ஆர். கே. சிங் பட்டேல்
ஆர். கே. சிங் பட்டேல் (R. K. Singh Patel) என்பவர் இந்திய அரசியல்வாதியும் உத்தரபிரதேசத்தின் 17வது சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் உத்தரப்பிரதேசத்தின் மாணிக்பூர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். பட்டேல் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக உள்ளார். இதற்கு முன்னர் இவர் இந்தியாவின் 15வது மக்களவை உறுப்பினராகவும் இருந்தார். இவர் இந்தியாவின் சித்ரக்கூட-பாந்தா மக்களவைத் தொகுதியினைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். முன்னதாக இவர் சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினராக இருந்தார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பொதுத்தேர்தலில் பாந்தா மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆர். கே. சிங் பட்டேல் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2019 | |
முன்னையவர் | பைரோன் பிரசாத் மிசுரா |
தொகுதி | பாந்தா |
பதவியில் மார்ச் 2017 – மே 2019 | |
முன்னையவர் | சந்திரா பான் |
தொகுதி | மாணிக்பூர், (உத்தரப் பிரதேசம்) |
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2009–2014 | |
முன்னையவர் | சியாம் சரண் குப்தா |
பின்னவர் | பைரோன் பிரசாத் மிசுரா |
தொகுதி | பாந்தா, (உத்தரப் பிரதேசம்) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 3 சூலை 1959[1] பாலாபூர், கால்சா, சித்திரக்கூட மாவட்டம்[1] |
குடியுரிமை | இந்தியர் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி[1] |
துணைவர் | சாந்தி தேவி பட்டேல்[1] |
பிள்ளைகள் | 03 மகன்கள் & 01 மகள் .[1] |
வாழிடம்(s) | சித்திரக்கூட மாவட்டம், உத்தரப் பிரதேசம் & புது தில்லி.[1] |
முன்னாள் கல்லூரி | அலகாபாத் பல்கலைக்கழகம், உத்தரப் பிரதேசம் |
வேலை | விவசாயம் & அரசியல்வாதி |
செயற்குழு | சுகாதாரம் மற்றும் குடும்ப நல உறுப்பினர்) தொடருந்து கூட்டமைப்பு உறுப்பினர் |
கல்வி மற்றும் பின்னணி
தொகுபட்டேல் உத்தரபிரதேசத்தின் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றவர். அரசியலில் சேருவதற்கு முன்பு தொழிலில் விவசாயம் செய்தவர்.
வகித்த பதவிகள்
தொகு# | முதல் | வரை | பதவி |
---|---|---|---|
01 | 1996 | 2007 | உத்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர் (இரண்டு முறை) |
02 | 1996 | 1997 | மாநில அமைச்சர், உத்தரப்பிரதேச அரசு |
03 | 2002 | 2003 | மாநில அமைச்சர், உத்தரபிரதேச அரசு |
04 | 2009 | 2014 | 15வது மக்களவை உறுப்பினர் |
05 | 2009 | 2014 | உறுப்பினர், சுகாதாரம் மற்றும் குடும்ப நலக் குழு |
06 | 2010 | 2014 | உறுப்பினர், ரயில்வே மாநாட்டு குழு |
08 | 2019 | தேதி | 17வது மக்களவை உறுப்பினர் |
மேலும் பார்க்கவும்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Lok Sabha Profile". Govt of India. 2009 இம் மூலத்தில் இருந்து 2013-02-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130201155610/http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4331.