ஆர். பி. படங்கர்

ஆர். பி. படங்கர் (R. B. Patankar) என்று அழைக்கப்படும் ராஜராம் பால்சந்திர படங்கர் (Rajaram Bhalchandra Patankar) (1 ஜனவரி 1927 - 24 மே 2004) மராத்தி விமர்சகரும் நவீன அழகியல் அறிஞரும் ஆவார். அவர் மராத்தி மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் எழுதினார். சவுந்தர்ய மீமன்சா (1974) என்ற தனது அறிவார்ந்த படைப்பிற்காக 1975 ஆம் ஆண்டில் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார்.

வாழ்க்கை வரலாறு தொகு

படங்கர் 1927 ஆம் ஆண்டில் சனவரி 1 ஆம் நாள் பிறந்தார். மகாராட்டிராவில், புனே பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டத்தைப் படித்தார். இலக்கியத்தில் தகவல் தொடர்பு என்ற தலைப்பில் தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்து ஆய்வியல் நிறைஞர் (முனைவர்) பட்டத்தைப் பெற்றார். 1951-1964 காலகட்டத்தில் மகாராட்டிரா மற்றும் குஜராத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் கற்பித்தார். 1964 ஆம் ஆண்டில், அவர் பம்பாய் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் வாசகராகச் சேர்ந்தார், மேலும் 1978 ஆம் ஆண்டில் துறைத் தலைவரானார். 1986 வரை அவர் அங்கு அழகியல் கோட்பாடு மற்றும் விமர்சனப் பாங்கு ஆகியவற்றைக் கற்பித்தார். அவர் 24 மே 2004 அன்று இறந்தார்.   [ மேற்கோள் தேவை ]

படைப்புகள் தொகு

படங்கர் மராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் எழுதினார். மராத்தி இலக்கியம் மற்றும் விமர்சனம் தொடர்பான அவரது முக்கிய படைப்புகள் மராத்தியில் வெளியிடப்பட்டன.[1] அழகியல் மற்றும் இலக்கிய விமர்சனம் என்ற இவரது முதல் புத்தகம் 1969 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. சவுந்தர்ய மீமன்சா (1974), குரோகெசெ சவுந்தர்ய சாஸ்திரம்:ஏக் அப்யாஸ் (1974) மற்றும் காஞ்சே சவுந்தர்ய மீமன்சா(1977) ஆகிய தலைப்புகளில் மராத்தியில் மூன்று புத்தகங்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டன.[2] மராத்தி இலக்கியத்தில் நிலைத்திருக்கக்கூடிய சிறப்பான படைப்புகளாகக் கருதப்படும் சவுந்தர்யா மீமன்சா, பிளேட்டோ, அரிசுட்டாட்டில் முதல் லுட்விக் விட்கென்ஸ்டைன் மற்றும் சார்த்தர் வரையிலான மேற்கத்திய அழகியலையும், சமஸ்கிருத உரையிலிருந்து நவீன மராத்தி விமர்சகர்கள் வரையிலான இந்திய பாரம்பரியத்தையும் கையாள்கிறது.[3]

இலக்கியத்திற்கு ஷர்சந்திர சந்த்திபோத்தின் பங்களிப்பை மதிப்பிடுகின்ற முக்திபோதஞ்சே சாகித்யாவை (1986) எழுதினார். படங்கர் 'ஏரியல்' என்ற புனைப்பெயரில் சில கவிதைகளையும் வெளியிட்டார். பதங்கரஞ்சி சவுந்தர்யா மீமன்சா (1977) என்ற பதங்கரின் கோட்பாடுகள் மற்றும் அழகியலின் கொள்கைகள் குறித்து பிரபாகர் பத்யே ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.

விருது தொகு

படங்கர் தனது சவுந்தர்ய மீமன்சா புத்தகத்திற்காக 1957 ஆம் ஆண்டில் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றார்.

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._பி._படங்கர்&oldid=3747739" இலிருந்து மீள்விக்கப்பட்டது