ஆர். நாகரத்தினம்மாள்

இந்திய நாடக ஆளுமை

ஆர். நாகரத்னம்மாள் (R. Nagarathnamma) (1926–2012) ஓர் இந்திய நாடக ஆளுமையும், பெங்களூரை தளமாகக் கொண்ட அனைத்து மகளிர் நாடகக் குழுவான ஸ்திரீ என்ற நாடக மன்றத்தின் நிறுவனர் ஆவார். இவர் சங்கீத நாடக அகாதமி விருது பெற்றுள்ளார்.[1] இந்திய அரசால் நான்காவது மிக உயர்ந்த இந்திய குடிமகன் விருதான பத்மசிறீ விருது 2012 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது.[2]

ஆர். நாகரத்னம்மாள்
The President, Smt. Pratibha Devisingh Patil presenting the Padma Shri Award to Smt. R. Nagarathnamma, at an Investiture Ceremony-II, at Rashtrapati Bhavan, in New Delhi on April 04, 2012.jpg
நாகரத்னம்மாள் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டில் அவர்களிடம் பத்மசிறீ விருதை பெறுகிறார், 2012
பிறப்பு1926
மைசூர், கருநாடகம், இந்தியா
இறப்பு6 அக்டோபர் 2012
பெங்களூர்
பணிநாடக ஆளுமை
செயற்பாட்டுக்
காலம்
1938 முதல்
பிள்ளைகள்இரு மகள்களும், ஒரு மகனும்
விருதுகள்பத்மசிறீ
சங்கீத நாடக அகாதமி விருது
ராஜ்யோத்சவ பிரசாஸ்தி விரு
தாகூர் ரத்னா விருது
குப்பி வீரண்ணா விருது
வலைத்தளம்
Official web site

சுயசரிதைதொகு

நாகரத்னம்மாள் 1926 இல்[3] மிதமான நிதி வசதி கொண்ட குடும்பத்தில், தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவின்[4] மைசூரில்[5] பிறந்தார். தனது 12 வயதில் தொழில்முறை நாடகங்களில் பணியாற்றத் தொடங்கினார்.[6] சிறீ சாமூண்டீசுவரி நாடக சபா, குப்பி வீரண்ணா நடத்தி வந்த குப்பி நிறுவனம், இரண்ணையாவின் மித்ரா மண்டலி, எச்எல்என் சிம்ஹா போன்ற குழுக்களுடன் பணியாற்றினார்.[4][7] பின்னர், 1958ஆம் ஆண்டில், இவர் ஸ்திரீ நாடக மண்டலியை நிறுவினார்.[5] இது கர்நாடகாவில் தொடங்கப்பட்ட முதல் அனைத்து மகளிர் நாடகக் குழு என்று அறிவிக்கப்பட்டது.[4] [6] அதில் இவர் ஒரு நடிகையாகவும், நாடகங்களின் இயக்குநராகவும் இருந்தார். [3][7]

நாகரத்னம்மாள் ஆண் கதாபாத்திரங்களை, குறிப்பாக புராணக் கதாபாத்திரங்களை சித்தரிப்பதற்காக அறியப்படுகிறார்.[8] கம்சன், கிருட்டிணன், இராவணன், துரியோதனன், வீமன் போன்ற குறிப்பிடத்தக்க நடிப்பால் இவர் பாராட்டப்படுகிறார்.[5][4][6][7] இவர் தனது குழுவுடன் இந்தியாவில் பல மாநிலங்களில் பயணம் செய்துள்ளார். கிருஷ்ண கருடி இவரது முக்கிய நாடகங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.[4] இவர் 15 கன்னடப் படங்களிலும், தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[6] கமனபில்லு, பரசங்கடா ஜென்டிதிம்மா, ரோசாப்பூ ரவிக்கைக்காரி ஆகியவை குறிப்பிடத்தக்கவை.[4]

இறப்புதொகு

நாகரத்னம்மாள் 6 அக்டோபர் 2012 அன்று,[5] இறந்தார்.[6]

விருதுகளும் அங்கீகாரமும்தொகு

நாகரத்னம்மாள் தாகூர் ரத்னா விருது[5], குப்பி வீரண்ணா விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.[6] கர்நாடக அரசின் இரண்டாவது மிக உயர்ந்த விருதான ராஜ்யோத்சவ பிரசாஸ்தி விருதை வழங்கி கௌரவிக்கப்பட்டார்.[6] இவர் 1992இல் சங்கீத நாடக அகாதமி விருதைப் பெற்றார்.[1][6][7] 2012ஆம் ஆண்டில், இந்திய அரசு நான்காவது மிக உயர்ந்த இந்திய குடிமகன் விருதுக்கான குடியரசு தின கௌரவப் பட்டியலில் இவரைச் சேர்த்து பத்மஸ்ரீ விருதை வழங்கியது.[2] இரவீந்திரநாத் தாகூரின் 150வது பிறந்தநாளை நினைவுகூரும் நிகழ்வில் 2012ஆம் ஆண்டில் இவருக்கு சங்கீத நாடக அகாதமி தாகூர் ரத்னா வழங்கப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்தொகு

சான்றுகள்தொகு

  1. 1.0 1.1 "SNA". Sangeet Natak Akademi. 2014. 30 May 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 November 2014 அன்று பார்க்கப்பட்டது.
  2. 2.0 2.1 "Padma Shri" (PDF). Padma Shri. 2014. 15 நவம்பர் 2014 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 11 November 2014 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Unknown parameter |https://www.webcitation.org/6U68ulwpb?url= ignored (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  3. 3.0 3.1 Ananda Lal (2004). The Oxford Companion to Indian Theatre. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780195644463. http://www.oxfordreference.com/view/10.1093/acref/9780195644463.001.0001/acref-9780195644463-e-0390. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 "The Hindu". 8 October 2012. 1 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 "Indian Express". Indian Express. 8 October 2012. 1 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 6.7 "India Glitz". India Glitz. 8 October 2012. 1 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
  7. 7.0 7.1 7.2 7.3 "One India". One India. 7 October 2012. 1 December 2014 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Daily Pioneer". Daily Pioneer. 10 June 2013. 1 December 2014 அன்று பார்க்கப்பட்டது.

மேலும் படிக்கதொகு

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._நாகரத்தினம்மாள்&oldid=3342877" இருந்து மீள்விக்கப்பட்டது