இரா. இராதாகிருட்டிணன்

தமிழ் எழுத்தாளர்
(ஆர். இராதாகிருஷ்ணன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இரா. இராதாகிருட்டிணன் (R. Radhakrishnan) என்று பொதுவாக அழைக்கப்படும் இராசகோபாலன் இராதாகிருட்டிணன், அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள இர்வின் நகரில் அமைந்துள்ள கலிபோர்னிய பல்கலைக்கழகத்தில் ஆங்கிலம் மற்றும் ஒப்பீட்டு இலக்கியப் பாடங்களின் வேந்தர் நிலையிலான பேராசிரியராகப் பணிபுரிகிறார்.[1] [2]

இராசகோபாலன் இராதாகிருட்டிணன்
பிறப்பு(1949-10-28)28 அக்டோபர் 1949
சீர்காழி, தமிழ்நாடு
காலம்21 ஆம் நூற்றாண்டு தத்துவம்
பகுதிமேற்கத்திய தத்துவம்
பள்ளிபின்காலனித்துவம், பின்நவீனத்துவம்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
டயஸ்போரிக் கலப்பு
உலகளாவிய சீரற்ற தன்மை
செல்வாக்குச் செலுத்தியோர்
  • ஜாக்சு டெர்ரிடா, எட்வர்டு சைட்டு, மாரிஸ் மெர்லியோ-பாண்டி, பிரெட்ரிக்கு நீட்சே, அன்டோனியோ கிராம்சி, மார்ட்டின் கெட்சர், டேவிட் ஹார்வி , மைக்கேல் ஃபோக்கால்டு, அட்ரியனி ரிச்சு, நியூகி வா தியாங்கோ.
செல்வாக்குக்கு உட்பட்டோர்
  • டேவிட் ஹார்வி , சூ பென், பிரெண்டா மார்சல்.

1949ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28 அன்று இவர் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சீர்காழி என்ற கிராமத்தில் பிறந்தார். ஆரம்பத்தில் சென்னையில் கல்வி கற்ற இவர் பின் நியூயார்க் நகரத்திலுள்ள பிங்காம்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[3]

அமெரிக்காவில் இராதாகிருட்டிணன் ஒரு முன்னணி பின்காலனித்துவ கோட்பாட்டாளரா௧வும் இலக்கிய விமர்சகரா௧வும் கருதப்படுகிறார். மேலும் ஒரு தமிழ் மொழிபெயர்ப்பாளரா௧வும், கவிஞராகவும், ஆங்கிலம் மற்றும் ஆங்கில இலக்கிய விமர்சனங்களில் தேர்ச்சி பெற்ற விமர்சகராகவும் விளங்குகிறார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "R. Radhakrishnan awarded SALA Distinguished Achievement Award for Outstanding Scholarship". www.humanities.uci.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-19.
  2. "R. Radhakrishnan". veethi.com. பார்க்கப்பட்ட நாள் 2021-06-19.
  3. Books, Better World. "Buy New & Used Books Online with Free Shipping". Better World Books. பார்க்கப்பட்ட நாள் 2021-06-19.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._இராதாகிருட்டிணன்&oldid=4021598" இலிருந்து மீள்விக்கப்பட்டது