ஆல்டசு அக்சுலி
ஆல்டசு லியோனார்டு அக்சுலி(Aldous Leonard Huxley) (26 சூலை 1894 – 22 நவம்பர் 1963) ஒரு ஆங்கில புதின எழுத்தாளரும், மெய்யியலாளரும் ஆவார்.[1][2][3][4] மேலும் அக்சுலி குடும்பத்தின் முக்கிய நபரும் ஆவார். இவர் ஆங்கில இலக்கியத்திலான பட்டப்படிப்பை மேதகைமையுடன் கூடிய முதல் வகுப்பில் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தின் பேலியால் கல்லூரியில் முடித்தார்.
ஆல்டசு அக்சுலி | |
---|---|
1954 ஆம் ஆண்டில் அக்சுலி | |
பிறப்பு | ஆல்டசு லியோனார்டு அக்சுலி 26 சூலை 1894 கோடால்மிங், சர்ரே, இங்கிலாந்து |
இறப்பு | 22 நவம்பர் 1963 லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி, கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் | (அகவை 69)
தொழில் | எழுத்தாளர், புதின ஆசிரியர் |
கல்வி | ஈடன் கல்லூரி |
கல்வி நிலையம் | பேலியால் கல்லூரி, ஆக்சுபோர்டு |
குறிப்பிடத்தக்க படைப்புகள் |
|
பிள்ளைகள் | மேத்யூ அக்சுலி |
கையொப்பம் | |
இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட புத்தகங்களின் ஆசிரியராவார்.[5][6] இவர் எழுதிய புதினங்களுக்காக நன்கறியப்பட்டவர் (பிரேவ் நியூ வேர்ல்டு, பிறழ்ந்த உலகின் பின்னணியைக் கொண்டு எழுதப்பட்டது); டோர்சு ஆப் பெர்செப்சன் என்ற இவரது புனைவுக் கதையல்லாத நூலில், உளமாற்றியாகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை எடுத்தபோது தனக்கு நேர்ந்த அனுபவத்தை நினைவு கூர்கிறார்; இவரது அதிக வீச்சைக் கொண்ட கட்டுரைகளுக்காகவும் இவர் புகழ் பெற்றவராவார். இவரது தொழில் வாழ்வின் தொடக்க காலத்தில், அக்சுலி சிறுகதைகள் மற்றும் கவிதைகளை வெளியிட்டார். மேலும், ஆக்சுபோர்டு கவிதை என்ற இலக்கிய பருவ இதழையும் வெளியியட்டார். இவர் பயண நூல்கள், திரைக்கதைகள், அங்கதங்கள் ஆகியவை எழுதுவதையும் தொடர்ந்தார். அவர் தனது பிற்கால வாழ்க்கையை அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 1937 முதல் தனது இறப்பு வரைத் தொடர்ந்தார்.
அக்சுலி மனிதவியலாளரும் அமைதியை விரும்புபவரும் ஆவார். அவர் ஆன்மீக கருத்தியல்களான ஆன்மீக உளவியல் மற்றும் உள்ளுணர்வு மெய்யியல் போன்றவற்றிலும் அதிலும் குறிப்பாக சர்வமயவாதத்திலும் நாட்டமுடையவராக இருந்தார்.[7][8][9] அவருடைய வாழ்வின் இறுதிக்காலத்தில், அக்சுலி அவர் காலத்தில் வாழ்ந்த முன்னணி அறிஞராகப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டார்.[10] இலக்கியத்திற்கான நோபல் பரிசிற்காக ஏழு முறை பரிந்துரைக்கப்பட்டார்.[11] 1962 ஆம் ஆண்டில், தனது இறப்பிற்கு முந்தைய ஆண்டில் இலக்கியத்தின் துணைவன் என்ற விருதிற்கு இராயல் இலக்கியச் சங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[12]
தொடக்க கால வாழ்க்கை
தொகுஅக்சுலி 1894 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள சர்ரேயில் உள்ள கோல்டாமிங்கில் பிறந்தார். இவர், எழுத்தாளர் மற்றும் பள்ளி ஆசிரியராக இருந்த லியோனார்டு அக்சுலி (கார்ன்ஹில் என்ற செய்தி இதழின் தொகுப்பாசிரியர்) என்பவரின் மகனாவார்.[13] அக்சுலியின் தாயார் ஜுலியா அர்னால்ட் என்பவராவார். ஜுலியா, கவிஞர் மற்றும் விமர்சகர் மேத்யு அர்னால்ட் என்பவரின் மருமகளும் மேரி அகசுதா வார்ட் என்பவரின் சகோதரியும் ஆவார். ஆல்டசு அக்சுலி, தாமசு என்றி அக்சுலி என்ற விலங்கியல் அறிஞரின் பேரனும் ஆவார். அக்சுலியின் கல்வி தனது தந்தையாரின் முழு ஆயத்த நிலையில் இருந்த தாவரவியல் ஆய்வுக்கூடத்தில் தொடங்கியது.[14][15] பின்னர் அவர் கோடால்மிங் அருகில் உள்ள மலைப்புற பள்ளி ஒன்றில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் தனது தாயார் வழியாகவே கற்றுக்கொடுக்கப்பட்டார். அவரது அன்னையின் உடல் நலம் சீரற்ற நிலையை அடையும் வரை இது தொடர்ந்தது. ஹில்சைடு பள்ளியைத் தொடர்ந்து ஈடன் கல்லுாரிக்குச் சென்றார். ஆல்டசுக்கு 14 வயதாக இருந்த போது 1908 ஆம் ஆண்டில் ஆல்டசின் தாயார் இறந்தார். அவர் 1916 ஆம் ஆண்டில் தனது கவிதைகளைத் தொகுத்து தி பர்னிங் வீல் (எரியும் சக்கரம்) என்ற தலைப்பிலான புத்தகத்தை வெளியிட்டார். 1919 ஆம் ஆண்டில் ஆல்டசு அக்சுலி மரியா நிசு என்பவரை மணந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Watt, Donald, ed. (1975). Aldous Huxley. Routledge. p. 366. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-15915-6. பார்க்கப்பட்ட நாள் 10 April 2016.
Inge's agreement with Huxley on several essential points indicates the respect Huxley's position commanded from some important philosophers … And now we have a book by Aldous Huxley, duly labelled The Perennial Philosophy. … He is now quite definitely a mystical philosopher.
- ↑ Sion, Ronald T. (2010). Aldous Huxley and the Search for Meaning: A Study of the Eleven Novels. McFarland & Company, Inc. p. 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7864-4746-6. பார்க்கப்பட்ட நாள் 10 April 2016.
Aldous Huxley, as a writer of fiction in the 20th century, willingly assumes the role of a modern philosopher-king or literary prophet by examining the essence of what it means to be human in the modern age. … Huxley was a prolific genius who was always searching throughout his life for an understanding of self and one's place within the universe.
- ↑ Reiff, Raychel Haugrud (2010). Aldous Huxley: Brave New World. Marshall Cavendish Corporation. p. 7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7614-4278-3.
He was also a philosopher, mystic, social prophet, political thinker, and world traveler who had a detailed knowledge of music, medicine, science, technology, history, literature and Eastern religions.
- ↑ Sawyer, Dana (2002). Aldous Huxley: A Biography. The Crossroad Publishing Company. p. 187. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8245-1987-2. பார்க்கப்பட்ட நாள் 10 April 2016.
Huxley was a philosopher but his viewpoint was not determined by the intellect alone. He believed the rational mind could only speculate about truth and never find it directly.
- ↑ Raychel Haugrud Reiff, Aldous Huxley: Brave New World, Marshall Cavendish (2009), p. 101
- ↑ Dana Sawyer in M. Keith Booker (ed.), Encyclopedia of Literature and Politics: H-R, Greenwood Publishing Group (2005), p. 359
- ↑ Thody, Philipe (1973). Huxley: A Biographical Introduction. Scribner. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-289-70188-1.
- ↑ David K. Dunaway (1995). Aldous Huxley Recollected: An Oral History. Rowman Altamira. p. 90. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7619-9065-9.
- ↑ Roy 2003.
- ↑ Thody, Philipe (1973)
- ↑ "Nomination Database: Aldous Huxley". Nobel Prize.org. Retrieved 19 March 2015
- ↑ "Companions of Literature" பரணிடப்பட்டது 2 சனவரி 2015 at the வந்தவழி இயந்திரம். Royal Society of Literature. Retrieved 5 January 2015
- ↑ "Cornhill Magazine". National Library of Scotland. Archived from the original on 7 March 2016. பார்க்கப்பட்ட நாள் 24 April 2016.
- ↑ James Hull (2004). Aldous Huxley, Representative Man. LIT Verlag Münster. p. 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-8258-7663-0.
- ↑ M.C. Rintoul (5 March 2014). Dictionary of Real People and Places in Fiction. Taylor & Francis. p. 509. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-136-11940-8.