ஆர். லீலா தேவி

மலையாள எழுத்தாளர்



டாக்டர். லீலா தேவி (R. Leela Devi, 13 பிப்ரவரி 1932 - 19 மே 1998) ஒரு இந்திய எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் மற்றும் ஆசிரியர் ஆவார். ஆங்கிலம், மலையாளம் மற்றும் சமஸ்கிருத ஆகிய மொழிகளில் நூல்கள் எழுதியுள்ளார். இவர் கேரள மாநிலத்திலிருந்து வந்தவர்.

ஆர். லீலா தேவி
ஆர். லீலா தேவி
பிறப்பு பிப்ரவரி 13, 1932
பாலை, கேரளா, இந்தியா
இறப்பு மே 19, 1998
கோட்டயம், கேரளா, இந்தியா

தொழில்

தொகு

எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்

தொகு

லீலா தேவி அவரது கணவர் வி. பாலகிருஷ்ணனுடன் சேர்ந்து முந்நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவரது பெரும்பாலான நூல்கள் ஆங்கிலம், மலையாள மொழிகளில் எழுதப்பட்டவையாகும். அவற்றுள் சமஸ்கிருதம், ஆங்கிலம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களும் அடங்கும்.

பௌத்தம்பௌத்த மதம் பற்றி சமஸ்கிருதத்தில் குறிப்பிடப்பட்ட ஒரே நாடகம் நாகநாதம் (ஹர்ஷவர்தனவின் நாகநந்தம்) நூலின் இவரது மொழிபெயர்ப்பு பெரும் விமர்சனத்துக்காளானது. மார்த்தாண்டவர்மா, நாராயணீயம், விதுர் கீதா (மகாபாரதம்) ஆகியவற்றையும் மொழிபெயர்த்தார். இந்திய விடுதலை இயக்கத்தில் எழுத்தாளர்களின் பங்களிப்பு புத்தகத்தின் ஆங்கில மொழிப்பிரிவுக்கு பங்களித்துள்ளார்.

நாடகம்

தொகு

அவரது ”புதிய ஹாரிசன் (New Horizon)”, பஞ்சாயத்துராஜ் பொருள் பற்றிய நாடகம் ஆகும். சந்து மேனனின் ”இந்துலேகா” என்ற நாடகத்தை ஆங்கிலத்தில் ”கிரெசெண்ட் மூன் ” என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்

தொகு
  • பிரதிநிதித்துவத்திலிருந்து பங்கேற்பாளனாய் - பஞ்சாயத்துராஜ் பற்றிய முதல் புத்தகம்-ஸ்ரீ சத்குரு பப்ளிகேஷன்ஸ் (தில்லி)
  • சரோஜினி நாயுடு - வாழ்க்கை வரலாறு
  • ப்ளூ ஜாஸ்மின் - கற்பனை நாவல்
  • குங்குமப்பூ - காஷ்மீரின் தொன்மங்கள் மற்றும் புனைவுகள் பற்றி ஒரு நாவல்
  • மன்னத்து பத்மநாபனும் கேரளாவில் நாயர்களின் மறுமலர்ச்சியும் - நாயர்களின் மறுமலர்ச்சி மற்றும் அவர்களின் வரலாறு
  • கேரள வரலாற்றில் ஒரு புராணம்
  • மலையாள இலக்கியத்தின் வரலாறு
  • கேரள வரலாறு[1]
  • மலையாள இலக்கியத்தில் ஆங்கிலத்தின் செல்வாக்கு
  • இந்திய தேசிய காங்கிரஸ் - நூறு ஆண்டுகள் - இந்திய தேசிய காங்கிரசின் வரலாறு, காங்கிரஸ் நூற்றாண்டுக்காக வெளியிடப்பட்டது.
  • ஆங்கில மொழி கற்பிக்கும் ஒரு கையேடு
  • நெறிமுறைகள் (உலகின் வெவ்வேறு மதங்களில்) - ஸ்ரீ சத்குரு பப்ளிகேஷன்ஸ் (தில்லி)
  • வேத கடவுள்கள் மற்றும் சில ஹிம்ஸ் - ஸ்ரீ சத்குரு பப்ளிகேஷன்ஸ் (தில்லி)
  • விதுர கீதா - உரை & ஆங்கில மொழிபெயர்ப்பு - ஸ்ரீ சத்குரு பப்ளிகேஷன்ஸ் (தில்லி)
  • ஹர்ஷவர்த்தனாவின் நாகநந்தம் - ஸ்ரீ சத்குரு பப்ளிகேஷன்ஸ் (தில்லி)

மேற்கோள்கள்

தொகு
  1. "Devi Dr R Leela - AbeBooks". www.abebooks.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-08-13.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
லீலா தேவி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._லீலா_தேவி&oldid=3935400" இலிருந்து மீள்விக்கப்பட்டது