ஆர். என். நாகராஜராவ்
ஸ்டில்ஸ் ஆர். என். நாகராஜராவ் என்று அழைக்கபடும் ஆர். என். நாகராஜராவ் (பிறப்பு 1909) திரை உலகிலும் பத்திரிக்கைத் துறையிலும் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிப்படக் கலைஞராக இருந்தவர். தஞ்சாவூரை பூர்வீகமாக்க் கொண்ட இவர், பிறந்த ஊர் விசாகப்பட்டினம். தந்தை ஆர். நரசிங்க ராவ். கல்வி பி.ஈ.
பணிகள்
தொகுஇவர் பொறியியல் படித்திருந்தாலும், ஒளிப்படத் தொழிலுக்கு வந்தார். துவக்கத்தில் ஒளிப்படக் கலையைப் பொழுதுபோக்காகத்தான் செய்துவந்தார். பின் அதுவே முழுத் தொழிலாகிவிட்டது. இந்து ஆங்கிலப் பத்திரிக்கையில் ஆர்ட் டைரக்டரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். பின் சுதேசமித்திரனில் 20 ஆண்டுகள் தொடர்ந்து பணி. அங்கிருந்த போதே கல்கி, ஆனந்த விகடன் போன்ற இதழ்களுக்கு ஒளிப்படம் எடுத்துவந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட மொழிகளில் ஆயிரம் திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். முதல் படம் 'மதனகாமராஜன்' கடைசிப் படம் 'காக்கிச்சட்டை' நடிகர் திலகம் 'சிவாஜி கணேசனுக்கு' அவரின் முதல் படமான 'பராசக்தி' படத்திற்காக 'மேக்கப் டெஸ்ட்' எடுப்பதற்காக ஒளிப்படம் எடுத்தவர் இவர்தான். எம். ஜி. ஆர் இரட்டை விரல் காட்டுவது போல் காட்டவைத்து முதன்முதலில் ஒளிப்படம் எடுத்தது இவர்தான். எம்.ஜி.ஆர் முதல்வராகப் பதவியேற்றபோது தலைமைச் செயலகத்தில் அவர் நாற்காலியில் அமரும் காட்சியைப் படம் பிடிக்கப் பலர் காத்திருக்க, இவர்தான் முதல் படம் எடுக்க வேண்டுமென்று எம்.ஜி.ஆர். விரும்பி, இவரை அழைத்து வரச்செய்து, பிரத்தியேகமாகப் படம் பிடிக்கவைத்தார்.[1] ஜவகர்லால்நேரு, சரோஜினிநாயுடு, சத்தியமூர்த்தி, காமராஜர், போன்றோர்களை இவர் ஒளிப்படம் எடுத்துள்ளார்.
விருதுகள்
தொகுஇவரின் பணிகளைப் பாராட்டி, தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருது வழங்கிப் பாராட்டியுள்ளது[2]
குறிப்புகள்
தொகு- ↑ "எம்ஜிஆர் 100". தி இந்து (தமிழ்). 17 சூன் 2016. பார்க்கப்பட்ட நாள் 17 சூன் 2016.
- ↑ தினமணி தீபாவளி மலர், 1999, தலைசிறந்த தமிழர்கள். பக்கம்119