ஆலத்தூர் (தஞ்சாவூர்)

ஆலத்தூர் (Alathur) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். ஆலத்தூர் கிராமம் சோழநாட்டின் முசுகுந்தநாட்டின் ஒரு பகுதி ஆகும். இது பட்டுக்கோட்டை - மன்னார்குடி சாலையில் சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில், சேதுபாவாச்சத்திரம் சாலை எனப்படும் மாநில நெடுஞ்சாலையின் (மா. நெ. 146) நன்கு இணைக்கப்பட்ட சாலையுடன் அமைந்துள்ளது. பட்டுக்கோட்டை வட்டத்தில் தாமரங்கோட்டை மற்றும் தம்பிக்கோட்டைக்கு அடுத்தபடியாக இது மூன்றாவது பெரிய கிராமமாகும். ஆலத்தூர் ஒரு விவசாய சமூகம், வணிக சந்தை மற்றும் மையங்கள் நிறைந்த பகுதியாகும்.[1]

ஆலத்தூர்
Alathur
கிராமம்
ஆலத்தூர் Alathur is located in தமிழ் நாடு
ஆலத்தூர் Alathur
ஆலத்தூர்
Alathur
தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆலத்தூர் Alathur is located in இந்தியா
ஆலத்தூர் Alathur
ஆலத்தூர்
Alathur
ஆலத்தூர்
Alathur (இந்தியா)
ஆள்கூறுகள்: 10°29′31″N 79°20′53″E / 10.492°N 79.348°E / 10.492; 79.348
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தஞ்சாவூர்
அரசு
 • வகைUnicameral
பரப்பளவு
 • மொத்தம்8.2 km2 (3.2 sq mi)
 • பரப்பளவு தரவரிசை4
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்4,733
 • தரவரிசை8
 • அடர்த்தி580/km2 (1,500/sq mi)
மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
614901
Telephone code04373
வாகனப் பதிவுTN 49

நிர்வாகம்

தொகு
  • ஊராட்சி கிராமங்கள்: ஆலத்தூர்
  • வருவாய் கிராமங்கள்:

மக்கள்தொகை

தொகு

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஆலத்தூரில் 2163 ஆண்கள், 2570 பெண்கள் மற்றும் 475 குழந்தைகள் என மொத்தம் 4733 பேர் உள்ளனர். இக்கிராமத்தின் எழுத்தறிவு விகிதம் 77.05 சதவீதம்.[2]

நிலவியல்

தொகு

ஆலத்தூர் கிராமம், ஆலத்தூர் மற்றும் மகாதேவபுரம் ஆகிய இரண்டு பகுதிகள் இணைந்து உருவாக்கப்பட்டது. இது மதுக்கூர், ஆலம்பள்ளம், செம்பலூர், முள்ளூர் பட்டிக்காடு, தளிக்கோட்டை, புலவஞ்சி, ஆம்பலாப்பட்டு மற்றும் திட்டக்குடி ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. ஆலத்தூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் மிகவும் வளர்ச்சியடைந்த கிராமம்.

கல்லணைக் கால்வாயின் (காவிரி ஆற்றிலிருந்து வரும் கால்வாய்) ஒரு பகுதி ஆலத்தூர் நகரின் மையப்பகுதி வழியாகச் செல்கிறது. இது புதுக்குளம், புது ஏரி, வீரனார் குளம், சிவன் கோவில் குளம், ஓட்டை, நாரப்பனை போன்ற நீர்த்தேக்கப் பகுதிகள் மற்றும் நீர் சேமிப்பு பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் நெல், தென்னை பண்ணைகள், கரும்பு போன்றவை பாசன வசதியினைப் பெறுகின்றது.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Alathur". பார்க்கப்பட்ட நாள் 2010-12-06.
  2. "Alathur Population - Thanjavur, Tamil Nadu". பார்க்கப்பட்ட நாள் 2015-02-12. Alathur got best village award seven times. the years are 2001,2007,2009,2010,2012,2014,2015
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலத்தூர்_(தஞ்சாவூர்)&oldid=3780624" இலிருந்து மீள்விக்கப்பட்டது