆர்னிதின் மறுசுழற்சி செய்யப்படுவதால், ஒருவகையில் இதை வினையூக்கி எனலாம். முதலில் அமோனியா கார்பமோயில் பாஸ்பேட்டாக மாற்றப்படுகிறது. இது, யூரியாவின் பாதி பகுதியாகும். பிறகு, ஆர்னிதின் கார்பமோயில் பாஸ்பேட்டால் (இறுதி பகுதியிலுள்ள நைட்ரசன் அணுவில்) யூரியாவின் கிளைப் பொருளாக மாற்றப்படுகிறது. இன்னொரு நைட்ரசன் அஸ்பார்டேட்டிலிருந்து இணைக்கப்பட்டு நைட்ரசன் நீக்கப்பட்ட ஃபியூமரேட்டும், ஆர்ஜினினும் உருவாக்கப்படுகிறது. பின்னர், ஆர்ஜினின் நீராற்பகுக்கப்பட்டு ஆர்னிதின் மற்றும் யூரியா உருவாகிறது. யூரியாவின் நைட்ரசன்கள் அமோனியா மற்றும் அஸ்பார்டேட்டிலிருந்து வருவதால் ஆர்னிதினின் நைட்ரசன் சிதைவடையாமல் உள்ளது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
L-ஆர்னிதின்
| |
வேறு பெயர்கள்
(+)-(S)-2,5-டைஅமினோ வலரிக் அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
70-26-8 | |
ChEMBL | ChEMBL446143 |
ChemSpider | 6026 |
EC number | 200-731-7 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | D08302 |
ம.பா.த | Ornithine |
பப்கெம் | 6262 |
| |
UNII | E524N2IXA3 |
பண்புகள் | |
C5H12N2O2 | |
வாய்ப்பாட்டு எடை | 132.16 கி/மோல் |
உருகுநிலை | 140 ºC |
கரையும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |