ஆர். எசு. மோங்கியா

ஆர். எசு. மோங்கியா (R. S. Mongia) என்பவர் குவகாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், பஞ்சாப் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராகவும் இருந்தவர் ஆவார்.

R. S. Mongia
தலைமை நீதிபதி, குவகாத்தி உயர் நீதிமன்றம்
பதவியில்
21 செப்டம்பர் 2001 – 10 சூன் 2002
முன்னையவர்என். சி. ஜெயின்
பின்னவர்பி. பி. நவோலேகர்
தலைவர்-பஞ்சாப் மாநில மனித உரிமைகள் ஆணையம்
பதவியில்
12 நவம்பர் 2007 – 9 சூன் 2010
முன்னையவர்என். சி. ஜெயின்
பின்னவர்ஜகதீசு பல்லா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 சூன் 1940
இறப்பு21 ஆகத்து 2017[1]

தொழில்

தொகு

நீதிபதி மோங்கியா 1963ஆம் ஆண்டில் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றார். 1964ஆம் ஆண்டில் பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகச் சேர்ந்தார். 1990 சூன் 15 அன்று பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவியேற்றார்.

2001 சூன் 21 அன்று மோங்கியா குவகாத்தி உயர் நீதிமன்றத்திற்குப் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 2001 செப்டம்பர் 21 அன்று தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் 2002 சூன் 10 அன்று ஓய்வு பெற்றார்.

இதற்குப் பிறகு மோங்கியா நவம்பர் 12, 2007 அன்று பஞ்சாப் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் இப்பதவியில் சூன் 9, 2010 வரை பணியாற்றினார்.

இறப்பு

தொகு

நீண்ட நோயால் அவதிப்பட்டு வந்த மோங்கியா, 2017 ஆகத்து 21 அன்று தில்லியில் காலமானார்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._எசு._மோங்கியா&oldid=4151629" இலிருந்து மீள்விக்கப்பட்டது