ஆலம்பாடி

தருமபுரி மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

ஆலம்பாடி (Alambadi) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்துக்கு உட்பட்ட ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] இது வேடகட்டமடுவு ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

ஆலம்பாடி
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்தருமபுரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
636906

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தருமபுரியிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவிலும், அரூரில் இருந்து 23 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°07'26.3"N 78°36'50.4"E[2]ஆகும்.

மக்கள் வகைப்பாடு

தொகு

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 291 குடும்பங்கள் வசிக்கின்றன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 1,094 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 511 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 583 என்றும் உள்ளது.[3]

மேற்கோள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலம்பாடி&oldid=3600706" இலிருந்து மீள்விக்கப்பட்டது